அன்புள்ள ராட்சசி – பகுதி 36

ஒவ்வொரு பக்கமாக பொறுமையாக புரட்டிக்கொண்டு வந்த அசோக்.. ஒரு பக்கத்தை புரட்டியதும் அதிர்ந்துபோய் அப்படியே உறைந்தான்..!! நடுவுல ஒரு பக்கத்தை காணோம்..!! கிழிக்கப்பட்டிருந்தது..!! கிழிக்கப்பட்ட பக்கத்தின் பிசிறு.. பதிவேட்டின் இடுக்கில் தெளிவாக தெரிந்தது..!! ‘ஒருவேளை.. ஒருவேளை..??’ அவனுடைய புத்தி எதையோ கூர்மையாக யோசிக்க.. அவனுடய உள்ளத்தில் அவ்வளவு நேரம் பொங்கிகொண்டிருந்த ஒரு உற்சாகம்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்க ஆரம்பித்தது.. ஒரு சில வினாடிகளில் அது சுத்தமாக வடிந்து போனது..!! அசோக் தளர்ந்து சோர்ந்து போனான்.. தலையை பிடித்துக்கொண்டான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

“ம்ம்.. சொல்லு மச்சி.. நெக்ஸ்ட்..??” ஆர்வமாக கேட்ட சாலமனிடம்,

“போதுன்டா.. விடு..!!” என்றான் சுரத்தற்ற குரலில்.

“என்னடா.. என்னாச்சு..??”

“Its’ waste..!!”

சொல்லிக்கொண்டே அசோக் அந்த பதிவேட்டை தூக்கி டேபிளில் போட்டான். என்ன நடந்திருக்கிறது என்பதை ஓரளவு புரிந்துகொண்ட விடுதி மேலாளரும், சாலமனும் சற்றே அதிர்ந்து போனவர்களாய் அசோக்கை பார்த்தனர். அசோக் இப்போது அந்த பெண்மணியை ஏறிட்டு சொன்னான்.

“மேடம்.. எனக்காக இன்னொரு சின்ன விஷயம் நீங்க யோசிச்சு சொல்லணும்..!!”

“என்ன தம்பி.. சொல்லுங்க..!!”

“நான் இப்போ சொன்ன அடையாளத்தோட.. லாஸ்ட் ரெண்டு மூணு நாள்ல.. யாராவது உங்களை பார்க்க இங்க வந்தாங்களா..??” அசோக் அவ்வாறு கேட்கவும்,

“ம்ம்ம்ம்ம்..” அந்தப் பெண்மணி இப்போது நெற்றியை பிசைந்தவாறு யோசிக்க ஆரம்பித்தாள்.

“நல்லா யோசிச்சு பாருங்க மேடம்.. ஜஸ்ட்.. ரெண்டு மூணு நாள்தான் ஆகி இருக்கு.. கண்டிப்பா உங்களுக்கு ஞாபகம் இருக்கும்..!!”

அசோக் தவிப்புடன் சொன்னான். அவள் மேலும் சிறிது நேரம் யோசித்துவிட்டு..

“ம்ம்ம்… ரெண்டு மூணு நாள்னா.. ம்ம்ம்ம்ம்ம்… ஒருவேளை.. அ..அந்தப்பொண்ணா இருக்குமோ..??” என்றாள்.

“யாரு..??”

“மு..முந்தாநாள் யாரோ ஒரு பொண்ணு.. என்னை பாக்குறதுக்காக வந்து.. ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றதா.. மார்ட்டின் வந்து சொன்னான்..!!”

“மா..மார்ட்டின் யாரு..??”

“எங்க ஆபீஸ் அசிஸ்டன்ட்..!!”

“ஓ..!! அப்புறம்..??”

“ஆனா நான் வந்து பாக்குறப்போ இங்க யாரையும் காணோம்.. அந்தப்பொண்ணு அல்ரெடி கெளம்பி போயிருந்தா..!! ஒ..ஒருவேளை அவளா இருக்குமோ..??”

அவளுடைய பதிலைக் கேட்ட அசோக் அப்படியே நொந்து போனான்.. பாறையில் போய் முட்டிக்கொண்ட மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு..!!

பிறகு மார்ட்டினை அழைத்து விசாரித்தார்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அந்தப்பெண்ணை அவன் வர்ணிக்க.. அது மீராதான் என்று அசோக்கால் உறுதி செய்துகொள்ள முடிந்தது..!!

மீராவின் தந்திரத்தில் சிக்கிய மார்ட்டினுக்கு.. அவளுடைய பெயர் கூட என்னவென்று தெரியாத நிலை..!! நினைவடுக்கில் பிரச்சினையுள்ள மேலாளருக்கு.. பெயரில்லாமல் துரும்பளவு தகவல் கூட தர முடியாத நிலை..!! பெருத்த எதிர்பார்ப்புடன் வந்திருந்த அசோக்குக்கு.. பெயரை கூட தெரிந்து கொள்ள முடியாமல்.. வெறுப்புடனும், வெறுங்கையுடனும் வெளியேறுகிற நிலை..!!

ஆபீஸுக்கு திரும்பிய அசோக்.. அன்று முழுக்க தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.. ஏதோ யோசனையிலேயே ஆழ்ந்திருந்தான்..!! எளிய வழி என்று எண்ணியிருந்தது பொய்த்துப் போனது.. ஏமாற்றமாய் இருந்தது அவனுக்கு..!! அந்த மொபைல் நம்பர்தான் இப்போது இருக்கிற ஒரே பிடிமானம் என்று தோன்றியது..!! இல்லை.. வேறேதாவது வழி இருக்கிறதா..??

அவனுடைய நண்பர்கள் அவனைச் சுற்றி கவலையாக அமர்ந்திருந்தனர்.. அவர்களுடைய கவலைக்கு காரணம், ஆசிரமத்தில் கிடைத்த ஏமாற்றம் அல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் உதவி செய்வதாக உறுதி அளித்தபிறகும்.. அசோக் தேவையில்லாமல் அலட்டிக் கொள்கிறானே என்பதுதான்..!!

“டேய்.. விட்றா.. ரொம்ப யோசிக்காத.. அந்த எஸ்.பி எஸ்.ஐ-தான் இன்னும் நாலு நாள்ல அட்ரஸ் ட்ரேஸ் பண்ணித்தர்றேன்னு சொல்லிருக்காருல..?? நீ எதுக்கு இப்போ தேவை இல்லாம.. மண்டையை போட்டு உடைச்சுட்டு இருக்குற..?? கொஞ்சம் ரிலாக்ஸ்டா இரு..!!”

கிஷோரின் வார்த்தைகள் அசோக்குக்கு எரிச்சலையே உண்டு பண்ணின..!! ‘என்னுடைய தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப் போகிறது..??’ என்று நினைத்துக் கொண்டான்..!! தனிமை வேண்டும் போலிருந்தது அவனுக்கு..!! எழுந்து.. நண்பர்களை விட்டு அகன்று போய்.. படிக்கட்டு ஏறி.. அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில்.. அகலமான அந்த கைப்பிடி சுவற்றில்.. தனியாக வந்து அமர்ந்து கொண்டான்..!!

உதட்டுக்கு சிகரெட் கொடுத்தான்..!! நெஞ்சில் நெருப்பு.. மூளையில் அனல்.. வாயில் புகை..!! காதல் தவிப்பில் அலைபாய்ந்த மனதை.. சற்றே கட்டுப்படுத்தி.. நிதானமாக யோசித்துப் பார்த்தான்..!! பரபரப்பான சென்னையின் மீது.. உயரத்தில் இருந்து பார்வையை வீசினான்..!! ‘இந்த பரந்து விரிந்த மாநகரில்.. பாவி நீ எங்கடி பதுங்கியிருக்கிறாய்..??’

“உன் வீடு எங்க இருக்கு..??” ஒருமுறை பேச்சினூடே அசோக் கேட்டதற்கு,

“ட்ரஸ்ட்புரம்..!!” என்று மீராவும் மிக இயல்பாகவே சொல்லியிருந்தாள்.

ஆனால்.. அதை இப்போது ட்ரஸ்ட்டுவதில்தான் அசோக்கிற்கு சிக்கல்..!! எந்த நேரத்தில்.. எந்த மனநிலையுடன்.. எந்த விளம்பர போஸ்டர் பார்த்து அந்த மாதிரி சொன்னாளோ..?? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!!

அசோக் மீராவை பிக்கப் செய்வதோ, ட்ராப் செய்வதோ.. வடபழனி பேருந்து நிலையம்தான்..!! அதைத்தாண்டி அவள் எங்கே செல்கிறாள்.. அவள் வீடு எங்கே அமைந்திருக்கிறது.. என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிற மாதிரி.. எந்த தகவலையும் அவனால் யோசிக்க முடியவில்லை..!!

ஆப்டெக் சென்டரில் விசாரித்தாயிற்று.. மீரா அங்கு பயிலவில்லை என்பதை அவர்கள் உறுதிபடுத்தி விட்டனர்..!! வெறும் பெயரை மட்டும் வைத்தல்ல.. உருவ அமைப்பு, அங்க அடையாளங்கள் எல்லாம் சொல்லியும் விசாரணை நடத்தியாயிற்று.. அந்த சென்டரில் மாயா கோர்ஸ் படித்த மாணவர்களிடமும் பேசிப் பார்த்தாயிற்று..!! அவள் நிச்சயமாய் கோர்ஸ் படிப்பதற்காக இங்கு வந்து செல்லவில்லை.. வேறு ஏதோ வேலை விஷயமாக தினசரி வடபழனி வந்து சென்றிருக்கிறாள்..!!

வடபழனியை பற்றி.. அதை சுற்றியிருக்கிற பகுதிகளை பற்றி.. அவள் நிறைய தெரிந்து வைத்திருந்ததை அசோக்கால் நினைவுகூர முடிந்தது..!! வடபழனியை சுற்றிய ஏதோ ஒரு ஏரியாவில்தான்.. அவளுடைய வசிப்பிடம் அமைந்திருக்க அதிக வாய்ப்பிருக்கிறது..!! இல்லை.. ஒருவேளை அப்படி இல்லாமல் கூட இருக்கலாம்..!!

வடபழனி பேருந்து நிலையத்தையும்.. அதனுடனான மீராவின் நினைவுகளையும்.. யோசித்துக் கொண்டிருந்த அசோக்குக்கு.. திடீரென ஒரு விஷயம் மூளையில் பளிச்சிட்டது..!! அசோக்தான் அந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளே சென்றது இல்லை.. ஆனால்.. மீராவை பிக்கப் செய்யும்போது, அவள் அந்த நிலையத்துக்கு உள்ளே இருந்துதான் வெளிப்படுவாள்.. அதேபோல அவளை ட்ராப் செய்யும்போதும், உள்ளே சென்றுதான் ஏதோ ஒரு பேருந்தில் ஏறி மறைந்து போவாள்..!! அதை வைத்துப் பார்க்கையில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட.. ஏதாவது ஒரு வழித்தடத்தில் செல்கிற.. ஏதோ ஒரு பேருந்தில்தான் அவள் தினசரி வந்து சென்றிருக்க வேண்டும்..!!

அசோக்கின் மூளை இப்போது சற்றே கிளர்ந்து எழுந்தது.. மேலும் தீவிரமாக யோசித்தான்..!! மீரா செல்கிற பஸ் ரூட் எதுவாக இருக்கும் என்று திரும்ப திரும்ப யோசித்துக் கொண்டே இருந்தான்..!! அப்போதுதான் அவனுடைய புத்தியில் ஒரு பொறி தட்டியது..!! ஒரு வாரத்திற்கு முன்பாக.. மீரா அவனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நிகழ்வு.. இப்போது அவனுடய நினைவுக்கு வந்தது..!!

“ஹலோ அசோக்..!!”

“ஹேய் மீரா.. என்னாச்சு.. பத்து மணிக்கு வருவேன்னு சொன்ன.. நான் இங்க உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..!! நீ வருவேன்னு பார்த்தா.. கால் வருது..??”

“வீட்ல இருந்து அப்போவே கெளம்பிட்டேன்டா.. ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்..!!”

“ப்ச்.. போச்சா..?? வர்றதுக்கு அப்போ லேட் ஆகுமா..??”

“இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!”

“அப்போ சரி..!!”

“நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..!!”

“என்னது..?? சரியா கேக்கல மீரா.. ஒரே எரைச்சலா இருக்கு.. கொஞ்சம் சத்தமா பேசு..!!” அசோக் சொல்ல, மீரா இப்போது கத்தி பேசினாள்.

“இல்லடா.. ‘நீ வெயிட் பண்ணிட்டு இருப்பேல.. அதான் கால் பண்ணேன்..’ன்னு சொன்னேன்..!!”

“ஓ..!! ஓகே ஓகே..!! பரவால வா.. நான் வெயிட் பண்றேன்..!! ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆ.. பயங்கர எரைச்சல்.. காது வலிக்குது..!!”

“இங்க ஏதோ ஊர்வலம் நடக்குதுடா.. அதான் எரைச்சல்.. ட்ராஃபிக்கும் அதனாலதான்..!!”

“என்ன ஊர்வலம்..??”

“ஈழப் படுகொலையை கண்டிச்சு.. ஸ்டூடண்ட்ஸ்லாம் ஊர்வலம் போறாங்க..!!”

“ஓ..!! சரி சரி.. நீ வா.. நேர்ல பேசிக்கலாம்..!! இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிட்டு இருந்தேன்.. என் காது டமாரம் ஆயிடும் போல இருக்கு..!!”

“ஹாஹா..!! ஓகேடா.. வெயிட் பண்ணு.. வந்துடறேன்..!!

அவ்வளவுதான்..!! அந்த உரையாடல் நினைவுக்கு வந்ததுமே.. அசோக்கின் மூளை சுறுசுறுப்பானது.. அவன் மிகவும் பரபரப்பானான்..!! தடதடவென படியிறங்கி கீழே வந்தான்..!! அவசரமாக ஆபீசுக்குள் நுழைந்தவனை பார்த்து..

“டேய்.. என்னடா.. என்னாச்சு..??”

என்று நண்பர்கள் குழப்பமாய் கேட்டதை கண்டுகொள்ளாமல், பைக் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அடுத்த அரை மணி நேரத்தில்.. மீண்டும் ஆபீசுக்குள் பிரவேசித்தான்..!! கையிலிருந்த நான்கைந்து பழைய செய்தித்தாள்களை டேபிளில் போட்டான்.. சுவற்றில் ஒட்டியிருந்த சென்னை ஸிட்டி மேப்பை கிழித்தெடுத்தான்.. தனது லேப்டாப்பையும் திறந்து அருகில் வைத்துக் கொண்டான்.. மார்க்கர் பேனா திறந்தவன், மூடியை வாயில் கவ்விக்கொண்டான்..!!

“ஏய்.. என்னடா பண்ற..?? கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுடா..!!” நண்பர்களுக்கு இன்னுமே குழப்பம்.

“ப்ச்.. இருங்கடா..!!” அவர்களுக்கு பதில் சொல்வதை பற்றி எல்லாம் அசோக் யோசிக்கவில்லை.

முதலில் செய்தித்தாள்களை ஒவ்வொன்றாய் புரட்டி.. மாணவர்களின் அந்த ஊர்வலத்தை பற்றிய செய்தியை கண்டு பிடித்தான்..!! சரியாக பத்து நாட்களுக்கு முன்பாக.. சட்டக்கல்லூரி மாணவர்கள்.. இலங்கை அரசை கண்டித்து அந்த ஊர்வலத்தை நடத்தியிருந்தார்கள்..!! லைட் ஹவுஸில் ஊர்வலத்தை தொடங்கி.. நுங்கம்பாக்கம் வரை சென்று.. அங்குள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகை இட்டிருந்தனர்..!! அசோக் கையிலிருந்த பேனாவால், கிழித்தெடுத்த சென்னை மேப்பில்.. ஊர்வலம் சென்ற பாதையினை, வளைவு நெளிவுடன் சிவப்பு மையிட்டான்..!! பிறகு.. வடபழனி பஸ் நிலையத்தையும் மார்க் செய்து.. வட்டமிட்டுக் கொண்டான்..!!

“டேய்.. என்னடா ஆச்சு உனக்கு..??”

“கொஞ்ச நேரம் கம்முனு இருங்கடா..!!”

எரிச்சலாக சொன்ன அசோக்.. இப்போது தனது லேப்டாப்பை திறந்தான்..!! இணையத்தை தொடர்பு கொண்டு.. சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள் பற்றிய தகவல்களை அடங்கிய ஒரு இணையதளத்தை அணுகினான்..!! அதில்.. வடபழனி பேருந்து நிலையத்தை ஒரு முடிவிடமாக கொண்ட வழித்தடங்கள் எத்தனை என்று கணக்கிட்டான்..!! மொத்தம் இருபத்தியாறு வழித்தடங்கள்..!!

அந்த இருபத்தியாறு வழித்தடங்களில்.. எத்தனை வழித்தடங்கள்.. தான் வரைபடத்தில் குறிப்பிட்டிருந்த அந்த சிவப்பு பாதையை குறுக்கிடுகின்றன என்று ஆய்வு செய்தான்..!! மொத்தம் நான்கே நான்குதான்..!!

1. 37C – வடபழனி முதல் வில்லிவாக்கம் வரை
2. 12B – வடபழனி முதல் ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை
3. 17 – வடபழனி முதல் ப்ராட்வே வரை
4. M37B – வடபழனி முதல் திரு.வி.க.நகர் வரை

அந்த நான்கு வழித்தடங்களின் பாதையினையும்.. மேப்பில் நீல நிற மையினால் வரைந்தான்..!! மேலும் சில வினாடிகள் மோவாயை சொறிந்தவாறு யோசித்தான்..!!

“இல்ல இல்ல.. இப்போ கிளியர் ஆயிடுச்சு.. இன்னும் 15, 20 மினிட்ஸ்ல வந்துடுவேன்..!!”

மீரா சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது..!! ‘யெஸ்..’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டான்..!! அன்று அவள் சொன்ன மாதிரியே மேலும் 15, 20 நிமிடங்களில் வந்து சேர்ந்து விட்டாள்..!! பயண நேரத்தை கணக்கிடையில்.. 12B யை லிஸ்டில் இருந்து எடுத்து விடலாம் என்பது தெளிவாக தெரிந்தது..!! 12B ரூட் சிவப்பு லைனை க்ராஸ் செய்கிற இடத்தில் இருந்து.. வடபழனிக்கு பஸ்ஸில் வந்து சேர.. குறைந்தது நாற்பது நிமிடங்களாவது ஆகும்..!! 12B பாதையை பெருக்கல் குறியிட்டவன்.. சற்றே திருப்தியான முகத்துடன் நண்பர்களை ஏறிட்டான்..!!

“மச்சி.. 37C, 17, M37B.. இந்த மூணு ரூட்டுல ஏதோ ஒண்ணுலதான்.. மீரா டெயிலி வடபழனி வந்துட்டு போயிட்டு இருக்காடா..!!”

“எப்படிடா சொல்ற..??”

இப்போது அசோக் தான் கண்டறிந்ததை நண்பர்களுக்கு தெளிவாக விளக்கி சொன்னான்.. மூவரும் அமைதியாக, கவனமாக கேட்டு.. அசோக்கின் லாஜிக்கை புரிந்துகொண்டனர்..!! ஆனால்.. கேட்டு முடித்தபிறகும்.. அசோக்கிடம் இருந்த ஒரு எக்சைட்மன்ட் அவர்களிடம் காணக்கிடைக்கவில்லை..!!

“அதெல்லாம் சரி.. இப்போ இந்த இன்ஃபர்மேஷனை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போற..??” என்று சற்று ஏளனமாகவே கேட்டான் வேணு.

அவன் அவ்வாறு கேட்டதும், அசோக்கே சற்று குழம்பிப் போனான். ‘ஆமால்ல.. இதை வச்சுக்கிட்டு என்ன பண்றது..??’ என்று தனக்குத்தானே மனதுக்குள் கேட்டுக்கொண்டான். அவனுடைய மூளை அந்தக் கேள்விக்கு சரியான பதிலை தரவில்லை. ஆனாலும் தனது தடுமாற்றத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல்..

“ஏ..ஏதாவது பண்ண வேண்டியதுதான்..!! இது ஜஸ்ட் ஒரு லீட்.. அவ்ளோதான்..!!” என்றான் மழுப்பலாக.

“ஏண்டா.. இன்னும் ஒரு நாலு நாள்.. அதுவரை கொஞ்சம் மூடிட்டு இருக்க மாட்டியா..??” – இது வேணு.

“விட்றா.. ஏதாவது பண்ணிட்டுப் போறான்..!!”

சலிப்பாக சொல்லிவிட்டு கிஷோர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.. வேணு அவனை பின்தொடர்ந்தான்..!! சாலமன் மட்டும் அசோக்கை நெருங்கி.. சற்றே நக்கலாக சொன்னான்..!!

“மச்சி.. துப்பறியும் ஷ்ஷாம்பூ ஆயிட்ட போல இருக்கு..?? துப்பாக்கி படம் பாத்த எஃபக்ட் தெரியுதே..?? மேப்புலாம் சூப்பரா போடுற..??” என்று இளித்தான்.

ஆனால்.. அசோக் போட்ட மேப்பு.. தனக்கு வைத்திட்ட ஆப்பு என்பதை.. அடுத்த நாள்தான் சாலமன் தெளிவாக புரிந்துகொண்டான்..!!

அடுத்த நாள் காலை.. வடபழனி பேருந்து நிலையம்.. அப்போதுதான் ட்ரிப் முடித்துவிட்டு கீழே இறங்கியிருந்த ஒரு கண்டக்டரிடம்.. பாடத்தை மக்கப் செய்த மக்கு மாணவன் மாதிரி.. கமா, ஃபுல்ஸ்டாப் இல்லாத வாக்கியங்களை.. கடகடவென கக்கிக்கொண்டிருந்தான்.. சாலமன்..!!

“நல்லா அழகா இருப்பா ஸ்லிம்மா ஹைட்டா இருப்பா சிரிச்சா கன்னத்துல அழகா குழி விழும் கூந்தல் பின்ன மாட்டா லூஸ் ஹேரா விட்ருப்பா ப்ளாக் கலர்ல ஷோல்டர் பேக் ரெண்டு காதுலயும் பெருசா ரெண்டு சில்வர் ரிங் லெஃப்ட் ஹேண்ட்ல கோல்ட் ப்ரேஸ்லட் அதுல ஹார்ட் ஷேப் பென்டன்ட்..!!”

அவனிடமிருந்து தள்ளி சற்று தூரத்தில்.. அசோக்கும் அதே வாக்கியங்களை இன்னொரு கண்டக்டரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான்..!!

அசோக்குக்கே இது கொஞ்சம் ஸில்லித்தனமாகத்தான் தோன்றியது.. இந்த முயற்சியில் அதிக வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அவனது மூளை அறிந்தே வைத்திருந்தது..!! பஸ்ஸில் பயணிக்கிறவர்களைப் பற்றி எத்தனை நடத்துனர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள்..?? எந்த மாதிரியான உபயோகமான தகவலை அவர்களால் தந்துவிட முடியும்..?? அசோக்கிற்கு புரியாமல் இல்லை.. ஆனாலும்.. மிக மெலிதான அந்த சாத்தியக்கூறை கூட அவனால் சாதாரணமாக ஒதுக்க முடியவில்லை..!! பாவம்.. சாலமன்தான் அவனுடன் அலைந்து திரிந்து அல்லல் பட்டான்..!!

அந்த பேருந்து நிலையத்தில் பணிபுரிகிற, அரசு போக்குவரத்து கண்காணிப்பாளர் ஒருவரை.. பஜ்ஜி, சமோசா, பாதாம்பால் எல்லாம் வாங்கித்தந்து கைக்குள் போட்டுக் கொண்டார்கள்.. அவர் மூலமாக அந்த மூன்று வழித்தடங்களில் வேலையமர்த்தப்பட்ட, அத்தனை நடத்துனர்களின் விவரங்களையும் வாங்கிக் கொண்டனர்.. ஒவ்வொரு நடத்துனரையும் சந்தித்து, மேலே சொன்ன வாக்கியங்களை கூறி விசாரித்தனர்.. ‘அடடே.. அந்தப்பொண்ணா.. எனக்கு ரொம்ப நல்லா தெரியுமே..?’ என்று யாராவது சொல்லிவிட மாட்டார்களா என்று எதிர்பார்த்தனர்.. ஏங்கினர்..!!

ஆனால்.. அவர்களுடைய எதிர்பார்ப்பும், ஏக்கமும் ஏமாற்றமாகத்தான் உருமாறிக் கொண்டிருந்தன..!!

“எனக்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.. பஸ்ல வர்ற புள்ளைகளை சைட் அடிக்கிறத விட்டு, பல வருஷம் ஆயிப் போச்சு.. ஹ்ம்ம்.. அதுலாம் ஒரு காலம்..!!” என்றான் நடுத்தர வயது நடத்துனர் ஒருவன்.

“அதெல்லாம் வுடு.. அவளுக்கும் உனக்கும் எப்டி கனக்சனு..?? ரெண்டு பேரும் இன்னாலாம் பண்ணீங்கோ.. ஒரே குஜால்தானா..?? பார்ட்டி எப்டி..??” – இது ஒரு இளவயது ஜொள்ளு.

“ஏய்.. போங்கடா அந்தாண்ட.. உங்களுக்குலாம் வேற வேலையே இல்லையாடா.. அப்டியே அலையுறானுவ !!” – புரிந்து கொள்ளாமல் சீறியது ஒரு பெருசு.

அசோக்கும் சாலமனும், இரண்டு நாட்களின் பெரும்பான்மையான நேரத்தை வடபழனி பேருந்து நிலையத்தில்தான் கழித்தனர்..!! அந்த இரண்டு நாட்களிலும்.. அட்ரஸ் கண்டுபிடிக்கிற முயற்சியில் முன்னேற்றம் உண்டா என கேட்பதற்காக.. நான்கு முறை ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அசோக் கால் செய்தான்..!! அவரும் ‘சொல்லுடா அசோக்..’ என்பார்.. ‘ஸாரிடா.. இன்னைக்கு ரொம்ப வேலையா போச்சு.. ஒன்னும் பண்ணமுடியல..’ என்று வருந்துவார்.. ‘இந்த மட …. இருக்கானே…’ என்று யாராவது மக்கள் பிரதிநிதியை, கெட்ட வார்த்தையில் திட்டுவார்.. ‘இன்னும் ரெண்டு நாள் டைம் குடுடா.. கண்டிப்பா முடிச்சுடுறேன்..’ என்று நம்பிக்கை தெரிவிப்பார்.. ‘ஒன்னும் வொர்ரி பண்ணிக்காத.. கூலா இரு..’ என்று ஆறுதலாக சொல்லிவிட்டு, காலை கட் செய்வார்..!!

இரண்டு நாட்கள் முடிந்தபோது.. அசோக்கும், சாலமனும் அவர்கள் லிஸ்டில் இருந்த அனைத்து நடத்துனர்களையும் விசாரித்து முடித்திருந்தனர்.. ஒரே ஒருவரை தவிர..!! உடல்நலம் சரியில்லாமல், விடுப்பில் இருந்த அவரையும்.. மூன்றாவது நாள் காலை பத்து மணியளவில், மிகச்சரியாக வளைத்து பிடித்தனர்..!! அவரிடமும் அவர்களுக்கு எந்த தகவலும் பெயரவில்லை..!! இவர்கள் ஒவ்வொரு கேள்வியாக கேட்க.. அவர் கையை விரித்தார்.. உதட்டை பிதுக்கினார்.. ‘ம்ஹூம்.. ம்ஹூம்..’ என்று இப்படியும் அப்படியும் தலையை ஆட்டினார்..!! இறுதியில்..

“ஐயயயயயே.. நவுருங்கப்பா.. நானே நாஷ்டா துன்னாம, நாக்கு வறண்டு போய் கெடக்கேன்.. நீங்க வேற..?? ஷ்ஷ்ஷ்ஷ்.. அப்டியே க்கேரா இருக்கு..!!” என்று சலிப்பாக சொன்னவர், நாஷ்டா கடையை நோக்கி நடையை கட்டினார்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments