மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 5

வீட்டை அடைந்தோம். காலிங் பெல் அடித்துவிட்டு காத்திருந்தோம். கையில் தோசைக் கரண்டியுடன் மலர் வந்து கதவை திறந்து விட்டாள். அபி தரையில் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நாங்கள் சத்தம் போடாமல் வீட்டுக்குள் நுழைந்தோம். இருவரும் சென்று சோபாவில் அமர்ந்து கொள்ள, இடுப்பில் கை வைத்து மலர் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். உஷ்ணமான குரலில் கேட்டாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

குடிச்சிருக்கியா..???”

அவள் கேட்டது என்னிடம் அல்ல..!! பன்னீரிடம்..!! அவள் அப்பாவிடம்..!!!! அதிர்ச்சியாக இருக்கிறதா..???? ஆமாம்.. உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன்.. பன்னீர்தான் என் மாமனார்..!!!! ஆனால் அவரை என் மாமனாராக நான் ஒரு நாளும் பார்த்தது இல்லை. முதலில் அவர் எனக்கு நண்பர். அப்புறந்தான் எனக்கு மாமனார். எட்டு வருடங்கள் முன்பு இந்த கம்பெனியில் சேர்ந்தபோது, எனக்கு கீழே வேலை பார்க்கும் பன்னீரோடு எனக்கு நல்ல நட்பு உருவானது. பின்பு அவருடைய மூத்த மகள் கயல்விழியையே எனக்கு மனைவியாக்கிக் கொண்டேன்.

எனக்கு சொந்த பந்தம் என்று சொல்லிக்கொள்ளும் படியாக யாரும் இல்லை. மதுரையில் இருக்கும் மாமா மட்டும் விதி விலக்கு..!! அவரும் எப்போதாவது போனில் பேசுவதோடு சரி. எனது திருமணத்துக்குப் பிறகு என் மனைவியின் குடும்பத்தை என் குடும்பமாக மாற்றிக் கொண்டேன். அவர்களை கட்டாயப் படுத்தி.. என் வீட்டிலேயே தங்கிக் கொள்ள செய்திருக்கிறேன்..!!

“எ..என்னது.. குடிச்சனா..?? இ..இல்லையே..??” பன்னீர் தடுமாறினார்.

“ஏன் பொய் சொல்ற..? அதான் உன் மூஞ்சியை பாத்தாலே தெரியுதே..? நீ குடிச்சு உடம்பை கெடுத்துக்குறது பத்தாதுன்னு.. அத்தானையும் கூட்டிட்டு போய் கெடுக்குறியா..??”

“நான்தான் குடிக்கலைன்னு சொல்றேன்ல..? ஏன் அசோக்கு.. நாம குடிச்சோம்..????”

பன்னீர் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க, எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டேன். இப்போது மலர் டென்ஷனானாள். தன் அப்பாவை பார்த்து கத்தினாள்.

“ஐயோ.. உனக்கு எத்தனை தடவை சொல்றது.. அத்தானை பேர் சொல்லி கூப்பிடாதேன்னு..??”

“அப்படியே பழகிப் போச்சு மலரு.. விடு..”

“கடவுளே..!!! எங்கயாவது… மகளை கட்டிக்கிட்ட மாப்ளையை.. மாமனாரே பேர் சொல்லி கூப்பிடுவாங்களா..? வா.. போ… ன்னு மரியாதை இல்லாம பேசுவாங்களா..?”

“இதுல என்ன இருக்கு..? அசோக்கு எனக்கு ரெண்டு வருஷமாத்தான் மாப்ளை.. எட்டு வருஷமா என் ஃப்ரண்ட்..!!”

“ஃப்ரண்டா இருக்குறப்போ கூப்பிட்டு தொலைச்ச சரி.. மாப்ளையானப்புறம் அதை மறந்து தொலைக்கிறதுக்கு என்ன..??”

இப்போது நான் பன்னீருக்கு சப்போர்ட்டாக மலரிடம் பேசினேன்.

“ப்ச்.. பரவால விடு மலர்.. அப்டியே கூப்பிடட்டும்..!! நீயுந்தான் பெத்த அப்பான்ற மரியாதையை இல்லாம.. அவரை போ.. வா..ன்ற..?”

“இல்லைத்தான்.. அப்டிலாம் விட முடியாது..!! நான் கூப்பிடுறது வேற.. அவர் கூப்பிடுறது வேற..” அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, பன்னீர் இடைமறித்து மகளிடம் சொன்னார்.

“அதான்.. அவனே பரவாலன்னு சொல்றான்ல..? நீ ஏன் குதிக்கிற..??”

அவ்வளவுதான்..!! மலர் உச்ச பட்ச டென்ஷனுக்கு போனாள்.

“என்னது.. அவனா..????? நானும் சொல்லிட்டே இருக்குறேன்.. திரும்ப திரும்ப சொல்ற நீ..??? உன்னை என்ன பண்றேன் பாரு..”

தோசைக் கரண்டியை ஓங்கியவாறு தன் அப்பாவை அடிக்க ஓடினாள். மகளிடம் அடி வாங்காமல் தப்பிக்க, இப்போது பன்னீர் சோபாவில் இருந்து எழுந்து ஓடினார். மலரும் விடாமல் விரட்டினாள். இருவரும் சோபாவை சுற்றி சுற்றி ஓடி விளையாட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்தேன்..!! கிலுகிலுப்பையை ஆட்டிக்கொண்டிருந்த அபியும்.. இப்போது எழுந்து நின்று.. தன் எலிப்பற்களை காட்டியவாறு.. அவர்களை பார்த்து கைகளை தட்டி சிரித்தான்..!!

எபிஸோட் – III

மனதும் அறிவும் பல நேரங்களில் ஒரே பாதையில் பயணிப்பதில்லை. எதிர் எதிர் திசையைத்தான் பெரும்பாலும் தேர்வு செய்கின்றன. மனம் சொல்வதை அறிவு மதிப்பதில்லை. அறிவு உரைப்பதை மனம் அலட்சியமே செய்கிறது. இரண்டுக்கும் இடையில் சிக்கி இழுபடும் நிலைதான் எனக்கும்..!! ‘இப்படியே இருக்கப் போகிறாயா.. சோகத்திலிருந்து மீண்டு வா..’ என என் அறிவு கிடந்து அலறினாலும், எனது மனம் கண்டு கொள்வதாயில்லை. கயலின் நினைவுகளை உதறவும் முயல்வதில்லை.

மலரும், பன்னீரும், அபியும்.. மனம் விட்டு சிரித்துக் கொண்டிருக்க.. எனக்குள்ளும் அந்த உற்சாகம் கொஞ்ச நேரம் உறைந்திருந்தது. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு என் அறைக்குள் நுழைந்தபோது, அத்தனை நேரம் காணாமல் போயிருந்த கயல்.. மனதுக்குள் வந்து அமர்ந்து கொண்டாள்.. கனமாக..!! கயலின் முகம் காணவேண்டும் என்று எனது கண்கள் துடித்தன.. அவளது குரல் கேட்கவேண்டும் என்று காதுகள் தவித்தன..!! ‘முகம் காண புகைப்படம் இருக்கிறது.. குரல் எப்படி..’ என்கிறீர்களா..?? சொல்கிறேன்..!!

எனக்கும் கயலுக்கும் கல்யாணம் நிச்சயமாயிருந்த சமயம். பன்னீருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாய் ஒருநாள் கயலை சென்று சந்தித்தேன். என்னைப் பார்த்து மிரண்டவளை சமாதானம் செய்து, வெளியே கூட்டி சென்றேன். ஒரு ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிட்டோம். அவள் கைகழுவ சென்ற கேப்பில்.. அவளது ஹேன்ட் பேக் திறந்து.. அவளுடைய செல்போனை எடுத்து.. எனது நம்பருக்கு மிஸ்ட் கால் கொடுத்து..!! அப்படித்தான் அவளுடைய செல்நம்பரை நான் அறிந்து கொண்டேன்..!!

“ஃபோன்லாம் பண்ணாதீங்க ப்ளீஸ்.. அப்பாக்கு தெரிஞ்சா ப்ராப்ளம்..” கயல் கெஞ்சினாள்.

“ப்ச்.. தெரிஞ்சாத்தான..? அதுலாம் ஒன்னும் தெரியாது.. அப்டியே ஒருவேளை தெரிஞ்சாலும்.. பன்னீர்ட்ட நான் பேசிக்கிறேன்.. நீ பயப்படாத..!! சரியா..??”

“ம்ம்.. சரி..!! ஆனா… ”

“என்ன ஆனா..?”

“அடிக்கடிலாம் பண்ண வேணாம்..”

“அப்புறம்..?”

“நைட்டு வேணா பண்ணிக்கோங்க.. பத்து மணிக்கு மேல..!!”

“ம்ம்ம்.. சரி.. நைட்டே பண்றேன்..!! என் நம்பர் உன் மொபைல்ல.. டயல்ட் கால்ஸ்ல இருக்கும்.. நீ எப்போவாவது ஃப்ரீயா இருக்குறப்போ.. எங்கிட்ட பேசணும்னு தோணுச்சுனா கால் பண்ணு..” நான் சொல்லி முடிக்கும் முன்பே,

“ஐயையோ.. நான்லாம் பண்ண மாட்டேன்பா.. நீங்களே பண்ணுங்க..!!”

என்று பதறியவளை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாக இருந்தது. இவளை வைத்துக் கொண்டு நான் என்ன ரொமான்ஸ் செய்யப் போகிறேன் என்று ஏக்கமாக இருந்தது. ஆனால் அடுத்த நாள் மதியமே, ‘சும்மா..!! நீங்க சாப்டிங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்க கால் பண்ணினேன்.. வச்சிர்றேன்..’ என்று அவள் என் நம்பருக்கு கால் செய்து வழிந்தபோது.. இதை விட என்ன பெரிய ரொமான்ஸ் இருந்துவிட முடியும் என்று என் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன..!!

அப்புறம் எங்களுக்கு திருமணமாகி, கயல் என் வீட்டிற்கு வரும்வரை.. தினமும் இரவு.. செல்போன் சூட்டில் எங்கள் காதுகள் இரண்டும் சிவந்து.. திகுதிகுவென எரியும் வரை.. இருவரும் பேசுவோம்..!! நாங்கள் போனில் பேசிக் கொள்கிறோம் என்பது அப்புறம் பன்னீருக்கும், மலருக்கும் தெரிந்து போனது. ஆனால் அவ்வளவு நேரம் பேசுவோம் என்பது இன்றுவரை அவர்களுக்கு தெரியாது..!!

அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டதைத்தான், நான் கயலுக்கே தெரியாமல் ரெகார்ட் செய்து வைத்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் அதை அவளுக்கு போட்டுக் காட்டி, கிண்டல் செய்வேன். அவள் அதை டெலீட் செய்ய பலமுறை முயன்று தோற்றிருக்கிறாள்..!! ஒருவேளை அப்படி அவள் டெலீட் செய்திருந்தால்.. இப்போது நினைத்த போதெல்லாம் கயலின் குரலை கேட்கும் இன்பத்தை.. நிச்சயமாய் என் காதுகள் இழந்திருக்கும்..!!

அந்த ஒலிப்பதிவை நான் ஒரு MP3 கோப்பாக மாற்றி வைத்திருந்தேன். என்னுடைய கம்ப்யூட்டர் டெஸ்க்டாப்பிலேயே போட்டு வைத்திருந்தேன். இப்போது அதைத்தான் அமர்ந்து கேட்க ஆரம்பித்தேன். காதுகளுக்கு ஹெட்ஃபோன் கொடுத்துவிட்டு.. கண்களை இமைகளால் போர்த்திவிட்டு.. கம்ப்யூடர் சேரில் வசதியாய் தலையை சாய்த்துவிட்டு..!!

“ம்ம்.. சொல்லுங்க..”

“ஹேய்.. என்னாச்சு.. கட் பண்ணிட்டு போயிட்ட..?”

“அப்பா கூப்பிட்டாரு.. அதான்..”

“பன்னீர் இன்னும் தூங்கலையா..?”

“ம்ஹூம்..!! அப்பாவும், பொண்ணும் இன்னும் அரட்டை அடிச்சுட்டுதான் கெடக்குதுங்க.!!”

“ஓ..!! மலரும் முழிச்சிருக்காளா..?”

“ஆமாம்.. அந்த குட்டி சாத்தானுந்தான்..!! என்னைக்கும் சீக்கிரம் தூங்கிடுங்க.. இன்னைக்குன்னு பார்த்து ரெண்டும் கொட்ட கொட்ட முழிச்சுட்டு உக்காந்துக்கிட்டு.. நம்ம உசுரை வாங்குதுங்க..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ம்ம்ம்.. கொஞ்சம் மலர்ட்ட ஃபோனை கொடேன்..!!”

“எதுக்கு..??”

“சும்மாதான்..”

“ப்ச்.. எதுக்குன்னு சொல்லுங்க..”

“என்ன நீ.. நானும் என் மச்சினியும் ஏதாவது ஜாலியா பேசிக்குவோம்.. உனக்கு என்ன..? போய் ஃபோனை கொடு.. போ..!!”

“ஓஹோ.. ஐயாவுக்கு ஜாலியா பேசணுமோ..? உதை விழும்..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ஹேய்.. ப்ளீஸ்டி…”

“சும்மா இருங்கப்பா.. அவகிட்ட என்ன ஜாலிப்பேச்சு உங்களுக்கு..??? அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!!!”

“ஏய்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..”

“ப்ச்..!! அப்புறம்.. நான் ஃபோனை கட் பண்ணிட்டு போயிடுவேன்..!!”

“ஏய்.. ஏய்.. இரு இரு.. கட் பண்ணிடாத..!! நான் சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்.. உன்னை சீண்டிப் பாக்கலாம்னு..!!”

“ம்.. ம்.. சும்மா சொல்லாதீங்க.. எனக்கும் தெரியும்..”

“என்ன தெரியும்..?”

“ம்ம்ம்..?? நீங்க என் தங்கச்சியை சைட் அடிக்கிறது… அவ கிட்ட ஜொள்ளு வுடுறது..”

“அடிப்பாவி..!! ம்ம்ம்ம்… இப்போத்தான் உண்மைலாம் வெளில வருது..!!”

“என்ன உண்மை..?”

“நான் இத்தனை நாளா சாதாரணமா உன் தங்கச்சிட்ட பேசுறதை.. சந்தேக கண்ணோட பாத்துட்டு இருந்திருக்குற நீ..!! நான் ஒன்னும் அந்த மாதிரி கிடையாதும்மா..!! பக்கா டீசன்ட்..!!”

“ம்ம்ம்.. நம்பிட்டேன் நம்பிட்டேன்..!!”

“ஹ்ஹாஹ்ஹா…!! ம்ம்ம்… அப்புறம்..??”

“………………………”

“ஹேய்.. என்ன சத்தத்தையே காணோம்..?? கோவமா..??”

“அதெல்லாம் ஒண்ணுல்ல.. தூக்கம் வருது..”

“அதுக்குள்ளையா..?”

“ம்ம்ம்…!! உங்களுக்கு தூக்கம் வரலையா..?”

“ம்ஹூம்..”

“போய் தூங்குங்கப்பா.. டைமாச்சு.. காலைல ஆபீஸ் வேற போகனும்ல ..?”

“தூக்கம் வரலையே.. என்ன பண்ண சொல்ற..?”

“பெட்ல போய் படுத்துக்கிட்டு.. கண்ணை இறுக்க்க்க்கி மூடிக்குங்க.. தூக்கம் தானா வரும்..!!”

“பெட்லதான் படுத்திருக்கேன்.. கண்ணை கூட மூடிக்கிட்டேன்.. தூக்கம்தான் வரல..!!”

“ஓ..!! அப்போ என்ன பண்ணலாம்..?”

“சரி.. நீ அந்த பாட்டு பாடு.. நான் கேட்டுக்கிட்டே தூங்குறேன்..”

“எந்த பாட்டு..?”

“அதான்.. அன்னைக்கு பாடுனியே.. P.சுசீலா பாட்டு..”

“ஓ.. அதுவா..?? ம்ம்ம்.. சரி.. பாடுறேன்.. அப்டியே கேட்டுட்டு தூங்கிடனும்.. என்ன..?”

“ம்ம்.. சரி..!!”

அப்புறம் கொஞ்ச நேரத்திற்கு தேனில் நனைந்த கயலின் குரல்..!!

“உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல..
நீ… இல்லாமல் நானும் நானல்ல..

இங்கு நீயொரு பாதி நானொரு பாதி..
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி..
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்..
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல..”

எவ்வளவு நேரம் என்று சரியாக தெரியவில்லை..!! வின்ஆம்ப்-இல் ரிப்பீட் சாங் செட் செய்திருந்தேன். அதனால் கயலின் குரல் திரும்ப திரும்ப என் செவிப்பறையில் செந்தேன் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தது. உள்ளே சென்றிருந்த ஆல்கஹாலும், மூளையின் செல்களை மந்தமாக்க, முடிந்த அளவு முயற்சித்தது. என்னையும் அறியாமல் அப்படியே உறங்கிப் போனேன்.

“அத்தான்.. அத்தான்..”

மலர் என் தோளைப் பற்றி உலுக்க, நான் பட்டென விழிகள் திறந்தேன். கயலுடன் கொஞ்சிக் கொண்டிருந்த கனவுலகை விட்டு, நனவுலகில் வந்து விழுந்தேன். தலையை திருப்பி.. தூக்க கலக்கத்தில் சிவந்த கண்களுடன், மலரின் முகத்தை மலங்க மலங்க பார்த்தேன்.

“என்னத்தான்.. சேர்லயே தூங்கிட்டிங்க.. பெட்ல போய் படுத்துக்கோங்க.. போங்க..”

“ம்ம்ம்..” சொல்லிக்கொண்டே நான் கை நீட்டி மவுஸ் தேட,

“நான் ஷட் டவுன் பண்ணிக்கிறேன்த்தான்.. நீங்க போய் தூங்குங்க..”

நான் சேரை விட்டு எழுந்தேன். சற்று முன்பு கசங்கலாகவும், கொஞ்சம் அழுக்காகவும் இருந்த மெத்தை விரிப்பு இப்போது மாற்றப்பட்டிருந்தது. சலவை செய்யப்பட்ட புது விரிப்பை.. சுருக்கமில்லாமல் விரித்து.. தலைக்கும் காலுக்கும் இரண்டு தலையணைகள் என.. படுக்கையை மலர் ஒழுங்கு படுத்தி வைத்திருந்தாள். நான் மெத்தையில் சுகமாக வீழ்ந்து.. விழிகளை மூடிக் கொண்டேன். உறங்கலானேன்..!!

ஓரிரு நிமிடங்கள்தான் ஆகியிருக்கும். எனக்குள் ஒரு உள்ளுணர்வு ஏதோ சொல்லி எனை எழுப்ப.. நான் உறக்கம் விடுத்து.. மெல்ல என் கண்களை திறந்து பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்..!! மலர் என் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தாள். ஒரு மாதிரி வித்தியாசமான பார்வை..!! என்னாயிற்று இவளுக்கு..??? ஏன் இப்படி பார்க்கிறாள்..??? அவள் பார்வையில் இருந்தது.. அன்பா.. இரக்கமா.. கருணையா.. பரிதாபமா.. இல்லை.. இவை எல்லாம் கலந்த ஒன்றா..??? எனக்கு புரியவில்லை..!! அமைதியாக அசையாமல் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை, எனது குரல் கலைத்தது.

“என்னாச்சு மலர்..?”

“ஒ..ஒன்னுல்லத்தான்.. ஒ..ஒன்னுல்ல.. தூ..தூங்குங்க..!!”

திணறலாக சொன்னவள் சுவரை தடவி, சுவிட்சை தேய்த்து விளக்கை அணைத்தாள். சப்தம் வராமல் மெல்ல கதவை சாத்தியபடி, அறையை விட்டு வெளியேறினாள். நான் அப்புறமும் கொஞ்ச நேரம் மலரையும் அவள் பார்வையையும் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன். ஏன் அப்படி பார்த்தாள்..?? அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்..??

அப்புறம் உறங்கிப் போனேன். அவளுடைய பார்வையும் எனக்கு மறந்து போனது. ஆனால் அந்த பார்வையின் அர்த்தம் பத்தே நாட்களில் எனக்கு புரிந்து போனது.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments