அசோக் காலிங் அசோக் – பகுதி 11

“ம்ம்.. சொல்லு..!!” அவள் அவசரப் படுத்தினாள். யோசிக்க நேரமில்லாமல் நான் உளறினேன்.

“ஆங்..!! நேத்து என் பாட்டி கனவுல வந்து திட்டினாங்க..!!”

“என்ன திட்டினாங்க..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“உனக்குலாம் மானிட்டரே இல்லையாடான்னு..”

“என்னது..????”

“ஐயயோ..!! ஸாரி.. மனசாட்சியே இல்லையான்னு திட்டுனாங்க..!!”

“உன் பாட்டி பேர் என்ன..?” அவள் பட்டென அடுத்த கேள்வியை வீசினாள்.

“ம்ம்.. தீபிகா படுகோனே..!!”

“ப்ச்..!! சொல்லுடா..!!”

“பாட்டி பேர்லாம் ஏன் கேக்குற..?”

“இதோ.. இப்படி திணர்ற பாத்தியா.. அதுக்குத்தான்..!!”

“நான்லாம் ஒன்னும் திணறலை..!! என் பாட்டி பேரு… ம்ம்ம்… ஆங்..!! அழகுவேணி..!!”

“சரி.. லாஸ்டா.. எப்போ, எந்த பொண்ணோட, எந்த சிச்சுவேஷன்ல செக்ஸ் வச்சுக்கிட்ட..? படபடன்னு சொல்லு பார்ப்போம்..!!”

“அ..அது.. அது…”

நான் வகையாக மாட்டிக்கொண்டேன் என்று எனக்கு இப்போது புரிந்து போனது. திணறினேன். திருதிருவென விழித்தேன். திடீரென்று எப்படி ஒரு கட்டுகதையை அவிழ்த்து விடுவது..? அவள் இப்போது என்னைப் பார்த்து ஏளனமாக சொன்னாள்.

“ம்ம்.. பாத்தியா..? சொல்ல முடியலை பாத்தியா..?? அதான் சொன்னேன்.. நீ பொய் சொல்றேன்னு..!!”

“அதுலாம் ஒண்ணுல்ல.. ஒன்னு ரெண்டுணா ஞாபகம் இருக்கும்.. எக்கச்சக்கமா ஆகிப் போச்சா..? ஒழுங்கா ஞாபகத்துக்கு வர மாட்டேன்னுது..!!”

நான் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது மாதிரி மழுப்பலாக சொன்னேன். லேகா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் என் முகத்தையே காதலுடனும், கனிவுடனும் பார்த்தாள். அப்புறம் உதட்டில் மெல்லிய புன்னகையை கசியவிட்டவள், ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தாள். இதமான குரலில் சொன்னாள்.

“நீ ஏன் இப்படிலாம் பேசுறேன்னு எனக்கு புரியுது அசோக்..!!”

“ஏன் இப்படி பேசுறேன்..?” (எனக்கே ஒன்னும் புரியலை.. இவளுக்கு என்ன புரிஞ்சது..?)

“புரியுதுன்னு சொல்றேன்ல..? உன் மனசை உன்னைவிட நான் நல்லா புரிஞ்சு வச்சுக்குறேன்..!!”

“ஓஹோ..???”

“ஒன்னு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ..!! நீ நெஜமாவே அந்த மாதிரி.. பொம்பளைப் பொறுக்கியா இருந்தா கூட.. எத்தனை பொண்ணுக கூட உனக்கு பழக்கம் இருந்திருந்தா கூட.. எனக்கு கவலை இல்ல..!! என்னை கட்டிக்கிட்டதுக்கு அப்புறம்.. எனக்கு ஒரு நல்ல புருஷனா இருந்தா.. அது போதும் எனக்கு..!! உன் கடந்த காலம் பத்திலாம் எனக்கு அக்கறை இல்லை..!! புரிஞ்சதா..? ஐ லவ் யூ அசோக்.. ஐ லவ் யூ ஸோ மச்..!!”

உருக்கமாக பேசியவள், காலேஜ் என்பதையும் மறந்து என் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். உதடுகளை குவித்து என் மார்பில் இதமாக முத்தமிட்டாள். அங்கேயே முகம் சாய்த்து, தன் விழிகளை மூடிக் கொண்டாள். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை..!! நான் நினைத்தது ஒன்று.. நடந்தது வேறு..!! அவளை கழட்டிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் பொய் சொன்னால், அவளோ தன் காதலால் என்னை கவிழ்த்து விட்டாள். என் மீது லேகாவுக்கு இவ்வளவு காதலா..?? எனக்கே ஆச்சரியமாக இருந்தது..!! அவளை மென்மையாக, ஆறுதலாக அணைத்துக் கொண்டேன். ‘டேய் சீனி..!!!!’ என்று பற்களை கடித்துக்கொண்டு கத்த வேண்டும் போலிருந்தது..!!

ஆனால் அப்போது கத்தவில்லை. அடக்கிக்கொண்டேன். அன்று இரவு சீனியர் கால் செய்யும்போது கத்தினேன். காட்டுத்தனமாய் நான் கத்தியதில் அவர் மிரண்டு போனார்.

“ஆஆஅ…!! ஏன் கத்துற ஜூனி.. காது வலிக்குது…!!”

“பின்ன என்னய்யா..? நான் பாட்டுக்கு ஜாலியா லவ் பண்ணிட்டு இருந்தேன்.. இப்படி சனியன் மாதிரி என் லைஃப்ல வந்து.. எல்லாத்தையும் ஒழப்பிட்டியேயா..!! ச்சே.. என் நிம்மதியே போச்சு..!!”

“ஜூனி.. டென்ஷன் ஆகாம மேட்டர் என்னன்னு சொல்லு..!!”

நான் சீனியரிடம் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் ஒப்பித்தேன். லேகாவை கழட்டி விட நான் சொன்ன பொய்யும், அந்த பொய் புஸ்வானமாய் போய் சேர்ந்த கதையையும் சுருக்கமாக சொன்னேன். அதை பொறுமையாக கேட்ட சீனியர், அப்புறம் சற்றே யோசனையான குரலில் சொன்னார்.

“ம்ம்ம்ம்… உன்னோட ஐடியா நல்ல ஐடியாதான்.. ஆனா ஃபினிஷிங்தான் ராங்கா போயிடுச்சு..!! சரி விடு.. வேற ஏதாவது ஐடியா யோசிக்கலாம்..!!”

“யோவ்.. போய்யா..!! இனிமே நான் நீ சொல்றதை கேக்கப் போறது இல்ல.. நீ என்னை விட்ரு..!! லேகா என்னை எவ்ளோ லவ் பண்றான்னு எனக்கு தெரிஞ்சு போச்சு.. அவ எனக்கு வேணும்..!!”

“புரியாம பேசாத ஜூனி..!! லவ் பண்ற வரைக்கும் எனக்கும் லேகாவுக்கும் எந்த பிரச்னையும் வரலை.. அவ பொண்டாட்டியா வந்தப்புறந்தான் பிரச்னை ஸ்டார்ட் ஆச்சு..!! அது மாதிரிதான்.. உனக்கு இப்போ இது சந்தோஷமா இருக்கும்.. ஆனா ஃப்யூச்சர்ல இதுக்காக நீ ரொம்ப ஃபீல் பண்ணுவ..!! இப்போ உனக்கு கிடைக்கிற மொளகா பஜ்ஜிக்கு ஆசைப்பட்டா.. அப்புறம் அவ மொத்து மொத்துன்னு மொத்துறதையும் வாங்கித்தான் ஆகணும்.. இப்போ உனக்கு கிடைக்கிற பிரியாணிக்கு ஆசைப்பட்டா.. பின்னாடி அவ உன்னை பிரிச்சு மேயுறதையும் தாங்கித்தான் ஆகணும்..!! இந்தமாதிரி சின்ன சின்ன மேட்டருக்கு ஆசைப்பட்டு.. ஃப்யூச்சர்ல பெருசு பெருசா வாங்கிக் கட்டிக்காத..!!”

“என்னவோ சீனி.. நீ லேகா பத்தி சொல்றதெல்லாம்.. நம்புறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது..!!”

நான் நம்பிக்கையற்றவனாய் சொல்ல, சீனியர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். எதையோ தீவிரமாக யோசிக்கிறார் போல தோன்றியது. அப்புறம் லேசான தொண்டை செருமலுடன் அவருடைய குரல் ஒலித்தது.

“இங்க பாரு ஜூனி..!! இன்னும் உனக்கு என் மேல நம்பிக்கை வரலைன்னு நெனைக்கிறப்போ.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! நம்பிக்கை இல்லாம நீ இந்த வேலையை செஞ்சா.. நான் நெனச்சதை நெறைவேத்த முடியாது..!! ஓகே.. நாம இப்போ ஒரு முடிவுக்கு வந்தாகணும்..!! நான் சொல்றதை கவனமா கேளு ஜூனி.. நான் இப்போ கால் கட் பண்றேன்.. உனக்கு ஒரு பத்து நிமிஷம் டைம் தர்றேன்..!! நல்லா யோசி..!! பத்து நிமிஷம் கழிச்சு மறுபடியும் நான் கால் பண்றேன்.. என் மேல உனக்கு முழு நம்பிக்கை வந்தா.. காலை பிக்கப் பண்ணு.. இல்லனா வேணாம்..!! ஒருவேளை நீ பிக்கப் பண்ணலேன்னா.. அப்புறம் நான் உனக்கு கால் பண்ணவே மாட்டேன்.. உனக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன்..!! நல்லா யோசிச்சு ஒரு முடிவெடு..!! ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ.. என்னை நீ நம்ப மாட்டேன்னு சொல்றது.. உன்னையே நீ நம்ப மாட்டேன்னு சொல்றது மாதிரி.. !! நீ தப்பான முடிவெடுத்தா.. அதனால என்னை விட அதிகமா பாதிக்கப்படப் போறது நீதான்..!! இதைலாம் ஞாபகம் வச்சுக்கிட்டு நல்ல முடிவா எடு..!! ஓகே..??”

சீரியசான குரலில் சொன்ன சீனியர், காலை கட் செய்தார். இருண்டு போன செல்போன் திரையையே, இமைக்காமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சீனியர் சொன்ன வார்த்தைகளே மனதுக்குள் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த வார்த்தைகளில் இருந்த நியாயம் மெல்ல மெல்ல புரிந்தது. அவர்தான் நான் என்று நிரூபித்து விட்ட பின்பும், அவரை நம்பாமல் நான் இருப்பது முட்டாள்த்தனம் என்று தோன்றியது. லேகாவை நான் நம்புவது அப்புறம் இருக்கட்டும்.. முதலில் என்னையே நான் நம்பாமல் இருந்தால் எப்படி..???

தீவிரமான யோசனைகளிலேயே பத்து நிமிடங்கள் கழிந்தன. சில நொடிகளில் சீனியரிடம் இருந்து திரும்பவும் கால் வந்தது. நான் எடுக்கலாமா வேண்டாமா என்று ஐந்தாறு வினாடிகள் யோசித்தேன். அப்புறம் ஒரு முடிவுக்கு வந்தவனாய், என் கட்டை விரல் நகர்த்தி கால் பிக்கப் செய்தேன். காதில் வைத்தேன். நன்றியில் நனைந்த குரலாய் சீனியரின் குரல் ஒலித்தது.

“தேங்க்ஸ் ஜூனி..!!!”

“பரவால்ல சீனி..”

“இப்போ என்னை முழுசா நம்புறேல..?”

“நம்புறேன் நம்புறேன்.. வேற வழி..?? சொல்லு.. நான் என்ன பண்ணனும்..!!”

“ஓகே.. ஓகே.. மேட்டருக்கு வருவோம்..!! நாளைக்கு லேகாகிட்ட இன்னொரு பொய் சொல்லி.. அவளை கழட்டி விடலாமான்னு பாரு..”

“நான் என்ன சாலமன் பாப்பையாவா..? தினம் ஒரு திருக்குறள் மாதிரி.. டெயிலி ஒரு டூப்பு விட சொல்ற..? இனிமேலாம் அவளை பொய் சொல்லி கழட்டி விட முடியாது..!! அவ நம்ப மாட்டா..!!”

“ஏன்..???”

“நான் பொய் சொன்னா.. அவ என் கண்ணைப் பாத்தே கண்டு பிடிச்சுடுறாய்யா..!!”

“பொய் சொன்னா கண்டு பிடிச்சிடுறாளா..? ச்சை.. எங்கயோ போலீஸ் வேலைல சேர வேண்டியதுலாம்.. பொண்டாட்டியாகி நம்ம உசுரை வாங்குதுகப்பா..!!”

“இனிமே நீ சொல்ற ஐடியாவைத்தான் நான் அப்டியே ஃபால்லோ பண்ணப் போறேன் சீனி.. அவளை கழட்டி விட என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!!”

“ம்ம்ம்ம்… அப்படியா சொல்ற..? ம்ம்ம்ம்…” சொன்ன சீனியர் யோசனையில் ஆழ்ந்தார். அப்புறம் ஏதோ ஐடியா வந்தவர் போல சொன்னார்.

“ஒரு நிமிஷம் இரு ஜூனி.. வந்துர்றேன்..”

சீனியருடன் வீடியோ கால்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எழுந்து செல்ல, என்னுடைய செல்போன் வெறும் சேரை மட்டும் இப்போது காட்டியது. ஓரிரு நிமிடங்கள்..!! அப்புறம் சீனியர் அந்த புத்தகத்துடன் அந்த சேரில் வந்து அமர்ந்தார். இல்லை இல்லை.. அது புத்தகம் இல்லை.. டைரி..!! என்னுடைய இந்த வருட டைரியாகத்தான் இருக்க வேண்டும். இதோ.. என் அறையில் புத்தம் புதிதாக இருக்கும் இதே டைரி, சீனியரின் கையில் பழுப்பேறிப் போய் பழசாய்..!! சீனியரிடம் ஆர்வமாக கேட்டேன்.

“சீனி.. அது நம்ம 2011 டைரிதான..?”

“ஆமாம் ஜூனி.. இதுல நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.. ஏதாவது ஐடியா கெடைக்குதான்னு பாக்கலாம்..!!”

சீனியர் சொல்லிவிட்டு டைரியில் எழுதியிருப்பதை வாசிக்க ஆரம்பித்தார். நான் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நாளைக்கு அந்த டைரியில் நான் எழுதப் போவதை, இப்போது சீனியர் என் கண்முன்னே வாசித்துக் கொண்டிருந்தார். வாசிக்க வாசிக்க, காக்காவுக்கு மேக்கப் போட்டிருந்த மாதிரியான அவருடைய முகம் மேலும் கருத்தது. ஒருமாதிரி கவலை தோய்ந்த முகத்துடன் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

“என்னாச்சு சீனி..?” நானும் அவருடைய கவலை தொற்றிக் கொண்டவனாய் கேட்டேன்.

“நாளைக்கு ரொம்ப ரொம்ப டேஞ்சரான நாள் ஜூனி..” அவர் சொல்ல,

“என்னய்யா சொல்ற..?” இப்போது என்னையும் லேசாக பதற்றம் பற்றிக் கொண்டது.

“இப்போ இதை படிச்சதும்தான் எனக்கு நெறைய விஷயம் புரியுது..”

“என்ன புரியுது..?”

“இன்னும் ரெண்டு நாள்ல உனக்கு பேராப்பு வரப் போகுதுல..?”

“வரப்போகுதுன்னு முடிவே பண்ணிட்டியா..? சரி சொல்லு..!!”

“அந்த பேராப்புக்கு புள்ளையார் சுழி போட்ட மேட்டர் நாளைக்குத்தான் நடக்கப் போகுது..!!”

“யோவ்.. இது காமடி கதைன்ற நெனைப்பு கொஞ்சமாவது உங்களுக்கு இதுக்குதாயா..? ஏதோ.. பெரிய த்ரில்லர் ஸ்டோரி ரேஞ்சுக்கு.. இந்த பில்டப்பு கொடுக்குறீங்களே..? நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு கொஞ்சம் தெளிவா சொல்லுய்யா..!!”

“என்ன நடக்கப் போகுதுன்றது முக்கியம் இல்ல ஜூனி.. அதை நாம எப்படி அவாய்ட் பண்றோம்ன்றதுதான் முக்கியம்..!!”

“சரி.. அதை எப்படி அவாய்ட் பண்ணனும்னாவது சொல்லித்தொலை..!!”

“நான் சொல்றேன்.. ஆனா அதை கேட்டுட்டு நீ சிரிக்க கூடாது..!!”

“ஐயோ.. சிரிக்கலைப்பா.. சொல்லு..!!”

“நீ நாளைக்கு காலேஜுக்கு போறப்போ..”

“ம்ம்.. காலேஜுக்கு போறப்போ..??”

“ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!”

“என்னது..?????” காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாதவனாய் நான் ஒரு முகச்சுளிப்புடனே கேட்டேன்.

“நீ ஜட்டி போட்டுட்டு போகணும்..!!!”

சீனியர் அழுத்தம் திருத்தமாக சொன்னார். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, பட்டென கால் கட்டாகி என் செல்போன் ஸ்க்ரீன் இருண்டது. ஐயையோ..!! என்ன இது..?? கால் ஏன் கட் ஆகிவிட்டது..?? சீனியர் கட் செய்தாரா..?? இல்லை வேறு ஏதும் ப்ராப்ளமா..?? எனக்கு எதுவும் புரியவில்லை..!! ஒரு அரை மணி நேரம் இருக்கும்.. நான் வெற்று ஸ்க்ரீனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தேன். சீனியரிடம் இருந்து திரும்ப கால் வருமென்று காத்திருந்தேன். ஆனால் கால் வரவே இல்லை..!! காது வரை கிழியும் கொட்டாவியுடன் தூக்கம்தான் வந்தது..!! எந்தக்கவலையும் இல்லாமல் வாய் பிளந்தவாறு உறங்கிப் போனேன்.

காலையில் எழுந்த போதுதான் சீனியர் சொன்னது ஞாபகம் வந்தது. இன்று பிரச்னையான நாள் என்ற உண்மை உறைத்தது. என்ன பிரச்னை என்று எனக்கு தெரியாது. ஆனால் அந்த பிரச்னையில் இருந்து தப்பிக்கும் உபாயம் என்னுடைய ஜட்டி என்பது மட்டும் தெரியும். என்னிடம் மொத்தம் ஐந்து ஜட்டிகள் உண்டு. ஐந்துமே VIP..!! ப்ளூ கலரில் ரெண்டு.. பிரவுன் கலரில்… சரி சரி.. அந்த டீட்டெயில் எல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறேன்..!! அதில் ஏதாவது ஒன்றை இன்று அணிந்து செல்லவேண்டும்.. அவ்வளவுதான்..!! அதுதான் எனது இன்றைய லட்சியம்..!!

எங்கள் ரூமை ஒட்டியிருக்கும் பால்கனியில் ஒரு கொடி கட்டியிருப்போம். அதில்தான் துணிகளை எல்லாம் காயப் போடுவது. என்னுடைய ஜட்டிகள் எல்லாம் அங்குதான் தொங்கும். குளித்து முடித்து வெளியே வந்து, அந்த கொடியை பார்த்தவன் நிஜமாகவே ஷாக்காகி போனேன். நேற்று இரவு பெய்த பலத்த மழை அப்போதுதான் எனக்கு நினைவிற்கு வந்தது. என்னுடைய நான்கு ஜட்டிகள் மழையில் நனைந்து போய், தலை துவட்டி விட ஆளில்லாமல் ஈரமாக தொங்கிக் கொண்டிருந்தன. பொலபொலவென கண்ணீர் கொட்டியபடி பரிதாபமாக காட்சியளித்தன.

ச்சே..!! என்ன கொடுமை இது..??? ஈரத்துடன் இருக்கும் இவைகளை எப்படி அணிந்து செல்வது..??? நான் சில வினாடிகள் எரிச்சலும் சலிப்புமாய், என் ஈர ஜட்டிகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் வேறு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நேற்று அணிந்து சென்ற ஜட்டியை, கல்லூரி முடிந்து வந்ததும், சேரில் கழட்டி வீசியது ஞாபகம் வந்தது. சீனியர் எச்சரித்திருக்கிறார்.. ஜட்டி அணிந்து செல்ல வேண்டும் என்று..!! அழுக்கு ஜட்டியாக இருந்தாலும் பரவாயில்லை.. அணிந்து செல்லலாம் என்று முடிவுக்கு வந்தேன்.

ஹாலுக்கு சென்றேன். நேற்று கழட்டிப்போட்ட அந்த சேரில் என் ஜட்டியை தேடினேன்.. தேடினேன்.. தேடினேன்… காணோம்..!!!! ஐயையோ.. என்ன இது..?? எங்கே போனது என் ஜட்டி..?? நேற்று இங்கேதானே கழட்டிப் போட்டேன்..?? அதற்குள் எங்கே சென்றிருக்கும்..?? ஒன்றுமே புரியவில்லை..!! ச்சை.. காலேஜுக்கு ஒரு ஜட்டி அணிந்து செல்வதில் இவ்வளவு கஷ்டமா..??

நான் உச்சபட்ச எரிச்சலில் இருக்கும்போதே, ஜானி அறைக்குள் நுழைந்தான். அவன் கையில் எங்கள் இருவருக்குமான காலை டிபன் பார்சல்..!! நான் எதையோ தேடிக்கொண்டிருந்ததை பார்த்தவன், பார்சலை தரையில் வைத்தவாறே ஆர்வமாக கேட்டான்.

“என்ன மச்சி தேடினு இருக்குற..?”

“என் ஜட்டிடா..!! நைட்டு இங்க கழட்டிப் போட்டேன்.. இப்போ காணோம்..!! எங்க போச்சுன்னு தெரியலை..!!”

“ஓ..!! அது உன் ஜட்டியா..??” அவன் இப்போது சற்றே ஷாக்கான மாதிரியான வாய்சில் கேட்டான்.

“ஆமாம்.. ஏன்.. பாத்தியா நீ..?”

நான் தேடுவதை விட்டுவிட்டு அவன் முகத்தை ஏறிட்டபடி கேட்டேன். அவன் இப்போது இனிமா குடித்த குரங்கு மாதிரி விழித்தான். அப்புறம் ‘ஹிஹிஹி…’ என அசட்டுத்தனமாய் ஒரு இளிப்புடன் சொன்னான்.

“ஸாரி மச்சி..”

“ஸாரியா..? எதுக்கு ஸாரி..”

“அது என் ஜட்டினு நெனச்சு எடுத்து போட்டுக்கினேன் மச்சி… கோவிச்சுக்காத..!!”

அவ்வளவுதான்…!! அப்போது மட்டும் என் கையில் ஒரு உருட்டுக்கட்டை இருந்திருந்தால், அவனை அடித்தே கொன்றிருப்பேன். அந்த அளவுக்கு அவன் மேல் ஆத்திரம்..!! இரண்டு வருடங்களாக இந்த நாயை ரூம் மேட்டாக வைத்துக் கொண்டு, இம்சையை தவிர வேறு ஏதாவது நான் அனுபவித்திருக்கிறேனா..? எங்கிருந்துதான் என் வாழ்வில் வந்து நுழைந்ததோ இந்த எடுபட்ட நாய்..!! ஆத்திரத்துடன் கத்தினேன்..!!

“த்தா..!! மானங்கெட்ட மடக்கூ…!! அறிவில்ல உனக்கு..? இத்தனை நாளா என் பேன்ட், ஷர்ட்லாம் எடுத்து போட்டுக்கிட்ட.. இப்போ ஜட்டியையும் போட ஆரம்பிச்சுட்டியா..?? கேடு கேட்ட கேனைக்கூ..!!”

“ஏன் மச்சி திட்டுற..? நான்தான் தெரியாம போட்டுட்டேன்னு சொல்றேன்ல..?”

“அப்டித்தாண்டா திட்டுவேன்.. அறிவுகெட்ட முட்டாக்கூ..!! சோத்தைத்தான திங்கிற..??” நான் கண்ணா பின்னாவென்று திட்ட ஆரம்பிக்க, இப்போது ஜானியும் கடுப்பானான்.

“என்ன மச்சி.. ரொம்ப ஓவராத்தான் திட்டுற..? இந்தா உன் ஜட்டி.. நீயே வச்சுக்கோ.. என்ஜாய் பண்ணு..!!”

சொன்னவன் பட்டென்று குனிந்து, லுங்கிக்குள் கைவிட்டு, என் ஜட்டியை அவிழ்த்து வீசினான். என் முகத்தை நோக்கி அந்த ஜட்டி பறந்து வர.. விஷ வாயு தாக்கிவிடக் கூடாதென்று.. விலகிக்கொண்டேன் நான் அவசரமாக..!! அவன் அவிழ்த்து வீசிவிட்டு, ஆத்திரத்துடன் அவனுடைய ரூமுக்குள் புகுந்து கொண்டான்.

நான் தலையை திருப்பி கீழே கிடந்த என் ஜட்டியை பார்த்தேன். ‘இப்படி செல்லக் கூடாத இடத்துக்கு சென்று வந்துவிட்டோமே’ என்று.. சோகமாக.. சுனங்கிப்போய்.. சுருண்டு கிடந்தது என் ஜட்டி..!! பார்க்கவே பரிதாபமாக இருந்தது..!! இனி இந்த ஜட்டியை வைத்து எப்படி என்ஜாய் செய்வது..? பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி ஈமச்சடங்குதான் நடத்த வேண்டும்..!!

அப்புறம் அன்று ஜட்டி அணியாமல்தான் காலேஜுக்கு சென்றேன். சில நேரங்களில் எனக்கு இந்த மாதிரி நேர்ந்திருக்கிறது… ஜட்டி அணியாமல் செல்வது..!! ஹிஹி…!! என்னவென்று எனக்கு சொல்ல தெரியவில்லை.. அன்றெல்லாம் எனக்கு ஒரு புதுவித உற்சாகமாக இருக்கும்..!! குளுகுளுவென.. ஜிலுஜிலுவென..!!

ஆனால்.. இன்று அந்த மாதிரி இல்லை..!! ‘சீனியரின் எச்சரிக்கையை மீறி ஜட்டி அணியாமல் வந்திருக்கிறேன். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ’ என்று ஒரு மனம் கவலைப்பட்டது..!! ‘ஜட்டிதான..? அதனால என்ன பெருசா நடந்துடப் போகுது..?’ என்று இன்னொரு மனம் கலாய்த்தது..!! எதற்கும் எச்சரிக்கையாய் இருக்கலாம் என்று.. எட்டியே இருந்தேன் லேகாவிடம் அன்று..!! மாலை வரை ஒரு பதைபதைப்புடனே நகர்ந்தது..!!

மாலை கல்லூரி முடிந்ததும், லேகாவிடம் கூட எதுவும் சொல்லிக் கொள்ளாமல், க்ளாஸ் விட்டு வெளியேறி, வேகமாய் நடையை போட்டேன். ரூமுக்கு சென்று முடங்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுடன், விறுவிறுவென நடந்தேன். கல்லூரி கேட்டை விட்டு வெளிய வந்தபோது, எனக்கு முன் என்னை மறித்தவாறு வந்து நின்றது அந்த ஸ்கூட்டி..!! லேகாதான்..!!! ஹெல்மட் க்ளாஸை ஏற்றிவிட்டபடி, உதட்டில் புன்னகையுடன் சொன்னாள்.

“என்னடா.. சொல்லாமக் கொள்ளாம கெளம்பிட்ட..?”

“அ..அது.. அது.. ஒண்ணுல்ல லேகா..!! சும்மாதான்..!!”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments