நெஞ்சோடு கலந்திடு – பகுதி 26

“ஏதோ என் மேல இருந்த ஆசைல.. இப்படி எல்லாம் பண்ணிட்டான்..!! மத்தபடி அவன் ரொம்ப நல்லவன்.. யாருக்கும் எந்த கெடுதலும் நெனைக்க மாட்டான்..!!”

“ம்ம்.. சர்ட்டிபிகேட்லாம் பலமா இருக்குது.. ரொம்பதான் அவன் மேல நம்பிக்கை போல..?”

“அப்டிலாம் இல்ல.. அதான்.. நான் அவன் மேல வச்சிருந்த நம்பிக்கையை எல்லாம்.. ஒட்டுமொத்தமா குழி தோண்டி புதைச்சுட்டானே..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“அப்புறமும் ஏன் இப்படி அவனுக்காக உருகுற..? நீ உருகுறதை பாத்தா.. நாளைக்கே அவன் காலுல விழுந்து.. நீ திட்டுனதுக்காக மன்னிப்பு கேட்டாலும் கேட்ப போலருக்கு..!!”

“நோ நோ..!! அப்டிலாம் என்னை தப்பா நெனச்சுடாதீங்க.. நான் ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டன்னா.. ஜென்மத்துக்கும் அதுதான்..!! அவன் கூட பேசுறது இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்.. இனி எப்போவும் பேச மாட்டேன்.. என்னை பொறுத்தவரை.. எனக்கும், அசோக்குக்கும் எல்லாம் முடிஞ்சு போச்சு..!!”

திவ்யா அப்படி உறுதியான குரலில் சொல்லவும், திவாகரின் முகம் இப்போது ஒருவித மலர்ச்சிக்கு போனது. மீண்டும் அவனது உதட்டில் அந்த வசீகர புன்னகை..!!

ஆர்டர் செய்த ஐட்டங்கள் டேபிளுக்கு வந்து சேர்ந்தன. இருவரும் அமைதியாக சாப்பிட்டார்கள். ஒரு பத்து நிமிடங்கள்..!! எல்லாம் சாப்பிட்டு முடிக்கும் தருவாயில்தான், திவ்யாவின் துப்பட்டாவில் சாட் மசாலா சிந்தியது. அதை வாஷ் செய்வதற்காக கை கழுவும் இடத்துக்கு சென்றாள். துப்பாட்டாவின் கறையை நீர் கொண்டு துடைத்தாள். ஓரளவு கறை நீங்கி சுத்தமானதும் திருப்தியானாள். முகத்தையும் நீர் வாரி இறைத்து கழுவி கொண்டாள்.

டிஷ்யூ பேப்பர் உருவி நீர் வழிந்த முகத்தை துடைத்தவாறே நிமிர்ந்தபோதுதான் அதை கவனித்தாள். அவளுக்கு எதிரே இருந்த கண்ணாடி, அவளுக்கு பின்புறம் தூரமாக அமர்ந்திருந்த திவாகரை காட்டியது. தன் செல்போனில் யாரிடமோ சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். ஓரிரு வினாடிகள் அதை கவனித்தவள் அப்புறம் இயல்பாக முகத்தை துடைத்துக் கொண்டு, அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை நோக்கி நடந்தாள்.

“வாஷ் பண்ணியாச்சா..??” திவாகர் காலை கட் செய்தவாறே கேட்டான்.

“ம்ம்..”

என்றவாறே திவ்யா அவனுக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அவள் அமர்ந்ததுமே அவளுடைய தோள் மீது கைபோட்டு, திவாகர் அவளை தன்னோடு இறுகிக் கொண்டான். திவ்யா அதை எதிர்பார்க்கவில்லை. அவன் அந்த மாதிரி திவ்யாவிடம் நடந்துகொள்வது இதுவே முதல்முறை. திவ்யாவுக்கு ஏனோ அவனுடைய செய்கை பிடிக்கவில்லை. முகத்தை சுளித்தாள். அவஸ்தையாக நெளிந்தாள்.

“எ..என்ன இது திவாகர்.. கையை எடுங்க.. ப்ளீஸ்..”

“ஏன்.. நான் உன் தோள் மேல கை போட கூடாதா..? எனக்கு அந்த உரிமை இல்லையா..?”

“இ..இருக்கு..”

“அப்புறம் என்ன..?”

“இ..இப்படி பப்ளிக்கா.. எல்லாரும் பாக்குறாங்க..”

“பாத்தா பாத்துட்டு போகட்டும்..”

“ப்ளீஸ்ங்க.. எ..எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. கையை எடுங்க.. ப்ளீஸ்..!!”

திவ்யா கெஞ்சவும், திவாகர் ஓரிரு வினாடிகள் அவளுடைய முகத்தையே சலனமில்லாமல் பார்த்தான். அப்புறம் அவள் தோள் மீதிருந்து கையை எடுத்துக் கொண்டான். புன்னகைத்தான். குரலை உடனடியாய் உற்சாகமாக மாற்றிக் கொண்டு சொன்னான்.

“சரி.. நாளைக்கு என்னோட பர்த்டே.. ஞாபகம் இருக்குல..?”

“ம்ம்.. இருக்கு..”

“நைட்டு பன்னண்டு மணிக்கு நீ எனக்கு கால் பண்ணி விஷ் பண்ணனும்.. சரியா..?”

“ம்ம்.. பண்றேன்..”

“நாளைக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணிருக்கேன்.. கண்டிப்பா நீ கலந்துக்கனும்..!!”

“பா..பார்ட்டியா..???” திவ்யா திகைத்தாள்.

“ஹேய் ஹேய்.. நீ நெனைக்கிற மாதிரிலாம் ஒன்னும் இல்ல.. ஜஸ்ட் ஃபுட்.. நோ ட்ரிங்க்ஸ்..!! ஓகேவா..?”

“ம்ம்.. ஓகே.. வர்றேன்..!!”

“சரி.. ப்ரெட் ரோல் கொஞ்சம் மிச்சம் இருக்கு பாரு.. சாப்பிட்ரு..”

“இ..இல்லைங்க.. எனக்கு போதும்..!!”

“ஏன்..?”

“சாப்பிட முடியலை.. வயிறு ஃபுல் ஆயிடுச்சு..!! ம்ம்ம்.. சரி எனக்கு டைம் ஆச்சு.. நான் கெளம்புறேன்..!!”

“என்ன.. அதுக்குள்ளே கிளம்பிட்ட..?”

“இல்லை.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. ஒரு புக் வாங்கணும்.. புக் ஷாப் போயிட்டு அப்படியே வீட்டுக்கு போயிடுவேன்..!!”

“இரு.. நான் ட்ராப் பண்றேன்..!!”

“இல்ல.. பரவால.. நான் ஆட்டோ புடிச்சு போய்க்குறேன்..!!”

“ஓகே.. யுவர் விஷ்..!! பை..!!” திவாகர் தோளை குலுக்கிக்கொண்டே சொன்னான்.

“பை..”

திவ்யா சொல்லிவிட்டு தன் பேகை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டாள். மாட்டியவள், பேகின் சைட் ஜிப் திறந்திருப்பதை ஓரிரு வினாடிகள் வித்தியாசமாக பார்த்தாள். அப்புறம் ஜிப்பை இழுத்து மூடிவிட்டு, அந்த ஷாப்பிங் மாலின் எக்ஸிட் நோக்கி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள். ஷாப்பிங் மாலை விட்டு வெளியே வந்தாள். ரோட்டின் ஓரமாய் நின்றுகொண்டு, ஆட்டோ ஏதாவது வருகிறதா என்று தூரமாய் பார்த்தாள்.

அப்போது.. ஏதேச்சையாகத்தான் அது அவளது கண்ணில் பட்டது..!! அது.. அசோக்கின் பைக்..!! ஷாப்பிங் மால் முன்பாக வரிசையாக பார்க் செய்யப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களுக்குள், இடையில் செருகப்பட்டிருந்த அசோக்கின் பைக், தனியாய் அவள் கண்களில் விழுந்தது. உடனே அவளிடம் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது. ‘அசோக் இங்குதான் இருக்கிறானா..??’ சில வினாடிகள் சுற்றும் முற்றும், தலையை திருப்பி திருப்பி பார்த்தாள். எங்கும் அவன் தென்படவில்லை..!! அப்புறம் தயங்கி தயங்கி மெல்ல அந்த பைக்கை நெருங்கினாள்..!!

அந்த பைக்கை பார்க்க பார்க்க.. அவள் மனதுக்குள் ஒரு இனம்புரியாத அழுத்தம்.. ஒரு பிடிபடாத ஏக்கம்.. ஒரு காரணமறியாத சோகம்..!! பைக்கின் சீட்டில் அவளுடைய பிஞ்சு விரல்களை அப்படியே படர விட்டாள். பச்சை குழந்தையை தடவுவது போல வாஞ்சையாக அந்த பைக்கை தடவி கொடுத்தாள்.

‘எத்தனை நாட்கள் இந்த பின் சீட்டில் அமர்ந்து பயணித்திருக்கிறேன்..? இந்த கம்பியைத்தானே பிடித்துக் கொள்வேன்.. பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் அவன் இடுப்பை இறுகப் பற்றிக் கொள்வேன்..? அவன் பைக்கை சீற செய்து பறக்கையில், ‘ஊஊஊஊ’ என்று உற்சாகமாக கத்தி ஊளையிடுவேன்..? சிக்னலுக்காக அவன் காத்திருக்கையில், என் மூக்கில் துளிர்க்கும் வியர்வையை அவன் முதுகில் துடைத்துக் கொள்வேன்..?? அவ்வளவுதானா..??? எல்லாமே முடிந்து விட்டதா..??? அந்த இனிய கனவு இப்போது கலைந்து விட்டதா..??? இனி நான் இந்த இருக்கையில் அமரவே போவதில்லையா..???’

“எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் வழி விடுறீங்களா..? பைக்கை எடுக்கணும்..!!”

சத்தம் கேட்டு படக்கென திரும்பிய திவ்யா அப்படியே அதிர்ந்து போனாள். அவளுக்கு பின்னால் வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தான். கண்களுக்கு கருப்பு நிறத்தில் குளிர் கண்ணாடி..!! அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருக்க, திவ்யாதான் உடனடியாய் முகம் வெளிறிப் போனாள். திகைத்தாள்.. தடுமாறினாள்.. பதற்றமாய் விலகி நின்றாள்.. உளறினாள்..!!

“ஸா..ஸாரி.. ஸாரி..”

அசோக் திவ்யாவை ஒரு பொருட்டாக கூட மதியாமல், பைக்கை வெளியே எடுத்தான். கிக்கரை ஒரே உதையாக உதைத்து கிளம்பி, சர்ரென சாலையில் செலுத்தி பறந்தான்..!! அவன் கண்ணில் இருந்து மறையும் வரை.. அதன்பிறகும் அந்த திசையையுமே.. திவ்யா நெடுநேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இதயம் திடுக் திடுக்கென துடிக்க, அவளுக்குள் இப்போது ஒரு புதுவித தவிப்பு..!!

‘ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறான்..?? என்னைப் பார்க்க நேர்ந்ததால் வந்த கோபமா..?? அதற்குள் இந்த அளவுக்கு என்னை வெறுத்து விட்டானா..?? ஏன் வெறுக்க மாட்டான்.. நான் வீசி எறிந்த வார்த்தைகள் அப்படி..!! ஐயோ.. கடவுளே.. இப்படி கண்மண் தெரியாத வேகத்தில் பறக்கிறானே.. அவன் பத்திரமாக வீடு சென்று சேர வேண்டும்..!!’ திவ்யா கண்களை மூடி மனமார கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

அப்புறம் ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு, அவள் செல்ல நினைத்த புக் ஷாப்பிற்கு சென்றாள். புக் வாங்கிக்கொண்டு நடந்தே சென்று மெரீனா பீச்சை அடைந்தாள். நிலவு வெளிச்சத்தில் எழும்பிய வெள்ளி அலைகளையே வேடிக்கை பார்த்துக் கொண்டு வெகு நேரம் அமர்ந்திருந்தாள். அவளுடைய நெஞ்சக் கடலிலும் பல்வேறு குழப்ப அலைகள்..!! அதையே சிந்தித்து சிந்தித்து அவள் மூளை செயலிழந்து போனது மாதிரி தோன்றியது..!!

திவ்யா வீட்டுக்கு திரும்புகையில் இரவு எட்டு மணியை தாண்டியிருந்தது. லிஃப்டுக்குள் இருந்து வெளிப்பட்டதுமே வீட்டு வாசலில் நின்றிருந்த சித்ராவின் முகத்தில்தான் விழிக்க வேண்டியிருந்தது. யாரிடமோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தாள். வீட்டுக்குள் சிக்னல் கிடைக்கவில்லை போலிருக்கிறது.

“ஐயோ.. அப்டிலாம் இல்லப்பா ………….. ஆமாம்ப்பா ………….. இல்லப்பா.. நான் …………… ம்ம்.. சரிப்பா ………….. சரி சொல்றேன் ………….. ”

அசோக்கின் அப்பா அடுத்த முனையில் இருக்கிறார் என்று திவ்யாவால் உடனடியாய் புரிந்து கொள்ள முடிந்தது. இங்கும் அங்கும் அலைந்து பேசிகொண்டிருந்த சித்ராவை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து திவ்யா வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் இருந்த டிவியில் ஏதோ சீரியல் ஓடிக்கொண்டிருந்தது. அதை திரும்பிகூட பாராமல் தன் அறைக்குள் சென்றாள். முகத்தை கழுவி ரெஃப்ரஷ் செய்துகொண்டு, வேறு உடை மாற்றிக் கொண்டாள். மீண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டுக்கு வெளியே இப்போது சித்ராவை காணோம்.

கொஞ்ச நேரம் குழப்பமாக சித்ராவை தேடிய திவ்யா, அப்புறம் கதவை அறைந்து சாத்திவிட்டு, பக்கவாட்டு படிக்கட்டில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றாள். கொஞ்ச நேரம் கைகட்டி அமைதியாக நின்றிருந்தாள். இருண்ட வானத்தையும், வட்ட நிலவினையும், நிலவு கடக்கும் மேகங்களையும், மினுக்கும் நட்சத்திரங்களையும் வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து, அந்த கோணத்தில் இருந்து பார்த்தால், அடுத்த தெருவில் அசோக் தங்கியிருக்கும் அறையும் அதை சுற்றிய மொட்டை மாடியும், உயரமான தென்னை மரங்களும் தெளிவாக தெரியும். அவளுடைய மனதை ஏதோ ஒரு ஏக்கம் வந்து பிசைய, தூரமாய் தெரிந்த அந்த மொட்டை மாடியையே திவ்யா வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அறைக்கு வெளியே எரிந்து கொண்டிருந்த குண்டு பல்பு, ஓரளவு வெளிச்சத்தை அந்த மொட்டை மாடி முழுதும் பரப்பியிருந்தது.

அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அசோக் அவனுடைய அறையில் இருந்து வெளிப்பட்டான். அவன் பின்னாலேயே செல்வாவும்..!! அசோக் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது.. அவனுடைய கால்கள் பின்னிக்கொள்ள தடுமாறினான்..!! வெளியே வந்தவன், அப்படியே மொட்டை மாடியில் நின்றவாறே டான்ஸ் ஆட ஆரம்பித்தான். சாவுக்கு ஆடுவார்களே.. அந்த மாதிரி ஒரு குத்தாட்டம்..!! கன்னாபின்னாவென்று.. நளினம் என்பது கொஞ்சமும் இன்றி அவன் இஷ்டத்திற்கு ஆடினான்..!!

செல்வா அவனை சமாதானம் செய்து, அறைக்குள் மீண்டும் அழைத்து செல்ல முயன்றார். ஆனால் அசோக் அவருடைய பிடியில் இருந்து திமிறி விடுபட்டு, மனம் போன போக்கில் கையையும் காலையும் ஆட்டி, வெறித்தனமாக ஆடிக் கொண்டிருந்தான். அவனை நிறுத்த கொஞ்ச நேரம் முயன்று பார்த்த செல்வா, அப்புறம் அந்த முயற்சியை கைவிட்டார். கைகளை கட்டிக்கொண்டு ஓரமாய் நின்று அவனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

அந்தக் காட்சியை பார்த்த திவ்யாவுக்கு, இதயத்தில் யாரோ முள் செருகுவது போலிருந்தது.. வலித்தது..!! அவளையும் அறியாமல் அவளுடைய கண்களில் இருந்து நீர் கசிந்தது..!! உதடுகள் படபடக்க, உடம்பெல்லாம் ஒரு வெடவெடப்பு..!!

‘ஏண்டா அசோக் இப்படி ஆடுற..?? என்னடா ஆச்சு உனக்கு..?? யார் மேல உனக்கு கோவம்..?? என் மேலயா..?? என் மேலயா அசோக்..?? உன்னை ரொம்ப காயப் படுத்திட்டேனாடா..?? என்னை மன்னிச்சுடுடா அசோக்.. என்னை மன்னிச்சுடு..!! ப்ளீஸ்.. இப்படிலாம் பண்ணாதடா.. உள்ள போ.. நிம்மதியா படுத்து தூங்கு..!!’

திவ்யா மனதுக்குள்ளேயே அசோக்கிடம் மன்றாடிக் கொண்டிந்தாள். அப்போதுதான்.. சற்றுமுன் அவர்கள் வீட்டில் காணாமல் போன சித்ரா, அங்கே மொட்டை மாடியில் முளைத்தாள். தம்பியின் நிலையை பார்த்து அதிர்ந்து போனாள். அவனை சமாதானம் செய்ய முயன்றாள். கைகளை பிடித்தாள். அசோக் அவளுடைய கையை வெடுக்கென உதற, ஆத்திரமுற்றவளாய் அவனுடைய கன்னத்திலேயே ‘பளார்.. பளார்..’ என அறைவிட்டாள்..!!

அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் திவ்யாவால் அந்த காட்சியை காண சகிக்கவில்லை. கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே படியிறங்கி கீழே ஓடிப்போனாள். தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டவள், ‘ஓ..’வென்று கத்திக்கொண்டே சென்று படுக்கையில் வீழ்ந்தாள். குலுங்கி குலுங்கி அழுதாள். அசோக்கின் நினைவுகளே அவளுடைய நெஞ்சத்தை அழுத்தியிருக்க, உணவு பற்றிய நினைப்புமின்றி, திவாகருக்கு வாழ்த்து சொல்லவும் மறந்து போனவளாய் அழுதுகொண்டே உறங்கிப் போனாள்.

அடுத்தநாள் மாலை.. திவ்யா சீக்கிரமே கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிவிட்டாள். கதவை திறந்து விட்ட சித்ரா, அவளை ஒரு மாதிரி கூர்மையாக பார்த்தாள். திவ்யா அவளுடைய பார்வையை கண்டுகொள்ளாமல், அவளை கடந்து உள்ளே சென்றாள். அவளுடைய அறையை அடைந்தவள், முகம் கழுவிக்கொண்டு வெளியே செல்ல.. திவாகரின் பிறந்த நாள் விருந்துக்கு செல்ல.. தயாரானாள்..!! காலையிலேயே தேர்வு செய்து, தயாராக மடித்து வைத்திருந்த புதிய உடையை எடுத்து அணிந்து கொண்டாள். திவாகருக்கு பிடிக்கவேண்டுமே என்று கவனமாக மேக்கப் போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள்.

எல்லாம் முடிந்து அவள் கிளம்பும் தருவாயில்தான், அவளுடய அறையின் கதவு ‘லொட்.. லொட்..’ என்று தட்டப்பட்டது. ‘யார் அது..?’ என்று குழப்பமாய் திரும்பியவள், வாசலில் அவள் கண்ட காட்சியில், அப்படியே திகைத்து போனாள்.

‘திவ்யா வாசலில் அப்படி என்ன கண்டாள்..? அவளுடைய அதிர்ச்சிக்கு காரணம் என்ன..?’ என்பதை தெரிந்து கொள்வதற்கு முன், அடுத்து வரப்போகிற அத்தியாயங்களில் நேற்று நடந்த சில சம்பவங்களை இன்னும் கொஞ்சம் அருகில் சென்று உற்று நோக்கலாம்..!!

அத்தியாயம் 27

நேற்று மாலை 4.50

க்ளாஸ் முடிந்ததுமே நண்பிகளின் பார்வையில் இருந்து நைசாக நழுவி, கல்லூரி காம்பவுண்ட் விட்டு திவ்யா வெளியே வந்திருந்தாள். திவாகருக்காக அந்த மர நிழலில் காத்திருந்தாள். அடிக்கடி மணிக்கட்டை திருப்பி கைக்கடிகாரத்தை பார்த்தாள். லேசாக எரிச்சலுற்றாள். ‘ச்சே.. இவர் ஏன் இப்படி செய்கிறார்..? எப்போது எங்கே சந்திப்பதாக இருந்தாலும், அரை மணி நேரம் தாமதமாகவே வருகிறார்..!! இதுவே அசோக்கானால் சொன்ன நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவே வந்து நிற்பான்..!!’

அதே நேரம் அவளுக்கு இன்னொரு எண்ணமும் கூடவே ஓடியது. ‘சில நேரங்களில் அசோக்கிற்காக இந்த மாதிரி காத்திருக்க வேண்டியதாக இருந்தாலும், இப்படி எல்லாம் நான் அப்போது எரிச்சல் அடைந்தது இல்லையே.. அது ஏன்..??’ மேலும் கொஞ்ச நேரம் அவளுடைய மூளை அந்த மாதிரியே யோசித்துக் கொண்டிருக்க, உடனடியாய் தன் தலையை சிலுப்பி, அந்த சிந்தனையை நிறுத்தினாள். ‘ச்சே.. என்ன நான்..?? இப்போது எதற்காக அசோக்கையும் அவரையும் கம்பேர் செய்கிறேன்..??’ திவ்யா தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

அப்போதுதான் அவள் முன்பாக அந்த மாருதி ஆல்ட்டோ வந்து நின்றது. காரைப் பார்த்ததும் திவ்யா சற்றே துணுக்குற்றாள். அதற்குள் கார்க்கண்ணாடி கீழே இறங்கிக்கொள்ள, உள்ளிருந்து அஞ்சு கையசைத்தாள். சற்றே குழப்பமான குரலில் கேட்டாள்.

“ஏய்.. என்னடி இங்க நின்னுட்டு இருக்குற..?”

“ஒ..ஒன்னும் இல்லடி.. சும்மாதான்.. ஆட்டோக்காக வெயிட் பண்ணிட்டு இருக்குறேன்..!!” திவ்யா திணறினாள்.

“ஆட்டோக்கா..? ஆட்டோக்குனா காலேஜ் என்ட்ரன்ஸ்லயே வெயிட் பண்ணலாமே.. இங்க வந்து நின்னுட்டு இருக்குற..?”

“சு..சும்மா அப்படியே கொஞ்ச தூரம் வாக்கிங் போகலாம்னு..”

“நாலு மணி வெயில்.. சுள்ளுன்னு அடிக்குது.. உனக்கு வாக்கிங் கேக்குதா..?? சரி வா.. எங்க போகணும்னு சொல்லு.. நான் ட்ராப் பண்றேன்..”

“ப..பரவாலடி.. நீ கெளம்பு.. நான் ஆட்டோலேயே போயிக்குறேன்..”

“ஏய்.. வான்றேல.. வா..!!”

“இல்லடி.. நீ போ..!!”

அவ்வளவு சொல்லியும் திவ்யா மறுக்க, அதுவுமில்லாமல் அவள் இயல்பாக இருப்பது போல் தோன்றாமல் போக, இப்போது அஞ்சுவுக்கு லேசாக சந்தேகம் வந்தது. சில வினாடிகள் திவ்யாவையே கூர்மையாக பார்த்தவள், அப்புறம் கார் இன்ஜினை சாவி திருப்பி அணைத்தாள். கதவு திறந்து வெளியே வந்தாள். கண்களை இடுக்கி திவ்யாவின் முகத்தையே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் குறும்பான குரலில் கேட்டாள்.

“யாருக்காகடி வெயிட் பண்ணுற..?”

“அதான் சொன்னனே.. ஆட்டோக்காக..!!”

“அறைஞ்சுருவேன்.. உண்மையை சொல்லு..!!”

“உண்மையைத்தாண்டி சொல்றேன்..”

“நடிக்காத..”

“நான் ஏன் நடிக்கணும்..?”

“ஹாஹா.. எல்லாம் எனக்கு தெரியும்டி..!!”

“என்ன சொல்ற நீ..?”

“நீ யாருக்காக வெயிட் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்..!!”

“யாருக்காக..?”

“அசோக்குக்காத்தான வெயிட் பண்ணுற..?”

“ப்ச்.. இல்ல..”

“பொய்..!! நீயும் அவரும் மாத்தி மாத்தி உருகிக்கிறது.. லவ்வோ லவ்வோ லவ்வாங்கி பண்றது.. எனக்கு எல்லாம் தெரியும் மவளே..!!”

“என்னடி லூசு மாதிரி உளர்ற..? நாங்க லவ் பண்றோமா..? அப்டின்னு அந்த அசோக் சொன்னானா..?”

“அப்போ பண்ணலையா..?”

“இல்லை..”

“ம்ம்ம்ம்… சரி உன் மொபைலை கொடு.. எனக்கு அசோக் நம்பர் வேணும்..!!”

“அது எதுக்கு உனக்கு..?”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments