அன்புள்ள ராட்சசி – பகுதி 62

ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!

“அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!

ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!

ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. ‘வீல்.. வீல்..’ என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!!

அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!!

“மீரா…!!!!!”

என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை.

“மீரா…!!!!!”

மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!

“அசோக்…!!!!!”

அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!!

போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. ‘மீரா…!!’ என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!

“அசோக்..!!!”

பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!

“அசோக்..!!!”

மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!

“ஐயோ.. ரத்தம்..!!!!” மீரா அழுகுரலில் அலறினாள்.

“எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??” புலம்பி அரற்றினாள்.

பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!

“நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??”

“ஐயோ.. அசோக்..!!!!” அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!” கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!!

“இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!”

அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் ‘ஓ’ வென்று கத்தினாள்..!!!

“யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!”

அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!

ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..

“மீரா..!!!”

என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!

“மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!”

அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..

“நா..நான் இங்க இருக்குறேன்..!!”

அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!!

மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!

இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. ‘இடத்தை காலி செய்வது நல்லது’ என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!

அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!

“ஐ லவ் யூடா.. ஐ லவ் யூ..!!”

நீண்ட நேரத்திற்கு பிறகு.. மகனும் மருமகளும் ஓரளவு பேசி ஓய்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன், பாரதி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்..!! அவர்களோ இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க.. ஒருகணம் திகைத்துப் போனாள்.. பிறகு..

“ம்க்கும்..!!” என்று சப்தமெழுப்பி அவர்களை இந்த உலகுக்கு இழுத்து வந்தாள்..!!

அணைத்திருந்தவர்கள் உடனே விலகிக் கொண்டனர்.. அசோக் அசட்டுத்தனமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.. மீரா வெட்கப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்..!!

“அவனுக்கு சாப்பிட குடுக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதான் சாதம் கலந்து எடுத்துட்டு வந்தேன்..!!”

“எங்கிட்ட குடுங்க அத்தை.. நான் பாத்துக்குறேன்..!!”

சொன்ன மீரா.. பாரதியின் கையிலிருந்த பவ்லை வாங்கிக்கொண்டாள்..!! ‘தனக்கப்புறம்.. தன் மகனுக்கு.. தன்னிடத்தில் இன்னொருத்தி..’ என்பது மாதிரியான உணர்வு பாரதிக்கு தோன்ற.. ஸ்னேஹமான ஒரு புன்னகையுடன் மீராவின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்..!! இருவரையும் மீண்டும் தனிமையில் விட்டு.. அந்த அறையினின்றும் அகன்றாள்..!!

பருப்புடன் சேர்த்து கூழ் மாதிரி கரைக்கப்பட்டிருந்த சாதம்.. அதை ஸ்பூனில் அள்ளி மீரா நீட்ட, அசோக் ஆசையாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.. மீராவின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே வாயை அசைபோட்டான்..!! அவனுடைய தலையில் போடப்பட்டிருந்த கட்டு.. நெற்றி, கன்னம், கை, முழங்கால் என்று ஆங்காங்கே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர்கள்.. எதையும் கவனிக்கிற நிலையில் அவன் இல்லை.. அவனது கவனம் முழுதும் மீராவை ஆசையும், ஏக்கமுமாக பார்ப்பதிலேயே இருந்தது..!!

“ரொம்ப பயந்துட்டேன் மீரா.. எங்க மறுபடியும் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு..!!”

“ம்ம்.. தெரிஞ்சது..!! ஜீப் வர்றதுகூட கண்ணு தெரியாம அப்படியே தாண்டி குதிச்சு ஓடி வர்றான்.. லூசு..!!”

“ஹ்ஹாஹ்..!!”

“சிரிக்காத..!! அப்படி என்ன அவசரம்..?? உன்னை அந்தக்கோலத்துல பாத்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? கொஞ்ச நேரம் என் உசுரே எங்கிட்ட இல்ல அசோக்..!! அழுறேன்.. அலர்றேன்.. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல..!! நல்லவேளை.. ஒரு நல்ல மனுஷன் ஹெல்ப் பண்ணாரு.. உடனே உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது..!! பவானி அக்கா ஆபீஸ்க்கு கால் பண்ணினேன்.. எல்லாரும் உடனே கெளம்பி வந்துட்டாங்க..!! இப்போ வெளில இருக்காங்க..!!”

“ம்ம்..!!”

“அவ்வளவு பிடிக்குமாடா என்னை..??” மீரா ஏக்கமாக கேட்க,

“ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!!” அசோக்கின் குரல் காதலாக ஒலித்தது.

“நெனச்சதை சாதிச்சுட்டேல நீ..?? சொன்ன மாதிரியே என் எதிர வந்து நின்னுட்டல..?? எப்படியோ கஷ்டப்பட்டு என்னை தேடிக் கண்டுபிடிச்சுட்ட..!!”

“நான் கண்டுபிடிக்கல.. நம்ம காதல்தான் உன்னை காட்டிக் குடுத்துடுச்சு..!! உன் மேல இருக்குற காதலாலதான், உன் கண்ணை வச்சே உன்னை..”

“ம்ம்.. அத்தை எல்லாம் சொன்னாங்க..!! எப்படிலாம் என்னை தேடின.. என்னல்லாம் கஷ்டப்பட்டேன்னு..!! தூக்க மாத்திரை டப்பாலாம் தூக்கிட்டு போனியாம்..??”

“ஓ.. அதையும் சொல்லிட்டாங்களா..??”

“அப்படியே அறையணும்..!!”

“அறைஞ்சுக்கோ..!!”

அசோக் கூலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மீரா பாய்ந்து சென்று அவனது உதடுகளை கவ்விக் கொண்டாள்..!! அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில்.. ஒரு அழுத்தமான, ஆவேசமான முத்தம்..!! அவனுக்கு மூச்சுத் திணறிப் போகிற மாதிரி.. அவனது உதட்டு ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்தாள்..!! ஆரம்பத்தில் திகைத்த அசோக்.. அப்புறம் தனது உதடுகளை அவளுக்கு சுவைக்க கொடுத்துவிட்டு.. அதில் விழைந்த இனிப்பினையும், இன்பத்தினையும் மட்டும் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்..!!

அரை நிமிடம் கழித்துத்தான் அவர்களது உதடுகள் தனித்தனியே பிரிந்தன..!! மீரா அசோக்கின் முகத்தையே இன்னும் காதலாக பார்த்துக்கொண்டிருக்க.. அவன் தனது உதடுகளை மடித்து நாக்கினால் சுவைத்து பார்த்து.. கண்ணிமையை சிமிட்டி குறும்பாக சொன்னான்..!!

“ச்சோ.. ச்ச்வீட்..!!”

“ச்சீய்.. போடா..!!”

தனது பழைய டயலாக்கை அசோக் நினைவுபடுத்த.. மீராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின..!! இருவரும் இறுக்கம் தளர்ந்து சிரித்துக் கொண்டார்கள்..!!

“ம்ம்.. இதுதான் உங்க ஊர்ல அறையுறதா..??” அசோக் கேலியாக கேட்க,

“ஹ்ம்ம்ம்ம்… ஆ..மாம்..!!” மீராவும் குறும்பாகவே சொன்னாள்.

“வாவ்..!! இந்த மாதிரி உன்கிட்ட நெறைய அறை வாங்கணும் போல இருக்கே..??”

சொல்லிக்கொண்டே அசோக் உதடுகளை குவித்து மீராவை நெருங்க, அவள் அவனது நெஞ்சில் கைவைத்து அவனுடைய முன்னேற்றத்தை தடுத்தாள்.

“நோ நோ..!! கல்யாணம் ஆகுற வரை.. ஒரு நாளைக்கு ஒரு அறைதான்.. இன்னைக்கு கோட்டா ஓவர்..!!” மீரா கறாராக சொல்ல,

“ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..!!” அசோக் சிறுபிள்ளையாக சிணுங்கினான்.

அவன் அவ்வாறு சிணுங்கிக் கொண்டிருந்தபோதே..

“இன்று மாலை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர்…”

அறைக்குள் இருந்த டிவியில் ந்யூஸ் வாசிக்கப்பட… இருவரும் கவனம் கலைந்து, டிவியை திரும்பி பார்த்தார்கள்..!! அசோக்தான் கேஷுவலான குரலில் ஆரம்பித்தான்..!!

“இவங்களுக்கு இதே வேலையா போச்சுல மீரா.. யாராவது ஃபோன் பண்ணி எதையாவது சொன்னா.. அதை அப்படியே நம்பிடவேண்டியது.. ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது..!! பாரு.. எல்லாரையும் என்ன பாடு படுத்திருக்காங்கன்னு..!!”

“அதுக்காக.. அந்த காலை அப்டியே கண்டுக்காம விட்ருக்கனும்னு சொல்றியா..?? ஏற்கனவே.. சென்னைல டெரரிஸ்ட் அட்டாக் பண்ண ப்ளான் பண்ணிருக்காங்கன்னு.. இண்டெலிஜண்ட் ரிப்போர்ட் வேற வந்திருக்கு..!! இப்படிப்பட்ட நேரத்துல இந்த மாதிரி ஃபோன் கால்லாம் எப்படி கேஷுவலா எடுத்துக்குறது..?? ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி பண்ணினது சரிதான்..!!”

இயல்பான குரலில் சொல்லிவிட்டு மீரா சாதம் எடுத்து ஸ்பூனில் நீட்ட.. அசோக் வாயை திறக்காமல் இவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுடைய உதடுகளில் வேறு ஒரு குறும்புப் புன்னகை வழிந்தது..!! அவனது செய்கைகளின் அர்த்தம்.. ஆரம்பத்தில் மீராவுக்கு புரியவில்லை.. அசோக்கையே குழப்பமாக பார்த்தாள்..!! அப்புறம் அதன் அர்த்தம் புரிந்ததும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒரு திகைப்பு.. அவளது உதடுகள் ‘ஓ’வென்று குவிந்துகொண்டன..!!

“ஏய்ய்ய்.. ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்கனு கால் பண்ணது நீதானா..??”

“ஹேய்ய்ய்.. சத்தம் போடாத..!! போலீஸ்க்கு தெரிஞ்சதுன்னா.. அப்புறம் என்னை புடிச்சுட்டு போய்டுவாங்க..!!”

“அடப்பாவி..!!! ஏண்டா அப்படி பண்ணின..??” மீரா இப்போது குரலை தாழ்த்திக் கொண்டாள்.

“பின்ன என்ன பண்றது.. நீ பாட்டுக்கு பத்து நிமிஷத்துல ஃப்ளைட்டுன்னு போனை கட் பண்ணிட்ட..!!”

“ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!”

“ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!”

“என்ன அட்வர்டைஸ்மன்ட்..??”

“அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!” அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.

“ஹஹாஹா..!!! லூசு..!!!!”

“ஆமாம்.. உன் மேல..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments