அன்புள்ள ராட்சசி – பகுதி 35

“இவளுகளலாம்.. நடுரோட்டுல ஓடவிட்டு.. அ..அப்டியே என்கவுன்டர் பண்ணனும்..!!”

“…………………………….”

“காதலிக்கிறப்போ தெரியலையா.. கட்டிப்புடிச்சு படுத்துக் கெடக்குறப்போ தெரியலையா..?? கல்யாணம்னு வந்தவுடனே மட்டும் கண்ணு தெரிஞ்சுடுச்சாக்கும்.. நான் போலீஸ்காரன்னு..!!”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“…………………………….”

“அந்த பன்னாடை நாயை பாக்குறதுக்கு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே.. போலீஸ் ஆகணும்னு ஆசை எனக்கு..!! திடீர்னு வந்து.. அப்பன் திட்றான்.. ஆத்தா வையிறான்னு மூக்கை சிந்தினா..??”

ஸ்ரீனிவாச பிரசாத் தொடர்ந்து ஆதங்கத்துடன் புலம்பிக்கொண்டே இருந்தார். அசோக் தனது கதையை ஏற்கனவே அவருக்கு சொல்லி முடித்திருந்தான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தின் முறை. அமைதியாக அவருடைய புலம்பலை நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்த அசோக், பிறகு ஆறுதலாக அவரிடம் சொன்னான்.

“வி..விடுங்க ஸார்.. அதையே நெனைச்சுட்டு இருக்காதீங்க..!!”

“எப்படிடா விடுறது..?? அவ விட்டுட்டு போய் எட்டு வருஷம் ஆகுது.. இன்னும் இங்க உக்காந்து அப்படியே கொடைஞ்சுட்டு இருக்காடா..!!” நெற்றியை தட்டிக்காட்டியவாறே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு முகத்தை வெடுக்கென வேறுபக்கமாக திருப்பி கத்தினார்.

“டேய் அய்யனாரு.. இன்னொரு கட்டிங் கொண்டா..!!”

“போ..போதும் ஸார்.. ஏற்கனவே ரொம்ப குடிச்சுட்டீங்க..!!” அசோக்கின் கனிவு அவருக்கு ஏரிச்சலையே மூடியது.

“ஏய்.. என்ன.. அக்கறையா..?? அறைஞ்சு பல்லை உடைச்சுடுவேன்..!! அக்கறையா பேசுற யாரையும் நான் சுத்தமா நம்புறது இல்ல.. அதை மொதல்ல புரிஞ்சுக்கோ..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் கண்களை உருட்டி சூடாக சொன்னார். பிறகு ஏதோ ஞாபகத்துக்கு வந்தவராய், தலையை கவிழ்த்துக் கொண்டார். அசோக் எதுவும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருக்க, அவரும் சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தார். அப்புறம் தலையை மெல்ல உயர்த்தி, சற்றே தளர்ந்து போன குரலில் சொன்னார்.

“நா..நான் குடிக்கிறது அவளுக்கு பிடிக்கலைன்னு சொன்னாடா.. ஒரு வருஷத்துக்கு மேல சுத்தமா இதை தொடாம இருந்தேன் தெரியுமா..!! இப்போ பாரு.. டெய்ய்ய்லி..!!”

அவருடைய குரலில் தொனித்த வேதனையை அசோக்கால் புரிந்து கொள்ள முடிந்தது.

‘இவன் நிஜமாகவே அன்புக்காக ஏங்குகிறான்.. ஆனால் எவளோ ஒருத்தி அன்பு காட்டுவது போல நடித்து ஏமாற்றிய பாதிப்பினால்.. யாருடைய அன்பும் தனக்கு அவசியம் இல்லை என்று அடம் பிடிக்கிறான்.. பாவம்தான்..!!’

அசோக் இப்போது ஸ்ரீனிவாச பிரசாத்தை பார்த்த பார்வையில் ஒருவித பரிதாபம் கலந்திருந்தது.

அய்யனார் வந்து அரைகுவார்ட்டரை க்ளாஸில் கவிழ்த்து சென்றான். அதில் சோடா ஊற்றி கலக்கிய ஸ்ரீனிவாச பிரசாத், அப்படியே தொண்டைக்குள் ஊற்றிக் கொண்டார். ‘க்க்க்ஹ்ஹாஹ்..!!’ என்றொரு கனைப்புடன் முகத்தை சுருக்கிக் கொண்டார். சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக்கொண்டவர், அசோக்கின் பிரச்சினைக்கு வந்தார்.

“அவ பேர் என்ன..??”

“தெ..தெரியாது ஸார்..!!”

“ப்ச்.. அவ சொன்ன அந்த டுபாக்கூர் பேரைத்தான்டா கேக்குறேன்..!!”

“மீரான்னு சொன்னா..!!”

“ஹ்ம்ம்..!! ரொம்ப புடிக்குமா அவளை..??”

“ம்ம்..!!”

“ரொம்ப அழகா இருப்பாளோ..??”

“ஆ..ஆமாம்..!!”

“ம்ம்ம்ம்..!! அழகா பொறந்து தொலைச்சு.. நம்ம உசுரை எடுத்து தொலைக்குங்க.. சனியனுக..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் அந்த மாதிரி வெறுப்பாக சொன்னவிதம்.. அசோக்கின் உதட்டில் மெலிதான ஒரு புன்னகையை வரவழைத்தது..!! இரண்டு நாட்களுக்கு பிறகு.. அவனது இதழ்களில் பூத்த புன்னகை அது..!!

“நூறு நாள் அவகூட ஊர் சுத்திருக்கேன்னு சொல்ற.. ஒரு ஃபோட்டோ கூடவா எடுத்து வச்சுக்கல..??”

“மொபைல்ல வச்சிருந்தேன் ஸார்.. ஆ..ஆனா..!!”

“ஆனா..??”

“அவ போறப்போ.. அந்த மெமரிகார்டை உருவிட்டு போயிட்டா..!!”

அசோக் இயல்பாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் புகை வழிகிற வாயுடன் சற்றே அதிர்ந்து போய் அவனை பார்த்தார். ‘என்ன மாதிரியான கேரக்டர் அது..??’ என்று மனதுக்குள்ளேயே ஒரு சில வினாடிகள் யோசித்திருப்பார் போலிருக்கிறது. பிறகு ஒரு சலிப்பு பெருமூச்சை வெளிப்படுத்தியவர்,

“செம கேடியா இருப்பா போல..??”

“ம்ம்..!!”

“எ..எப்படிடா இப்படி ஒருத்திட்ட போய் மாட்டுன..?? செம கேனையனா இருப்ப போல..??” என்று கேட்டார்.

“………………………..”

அசோக் பதில் சொல்லவில்லை. விரக்தியாக புன்னகைத்தான். ஒரு சிலவினாடிகள் அமைதியாக இருந்த ஸ்ரீனிவாச பிரசாத், பிறகு பேச்சை வேறு பக்கம் திருப்பும் விதமாக கேட்டார்.

“ஹ்ம்ம்.. வீட்ல மேட்டரை சொல்லிட்டியா..??”

“இன்னும் இல்ல ஸார்..!!”

“ஏன்..??”

“வீட்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.. பையனுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னு.. எல்லாருக்குமே ரொம்ப சந்தோஷம்..!! இப்போ.. இந்த மேட்டர் தெரிஞ்சா.. அந்த சந்தோஷம் சுத்தமா காணாமப் போயிடும் ஸார்.. அப்படியே மனசு உடைஞ்சு போயிடுவாங்க..!!”

“ம்ம்..!!”

“இந்தப் பிரச்சினைக்கு காரணமே நானும் என் ஃப்ரண்ட்சுந்தான்.. வீட்டுக்கு எதுவும் தெரியாம, நாங்களே இந்தப் பிரச்சினையை சால்வ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!”

“ம்ம்..!! அதுவும் சரிதான்..!! நீ சொன்னதை வச்சு பாத்தா.. உங்க வீட்டு ஆளுகலாம் ரொம்ப சாஃப்ட் டைப்பா தோணுது.. இந்த ஷாக்கை எப்படி தாங்குவாங்களோ..?? இப்போதைக்கு அவங்களுக்கு தெரியாம இருக்குறதே நல்லது..!!”

“………………………..”

“ஹ்ம்ம்… சரிடா.. எனக்கு ஒரு நாலஞ்சு நாள் டைம் குடு.. கம்ப்ளைன்ட்லாம் எதுவும் வேணாம்.. நான் பாத்துக்குறேன்.. என்ன..??”

“ம்ம்..!!”

“ப்ராப்பர் கம்ப்ளைன்ட் இல்லாம மூவ் பண்றதால.. கொஞ்சம் டிலே ஆகலாம்.. மத்தபடி எதும் பிரச்சினை இல்ல..!!”

“ம்ம்..!!”

“நீ சும்மா கவலைப்பட்டுட்டு இருக்காத.. கண்டுபுடிச்சிடலாம்.. புரியுதா..??”

“சரி ஸார்..!!”

“ம்ம்ம்..!!! சரி வா.. கெளம்பலாம்.. டைமாச்சு..!!”

சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சேரில் இருந்து மெல்ல எழுந்தார்.. அவருடைய உடம்பில் போதை மிதமிஞ்சி போயிருக்க.. எழுந்ததுமே கால்கள் தடுமாறினார்..!! கால்கள் தடுமாறி கீழே விழப் போன அவரை.. அசோக் அவசரமாக நகர்ந்து, தாங்கிப் பிடித்துக் கொண்டான்..!! உடனே அவருடைய முகம் படக்கென மூர்க்கமாகிப் போனது..!!

“ப்ச்.. விட்றா..!!” என்று சீற்றமாக சொன்னவர்.. அசோக்கின் கையை வெடுக்கென உதறினார்..!!

“எ..எனக்கு யார் தயவும் தேவை இல்ல..!!”

வாய் குழற சொன்னவர்.. கால்கள் இரண்டும் தள்ளாட.. உடல் சீரில்லாமல் அல்லாட.. தடுமாற்றத்துடனே முன்னால் நடந்தார்..!! அசோக் முகத்தில் ஒருவித அன்புப் புன்னகையுடன்.. ஓரிரு வினாடிகள் அவரையே பார்த்தான்.. பிறகு மெல்ல நடந்து அவரை பின்தொடர்ந்தான்..!!

அத்தியாயம் 19

‘ஸ்ரீனிவாச பிரசாத்திடம் வேலையை ஒப்படைத்தாயிற்று’ என்று.. அசோக்கால் அமைதியாக இருக்க முடியவில்லை.. மீராவை தேடிக்கண்டுபிடிக்க.. தன்னால் இயன்ற அளவு முயன்றான்..!! அவர் அவகாசம் கேட்டிருந்த அந்த ஐந்து நாட்களுக்குள்ளேயே.. அவளை கண்டுபிடித்துவிடவேண்டுமென.. முனைப்புடன் செயலாற்றினான்..!! இன்னும் சொல்லப்போனால்.. ‘அவள் இல்லாமல் ஐந்து நாட்கள் கழிக்கவேண்டுமா’ என்ற அவனுடைய மனதின் மலைப்புத்தான்.. அவனது செயலின் முனைப்புக்கு காரணம்..!!

அவனுடைய செயல்பாடு பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக.. அவனது மனநிலையை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்..!!

முதலில்.. ‘இத்தனை நாளாய் தன்னை ஏமாற்றியிருக்கிறாள்’ என்றெல்லாம்.. இப்போது அசோக்கிற்கு மீரா மீது வருத்தம் இல்லை..!! ஆரம்பத்தில் அவள் மீது எழுந்த திடீர் கோபமும்.. அப்புறம் நிதானமாக யோசிக்கையில் காணாமல் போனது..!! அவளுடைய நிலையை இவன் தெளிவாக புரிந்துகொண்டான் என்றுதான் சொல்லவேண்டும்..!! பேச ஆரம்பிக்கையிலே அவளுக்கு தன் மீது நல்ல அபிப்ராயம் இல்லை எனும்போது.. அவளுடைய பெயரைக்கூட பொய்யாக உரைத்தது பெரிய பிழையாக அவனுக்கு தோன்றவில்லை..!! ஆனால் பின்னாளில்.. அந்த மாதிரி பொய் உரைத்து தன்னுடன் பழகியதற்காக.. நிச்சயம் அவள் வருந்தியிருப்பாள் என்று அசோக் நம்பினான்..!!

“இவனை நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு இருக்குறன்னு எந்த நேரமும் என் மனசுல ஒரு உறுத்தல்.. ராத்திரில நிம்மதியா தூங்க கூட விடாது அந்த உறுத்தல்..!!”

அன்று பார்க்கில்.. மீரா சிந்திய கண்ணீர் வார்த்தைகளின் முழு வீச்சு.. அசோக்கிற்கு இப்போது தெளிவாக புரிந்தது..!! ‘பொய் சொல்லிவிட்டாளே’ என்று இவன் இப்போது துடிப்பதை விட.. ‘பொய் சொல்லிவிட்டோமே’ என்று அவள் பல நாட்களாய் பலமடங்கு துடித்திருக்கிறாள்..!! அவளுடைய வேதனையையும், வலியினையும்.. அந்த வார்த்தைகளிலும், கண்ணீரிலும்.. மிக ஆழமாகவும், தெளிவாகவும் உணர முடிகிறதே..??

அதே மாதிரி.. ‘தனது காதலை புரிந்துகொள்ளாமல் மீரா பிரிந்து சென்றுவிட்டாள்’ என்றும் அசோக் நினைக்கவில்லை..!! அவனது காதலை நன்றாக புரிந்து கொண்டதாலேயே.. பதிலுக்கு அவள் மனதில் பொங்குகிற காதலை அடக்க முடியாததாலேயே.. அவள் இந்த முடிவெடுத்திருக்கிறாள் என்று நம்பினான்..!!

“நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!”

“இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!”

‘அவளுக்கு ஏதோ பிரச்சினை என்று புரிகிறது.. உடலளவிலா, மனதளவிலா அல்லது இரண்டளவிலுமா என்பது தெளிவாக புரியவில்லை..!! என்ன பிரச்சினையாக இருந்தாலும்.. என்னிடம் அவளது நிலையை விளக்கி சொல்லியிருந்தால்.. எந்த தயக்கமும் இல்லாமல்.. ஏற்றுக்கொண்டிருப்பேன் நான் அவளை..!! அதை அவளுமே அறிவாள்.. என்னுடைய காதலின் ஆழத்தை அவள் கட்டாயம் அறிந்தே வைத்திருப்பாள்..!! அவ்வாறு அறிந்து வைத்திருந்ததால்தான்.. அவளது பிரச்சினையை சொல்லி.. ‘என்னை ஏற்றுக்கொள்கிறாயா அசோக்..?’ என்ற அபத்தமான கேள்வியை அவள் கேட்கவில்லை..!! நான் அவளை ஏற்றுக்கொள்வேன் என்பதை முன்கூட்டியே அறிந்துதான்.. அந்த வாய்ப்பை அவள் எனக்கு வழங்கவே இல்லை..!! ‘நான் பாவம் செய்தவள்.. நான் உனக்கு பொருத்தம் இல்லை.. எனவே நான் பிரிந்து செல்கிறேன்.. இதுதான் என் முடிவு.. இதை நீ ஏற்றுக்கொண்டாக வேண்டும்..’ என்பது மாதிரி.. ஒரு நிர்ப்பந்தத்தில் என்னை தவிக்கவிட்டு விலகியிருக்கிறாள் என்றால்.. எனது காதலையும் அவள் நன்றாக புரிந்து வைத்திருக்கிறாள்.. அவளுடைய காதலையும் நன்றாகவே எனக்கு உணர்த்தி சென்றிருக்கிறாள்..!!’

‘ஆனால்.. ஒரே ஒரு விஷயத்தைத்தான் அவள் தவறாக எடை போட்டுவிட்டாள்..!! அந்த விஷயத்தில்தான் எனக்கு அவள்மீதும், என்மீதும் ஒருசேர பரிதாபம் பிறக்கிறது..!! அவளை மறந்து.. வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள சொன்னாளே.. அங்குதான் அவள் என் மனநிலையை குறைத்து மதிப்பிட்டுவிட்டாள்..!!’

“என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..??”

‘எப்படி மீரா என்னால் முடியும்..?? நீதான் என் வாழ்க்கை என்று ஆனபின்.. எப்படி என்னால் அப்படி இருக்க முடியும்..?? நீ விலகிவிட்டால்.. நான் விட்டுவிடுவேனா..?? எளிதில் உனை கண்டறிய.. எந்த தகவலையும் விட்டு செல்லவில்லை என்கிற தைரியமோ உனக்கு..?? என்ன செய்வதென்றறியாது சோர்ந்துபோய்.. என் மனதை மாற்றிக்கொள்வேன் என்று நினைத்தாயோ..?? நான் தேடப்போகிறேன் மீரா.. தேடி உனை கண்டுகொள்ள போகிறேன்.. ஓடி வந்து கையில் அள்ள போகிறேன்..!! என் காதலை உனக்கு புரிய வைத்தேன் அல்லவா.. விரைவில்.. நீயன்றி என் வாழ்க்கைக்கு அர்த்தமேதும் இல்லை என்கிற உண்மையையும்.. உன்னை அறிந்துகொள்ள வைக்கிறேன்..!!’

மீராவை தேடிக்கண்டுபிடித்து.. அவளுக்கு தனது மனஉறுதியை உணர்த்தி.. அவளை சொந்தம் கொள்ளவேண்டும் என்ற முடிவில்.. அசோக் மிக தெளிவாக இருந்தான்..!!

மீராவை நெருங்கும் மார்க்கம் என.. அசோக்கின் மனதில் முதலாவதாக தோன்றிய விஷயம்.. வினோபா அநாதை விடுதிதான்..!! நிச்சயம் அவளுக்கு அந்த விடுதியுடன் நீண்ட கால தொடர்பு இருக்க வேண்டும்.. கட்டாயம் அவளுடைய தொடர்பு விவரங்கள்.. அந்த விடுதியின் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும்..!!

அசோக்கும் சாலமனும் அந்த விடுதிக்கு.. பைக்கில் வந்து இறங்கினார்கள்..!! கொஞ்சம் பழமையான ஆசிரமம்தான்.. ஆனால் நிறைய குழந்தைகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய.. நீண்ட வரலாறுடைய ஆசிரமம்..!! பெரிதாக அகலமாக மையக்கட்டிடம் நின்றிருந்தது.. ஆனால் பெயிண்ட் பூச்சு உதிர்ந்துபோய் சற்று பரிதாபமாக காட்சியளித்தது..!! கட்டிடத்தை சுற்றி.. உயர உயரமாய்.. பச்சை பச்சையாய்.. நெட்டிலிங்க மரங்கள் வளர்ந்திருந்தன..!! காய்ந்த சருகுகள் தரையெங்கும் இறைந்து கிடந்தன..!! சீருடை அணிந்த பிள்ளைகள்.. ஆங்காங்கே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்..!! அந்தப்பிள்ளைகளை பார்த்தவாறே.. அசோக்கும் சாலமனும் நடந்து சென்று.. ஆசிரமத்தின் அலுவலக அறைக்குள் நுழைந்தனர்..!!

“எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி தம்பி.. தப்பா எடுத்துக்காதீங்க..!!”

நாற்பதை தாண்டியிருந்த அந்த விடுதி மேலாளர் பெண்மணியின் ஆரம்பமே, அபசகுனமாக இருந்தது. சலிப்பான சாலமன், ‘இது வேலைக்காவாது’ என்று அவநம்பிக்கையாய் தலையசைத்தான். ஆனால் அசோக் மிக நம்பிக்கையாகத்தான் பேசினான்.

“பரவாலைங்க.. என்னை ஒரே ஒருதடவைதான் பாத்திருக்கீங்க.. அதுவும் இப்போ நூறு நாள் ஆகிப்போச்சு.. அதான் உங்களுக்கு என்னை மறந்திருக்கும்.. It’s obvious..!!”

“ஆமாம் தம்பி.. அதுவும் சரிதான்..!!”

“ஆனா.. அன்னைக்கு என் கூட வந்த அந்த பொண்ணு இருக்காளே.. அ..அவ இங்க அடிக்கடி வர்றவதான்..!! கண்டிப்பா அவளோட காண்டாக்ட் டீடெயில்ஸ் உங்கட்ட இருக்கும்..!!”

“ம்ம்..!!”

“எங்களுக்கு அவளோட அட்ரஸ் வேணும் மேடம்.. It’s very urgent..!!”

“ஓ..!! அவ்ளோதான் விஷயமா..??”

“ஆமாம்..!!”

“அதுக்கென்ன தம்பி.. தந்துட்டா போச்சு.. நோ ப்ராப்ளம்..!!”

“தேங்க்ஸ் மேடம்..!!” அசோக் உள்ளமெல்லாம் பூரிப்பாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“ஆங்.. அந்தப் பொண்ணு பேர் என்ன சொன்னீங்க..??” என்று அந்த பெண்மணி கேஷுவலாக கேட்டாள். அருகில் இருந்த சாலமன் உடனே,

“கிழிஞ்சது..!! எங்க போனாலும் இது ஒன்னை கேட்டுர்றாய்ங்க.. ச்சை..!!” என்று முணுமுணுத்தான்.

அப்புறம் மீராவின் பெயர்க்குழப்பத்தை வேறு.. அசோக் அவளுக்கு விளக்கிச் சொல்ல வேண்டி இருந்தது..!! அதுமட்டுமில்லாமல்.. மீராவுடைய அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லி.. அவளுடைய ஞாபக சக்தியை தூண்டிப் பார்த்தான்..!!

“நல்லா அழகா இருப்பா..!! ஸ்லிம்மா.. ஹைட்டா..!! ஆங்.. சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும்..!! கூந்தல் பின்ன மாட்டா.. லூஸ் ஹேரா விட்ருப்பா..!! ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக்.. ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் போட்ருப்பா.. ம்ம்ம்… அப்புறம்.. லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் போட்ருப்பா.. அதுல கூட ஹார்ட் ஷேப்ல ஒரு பென்டன்ட் தொங்கும்..!!”

“ஸாரி தம்பி.. யா..யாரை சொல்றீங்கன்னு என்னால ஐடென்டிஃபை பண்ண முடியல.. இங்க நெறைய பேரு வர்றாங்க.. போறாங்க..!!”

அவஸ்தையாக சிரித்த அந்த பெண்மணியை.. அதற்கு மேலும் அசோக் தொல்லை செய்யவில்லை..!! அவளுடைய பிரச்சினை அசோக்கிற்கு புரிந்தது.. அதே மாதிரி அசோக்கின் பிரச்சினையையும் அவள் ஓரளவு யூகித்துக் கொண்டாள்..!! அப்புறம் அந்த தடியான பதிவேட்டை எடுத்துவந்து.. அவர்களுக்கு முன்பாக போட்டாள்..!!

“இங்க நூத்துக்கணக்கான வாலன்டியர்ஸ் இருக்காங்க தம்பி.. தெனமும் புதுசு புதுசா நெறைய வாலண்டியர்ஸ் வர்றாங்க.. எல்லாரையும் என்னால ஞாபகம் வச்சுக்க முடியிறது இல்ல..!! லாஸ்ட் பத்து வருஷம் ஜாயின் பண்ணினவங்க லிஸ்ட் அண்ட் அட்ரஸ் இதுல இருக்கு..!! நீங்க தேடிட்டு இருக்குற பொண்ணோட அட்ரஸ் எங்கட்ட இருந்தா.. அது இந்த ரெஜிஸ்டர்லதான் இருக்கணும்..!!”

“அவ ரீசண்டாதான் இங்க ஜாயின் பண்ணிருக்கணும் மேடம்.. மிஞ்சி மிஞ்சி போனா.. ஒரு மூணு வருஷத்துக்குள்ளதான் இருக்கும்..!!”

நம்பிக்கையாக சொன்ன அசோக் அந்த பதிவேட்டை கையிலெடுத்து புரட்டினான்.. 2010-இல் இருந்து ஆரம்பித்தான்.. பெண் பெயரில் கொடுக்கப்பட்டிருந்த முகவரிகளில் கவனத்தை குவித்தான்.. அவர்களுடைய வயதையும் கணக்கில் எடுத்துக் கொண்டான்..!!

“ரம்யா.. மேஹா.. மேகலா.. எமி.. மீனலோசனி.. வசுமதி.. வைஷூ..”

ஒவ்வொரு பெண்ணின் பெயராக சொல்லி சொல்லி.. அவர்களது முகவரியையும் அசோக் சொல்ல.. அவற்றை எல்லாம் சாலமன் தனது மொபைலில் சேகரித்துக் கொண்டான்..!! அப்படியே ஏழெட்டு முகவரிகள் எடுத்தாயிற்று..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments