அன்புள்ள ராட்சசி – பகுதி 7

அத்தியாயம் 5

சாப்பிட்டு முடித்து அசோக் வீட்டை விட்டு கிளம்பினான். தனது பைக்கில் பாலாஜி அட்வர்டைசிங்கை அவன் அடைந்த போது மணி 8.50..!! அவனை ஒன்பது மணிக்கு வர சொன்ன மோகன்ராஜ் பத்து மணிக்குத்தான் ஆபீஸ் வந்தார். பத்தரை மணிக்கு டிஸ்கஷன் ஆரம்பமானது. குளிரூட்டப்பட்ட அறையில்.. மோகன்ராஜும்.. அவருடைய அடிபொடிகள் ஐந்து பேரும்.. பிறகு அசோக்கும்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அரைமணி நேரம் கூட நீடிக்கவில்லை அந்த டிஸ்கஷன்..!! வழக்கம் போல.. மோகன்ராஜ் தனது எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும்.. மிகுந்த ஈடுபாட்டுடன் அப்படியே உருகி உருகி.. அசோக்கிடம் எடுத்து கூறினார்..!! அசுவாரசியமாய் அனைத்தையும் கேட்டு முடித்த அசோக், ‘கேனத்தனமா இருக்கு ஸார்..!!’என்று கேஷுவலாக கூறினான்..!! கடுப்பான மோகன்ராஜும் ‘கெட் அவுட்..’ என்று தொண்டை கிழிய கத்தினார்..!! அசோக்கும் ‘ஹேரே போச்சு.. போ..’ என்று எழுந்து அறையை விட்டு வெளியேறினான்..!!

அசோக் ஆபீஸை அடைந்தபோது மணி பனிரெண்டை நெருங்கியிருந்தது. அவர்களுடைய அசிஸ்டன்ட்கள் இருவரும் எடிட்டிங் ரூமில் அமர்ந்து, ஹெட்ஃபோன்கள் அணிந்த காதுகளுடன், சிஸ்டத்தில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். அசோக் அவர்களை கடந்து ஆபீஸ் ரூமுக்குள் புகுந்தான். உள்ளே கிஷோர், வேணு, சாலமன்.. மூவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்..!! ஏதோ ஃபைனான்ஸ் கம்பனியில் பணத்தைப் போட்டவர்கள் மாதிரி.. கவலை படர்ந்த முகத்துடன் குத்தவைத்திருந்தனர்..!!

அசோக்கிற்கு முதலில் எதுவும் புரியவில்லை. மூன்று பேர் முகத்தையும் மாறி மாறி பார்த்தான். அப்புறம் அவனும் ஒரு சேரில் அமர்ந்து, லேப்டாப் திறந்து மெயில் பாக்ஸ் ஓப்பன் செய்து பார்த்தான். அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் யாரும் அவனுடன் பேசாமல் போக, அசோக்கே இப்போது அந்த அமைதியை கலைத்தான். வேணுவை சைகையால் காட்டி சாலமனிடம் கேட்டான்.

“என்னடா ஆச்சு.. ஏன் இவன் சோகமா இருக்கான்..??”

“அவன் ஆளு அவனை திட்டிடுச்சாம்..!!” சாலமன் சோகமான முகத்துடனே பதில் சொன்னான்.

“ஏன்..??”

“அவ மூணாவது அண்ணனோட மூத்த பொண்ணுக்கு.. இன்னைக்கு மூக்கு குத்துற பங்க்ஷனாம்..!! காலைலேயே இவன் கால் பண்ணி விஷ் பண்ணலைன்னு கடுப்பு..!! கன்னாபின்னான்னு திட்டிவிட்டுட்டா..!!”

“ஓஹோ..!! சரி.. நீ ஏன் சோகமா இருக்குற..??” அசோக்கின் கேள்விக்கு இப்போது வேணு பதில் சொன்னான்.

“அவனுக்கும் அவன் ஆளுக்கும் சண்டை..!!”

“அதுக்குள்ளயா..?? நேத்து நைட்தான ஒண்ணா சேர்ந்தாங்க..??”

“ஆமாம்.. காலைலேயே புட்டுக்கிச்சு..!!”

“ஏன்.. என்னாச்சு..??”

“அவ ஏதோ புது ஸாரி கட்டிட்டு வந்திருப்பா போல இருக்கு.. இவன் கவனிச்சு பாத்துட்டு நல்லாருக்கு சொல்வான்னு எக்ஸ்பெக்ட் பண்ணிருப்பா போல..!!”

“இவன் நல்லாருக்குன்னு சொல்லலையா..??” அசோக் வேணுவை கேட்க,

“இல்ல மச்சி.. சொன்னேன்..!!” சாலமன் இடையில் புகுந்து பாவமாக சொன்னான்.

“அப்புறம் என்ன..??”

“இவன் நல்லாருக்குன்னு சொன்னது ஸாரியை இல்ல.. சாப்பிட்டுக்கிட்டு இருந்த பூரியை..!! அவ குருமாவை எடுத்து இவன் தலைல கொட்டிட்டு கெளம்பிட்டா..!!” வேணு சீரியஸாக சொல்ல, அசோக்குக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஹாஹாஹாஹா..!! ஹையோ ஹையோ..!! ஹ்ம்ம்…. உங்களைப் பாத்தா காமடியாத்தாண்டா இருக்கு.. சொன்னா எவனாவது கேக்குறீங்களா..?? அப்படி எதுக்கு மானங்கெட்டு லவ் பண்ணனும்.. அப்புறம் இப்படி மனசு உடைஞ்சு உக்காந்திருக்கணும்..?? ம்ம்..??” சிரிப்புடன் சொன்னவன் பிறகு கிஷோரின் பக்கமாய் திரும்பி,

“ஹ்ம்ம்.. நீ ஏண்டா பேயறைஞ்சவன் மாதிரி உக்காந்திருக்க..??” என்று கேஷுவலாக கேட்டான். ஏற்கனவே அசோக்கை முறைத்துக் கொண்டிருந்த கிஷோர் இப்போது இன்னும் அதிகமாக முறைத்தான்.

“ஏன்..?? உனக்கு தெரியாதா..??” என்று இறுகிப்போன குரலில் கேட்டான்.

கிஷோர் கேட்டுக்கொண்டிருக்கும்போதே, அவனுடைய செல்போன் கிணுகிணுத்தது. உடனே பதறிப்போய் அந்த செல்போனை எட்டி எடுத்தான். டிஸ்ப்ளே பார்த்தவன், ‘ஹையோ.. கடவுளே..!!’ என்று தலையை பிடித்துக் கொண்டான். அழுவது போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு, கால் பிக்கப் செய்து காதில் வைத்தான்.

“ஹலோ.. சொல்லும்மா..!!” என்றான் பம்மிக்கொண்டு.

“…………………………”

“ஐயோ.. என்ன சங்கிம்மா நீ..?? இன்னுமா என் மேல உனக்கு நம்பிக்கை இல்ல..??”

“…………………………”

“இல்லம்மா.. இல்லம்மா..!! சத்தியமா நான் அப்படி சொல்லவே இல்ல..!!”

“…………………………”

“ஹையோ.. எத்தனை தடவை சொல்றது..?? அந்த வார்த்தையை நான் யூஸ் பண்ணவே இல்ல.. உன் அண்ணன்தான் எக்கச்சக்கமா எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லிருக்கான்..!! என்னை நம்பு சங்கிம்மா.. ப்ளீஸ்..!!”

அடுத்த முனையில் சங்கீதா அதன்பிறகும் அவனை விடவில்லை போலிருக்கிறது. வார்த்தைகளை தாளித்து அவன் மீது கொட்டிக்கொண்டே இருந்திருக்க வேண்டும். கிஷோர் அவஸ்தையாய் நெளிந்தவாறே, நண்பர்களின் முகத்தை மாறி மாறி பார்த்தான். அப்புறம் ஏதோ திடீர் யோசனை தோன்றியவனாய், செல்போனை காதில் இருந்து சற்று தள்ளிப் பிடித்துக் கொண்டான்.

“ஹலோ.. ஹலோ..” என்று போலியாக கத்தினான்.

“…………………………”

“சங்கிம்மா.. நான் ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன்மா.. இங்க சிக்னல் சரியா கெடைக்கல.. நான் அப்புறமா பேசவா..??”

என்று சொல்லிவிட்டு பட்டென காலை கட் செய்தான். செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல், நெட்வொர்க் கனெக்டிவிட்டி மட்டும் இல்லாமல் போகுமாறு, செட்டிங் மாத்தினான். செல்போனை தூக்கி ஓரமாய் போட்டுவிட்டு, ‘யப்பாஆஆ…!!’ என்று சலிப்பும், நிம்மதியுமாய் பெருமூச்சு விட்டான். தலையை இப்படியும் அப்படியுமாய் பரபரவென உலுக்கிக் கொண்டான். சாலமனை ஏறிட்டு பரிதாபமான குரலில் சொன்னான்.

“காலைல ஆறு மணில இருந்துடா மச்சி.. நான் ஸ்டாப்பா ஓடிட்டு இருக்கு இந்த நான்சன்ஸ்..!! ஒரு மனுஷன் எவ்வளவுதான்டா தாங்குறது..?? ச்ச…!!! ஒரே வெறுப்பா இருக்குடா..!! எல்லாம் இந்தப் பன்னாடையால…”

என்று அசோக்கை கை நீட்டி அவன் வெறுப்பாக கத்திக் கொண்டிருக்கும்போதே, டேபிள் மீதிருந்த டெலிபோன் இப்போது ‘கிர்ர்ர்ர்.. கிர்ர்ர்ர்..’ என்று அலறியது. கிஷோர் மீண்டும் மிரண்டு போனான். கிலியடித்த மாதிரி அந்த டெலிபோனையே பார்த்தான். அப்புறம் வேணுவிடம் திரும்பி அவசரமாய் சொன்னான்.

“டேய் மச்சி.. நீ எடுத்து பேசுடா…!! சங்கியாத்தான் இருக்கும்.. நான் இங்க இல்லைன்னு சொல்லிரு.. எங்க போயிருக்கேன்னு கேட்டா.. எங்கயாவது ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் போயிட்டேன்னு சொல்லிரு..!!”

வேணு கால் அட்டன்ட் செய்தான். ரிசீவரை காதில் வைத்து ‘ஹலோ..’ என்றான். ஓரிரு வினாடிகளுக்கு அப்புறம், ரிசீவரை காதில் இருந்து விலக்கி, அதன் வாயைப் பொத்திவிட்டு கிஷோரிடம் இளிப்பாக சொன்னான்.

“சங்கி இல்ல மச்சி.. அந்த மோகன்ராஜ் மங்கி..!!”

சொல்லிவிட்டு வேணு ரிஸீவரை அசோக்கிடம் நீட்டினான். மோகன்ராஜ் இப்போது ஏன் ஃபோன் செய்திருக்கிறார் என்று அசோக்கிற்கு நன்றாகவே புரிந்தது. ஒருமாதிரி திருட்டுப் பார்வை பார்த்தவன், சற்றே தடுமாற்றமாய் சொன்னான்.

“ஹேய்.. அ..அவர் கிஷோர்ட்டதான் ஏதோ பேசணும்னு சொன்னாரு.. அ..அவனுக்காத்தான் இருக்கும்.. அவன்ட்ட குடு..!!”

என்று அழகாக எஸ்கேப் ஆனான். நண்பன் சொன்னதை உண்மை என்று நம்பிய கிஷோரும், வேணுவிடம் இருந்து ரிஸீவரை வாங்கினான். தன் காதில் வைத்துக்கொண்டான். குரலில் ஒரு மிடுக்கை வரவழைத்துக்கொண்டு கெத்தாக சொன்னான்.

“ஹாய் மிஸ்டர் மோகன் ராஜ்..!!”

அவ்வளவுதான்..!! அதன்பிறகு ஒரு நிமிடம்..!! மோகன்ராஜ் படபடவென பட்டாசாக வெடித்து தள்ளினார். படுகேவலமாக திட்டினார். கிஷோர் பேசுவதற்கே அவர் வாய்ப்பளிக்கவில்லை. ‘ஸார்.. அது வந்து.. இல்ல ஸார் அவன்.. நோ ஸார்..’ என்று பிட்டு பிட்டாக வார்த்தைகளை துப்பத்தான் கிஷோருக்கு இடைவெளி கிடைத்தது. மிச்ச நேரம் மொத்தமும் அவர் பொரிந்து தள்ளிவிட்டு ஃபோனையும் கட் செய்தார்.

கால் முடிந்தபிறகும் கிஷோர் சிறிது நேரம் ரிஸீவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்புறம் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தவன், முகமே செத்துப்போய் அசோக்கை பரிதாபமாக ஏறிட்டான். ‘ஏண்டா.. இப்பிடி..??’ என்று வடிவேலு மாதிரியான பாவனையுடன் பார்த்தான்.

“என்னடா மச்சி.. என்ன சொல்றார் மோகன்ராஜ்..??”

என்று அசோக் அவனிடம் இளிப்பாக கேட்க, கிஷோரால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தன் சேரில் இருந்து குபீரென்று எழுந்தான். அப்படியே அசோக் மீது சரக்கென பாய்ந்தான். டேபிளில் இருந்த டெலிபோன், ஃபைல்ஸ், பென் ஸ்டாண்ட், ஸ்டேப்ளர் எல்லாம் கீழே விழுந்து மூலைக்கொன்றாய் சிதறி ஓடின. ஏதேதோ காகிதங்கள் அந்தரத்தில் பறந்தன. நழுவிய லேப்டாப் கீழே விழாமல், லாவகமாக பிடித்துக் கொண்டான் வேணு. நாற்காலிகள் ‘டமார்ர்ர்ர்..’ என்ற சத்துடன் அங்குமிங்குமாய் தெறித்து ஓடி கவிழ்ந்தன. கிஷோரும் அசோக்கும் தரையில் கட்டிப்புரண்டு உருண்டு கொண்டிருந்தார்கள்.

“மவனே.. இன்னைக்கு செத்தடா நீ..!!” கிஷோர் உச்சபட்ச கடுப்போடு கத்தினான்.

“டேய்.. லூசு.. சொல்றதை கேளுடா.. விடுடா..!!” அசோக் அவனுடன் சேர்ந்து உருண்டுகொண்டே கத்தினான்.

வேணுவுக்கும் சாலமனுக்கும் கொஞ்ச நேரம் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதிர்ச்சியில் சற்று தடுமாறியவர்கள், பிறகு சுதாரித்துக்கொண்டு சண்டையை விலக்கி விட்டார்கள். கிஷோரையும் அசோக்கையும் ஆளுக்கொரு பக்கமாய் பிடித்து இழுத்தார்கள்.

“டேய்.. இது ஆபீஸ்டா.. அஸம்ப்ளினு நெனச்சிங்களா.. அசிங்கமா சண்டைலாம் போட்டுக்கிட்டு..?? விடுங்கடா..!!”

அவர்களை பிரித்து விடுவதற்கு அரும்பாடு பட வேண்டியிருந்தது வேணுவுக்கும், சாலமனுக்கும்..!!

அதன் பிறகு ஒரு அரைமணி நேரம் கழித்து.. அவர்கள் எப்போதும் மதிய உணவு உண்ணுகிற ஃபுட்கோர்ட்டில் நான்கு பேரும் அமர்ந்திருந்தனர்..!! அசோக்கும் வேணுவும் டேபிளுக்கு ஒருபுறம் இருக்க, கிஷோரும் சாலமனும் அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்தனர். சூழ்நிலை இன்னும் சற்று இறுக்கமாகவே இருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. ஆளுக்கொரு உணவை வாங்கி வந்திருந்தவர்கள், அந்த உணவை அமைதியாக பொறுமையாக வாய்க்குள் தள்ளிக் கொண்டிருந்தனர்.

நான்கு அடுக்குகளுடன் வட்ட வடிவில் அமைந்த பிரம்மாண்டமான கட்டிடம் அது..!! கட்டிடத்தின் உட்புற மையப்பகுதி திறந்தவெளியாக இருக்கும்..!! நான்காவது மாடியில் பாலிகார்பனேட் தகடுகளால் வேயப்பட்ட மேற்கூரை..!! அதன் வழியே உட்புகும் சூரிய வெளிச்சம் தாராளமாய் அந்த கட்டிடத்தை நிறைத்திருக்கும்..!! கீழ் தளத்தில்தான் அந்த ஃபுட்கோர்ட்..!! பிஸ்ஸா முதல் பிரியாணி வரை.. பலதரப்பட்ட உணவுகளை விற்கும் பத்துக்கும் அதிகமான ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர்கள்..!! வாங்கிய உணவுகளை அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியாக.. கீழ்த்தளத்தின் மையப்பகுதியில்.. முன்னூறு பேர் அமரக்கூடிய அளவுக்கு டேபிள்கள்.. சேர்கள்..!! மற்ற மூன்று தளங்களிலும்.. ஆடைகள், ஆபரணங்கள்,
செல்போன்கள், செருப்புகள் என.. விதவிதமான விற்பனை நிலையங்கள்..!!

நீண்ட நேர அமைதியை முதலில் வேணுதான் குலைத்தான். அசோக்கிடம் மெல்ல கேட்டான்.

“மோகன்ராஜோட என்னடா பிரச்னை..??”

“மோகன்ராசா அவன்..?? சரியான மொக்கைராசு..!! பேசாத அவனைப் பத்தி..!!”

“ப்ச்.. என்ன நடந்துச்சுன்னுதான கேக்குறேன்..??”

“அவன் என்னடா.. லூசு மாதிரி என்னன்னவோ சொல்றான்..!!”

“என்ன சொன்னான்..??”

“ரொமா…ண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் வேணுமாம் அந்த வெண்ணைக்கு..!!”

“ஓ..!!”

“இஞ்சின் ஆயிலுக்கும் ரொமான்சுக்கும் என்னடா சம்பந்தம்..?? அதை சொன்னா.. கொஞ்சம் கூட புரிஞ்சுக்கவே மாட்டேன்றான்.. லூசுப்பய..!!”

“யாரு.. அவன் புரிஞ்சுக்க மாட்டேன்றானா..?? நீதாண்டா எதையும் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம் புடிக்கிற..!!” கிஷோர் இடையில் புகுந்து எரிச்சலாக சொன்னான்.

“என்ன.. நான் என்ன புரிஞ்சுக்கல..?? இஞ்சின் ஆயிலையும் லவ்வையும் எப்படி லிங்க் பண்றது..??”

“உனக்கு லிங்க் பண்ண தெரியலைன்னு சொல்லு.. லிங்க் பண்ணவே முடியாதுன்னு மட்டும் சொல்லாத..!! எனக்கு ரெண்டு நாள் டைம் தர்றியா.. நான் ஒரு கான்சப்டடோட வரவா..??”

“ம்க்கும்.. கிழிச்ச..!!” அசோக் ஏளனமாக சொல்ல, இப்போது வேணு அவனிடம் கேட்டான்.

“அசோக்கு.. நீ பேசுறது தப்புன்னு தோணுதுடா எனக்கு..!! ஏன் ரொமாண்டிக்கா ஒரு இஞ்சின் ஆயில் வெளம்பரம் எடுக்க முடியாதுன்னு சொல்ற நீ..??” வேணு கேட்க, அவனை தொடர்ந்து சாலமன் இப்போது உற்சாகமாக ஆரம்பித்தான்.

“ஆமாம் மச்சி.. ஏன் முடியாதுன்னு சொல்ற..?? இங்க பாரேன்.. நான் ஒரு லைன் சொல்லவா..?? இஞ்சினையும் இதயத்தையும் லிங்க் பண்ணினா எப்படி.. ம்ம்..?? இதயத்துக்கு காதல் எவ்வளவு முக்கியமோ… இஞ்சினுக்கு ஆயில் அவ்வளவு முக்கியம்..!! எப்பூடி…???” சாலமன் கேட்டுவிட்டு பெருமையாக பார்த்தான்.

“ம்க்கும்.. இதயத்துக்கும் காதலுக்குமே எந்த சம்பந்தமும் இல்ல.. இதுல இதயத்துக்கும் இஞ்சினுக்கும் லிங்க் குடுக்குறியா நீ..?? நான்சென்ஸ்..!!” அசோக் சொல்ல, இப்போது கிஷோர் மற்றவர்களிடம் கேலியாக சொன்னான்.

“ஏய்.. விடுங்கடா.. இதெல்லாம் இவன்ட்ட போய் சொல்லிக்கிட்டு..!! இவனுக்கு இதுலாம் புரியாதுடா.. யாரையாவது லவ் பண்ணிருந்தா.. இதுலாம் புரியும்..!! இவனுக்கு புரியலன்னதும் நம்மள நான்சென்ஸ்ன்றான்..!!”

“டேய்.. ஆரம்பிச்சுட்டீங்களாடா மறுபடியும்..?? இந்த இஞ்சின் ஆயிலுக்காக இப்போ என்னை லவ் பண்ணுன்னு சொல்லப் போறீங்களாடா..??”

“இல்ல மச்சி.. கிஷோர் சொல்றதுல ஒரு பாயின்ட் இருக்கு..!! இப்போ.. எங்கள விடுடா.. நாங்கல்லாம் டெக்னீஷியன்ஸ்.. ஆனா நீ அப்படி இல்லடா..!! நீ ஒரு கிரியேட்டர் மச்சி.. ஆட் ஃபில்ம்ஸ் தாண்டி, சினி ஃபீல்ட் போகவும் ட்ரை பண்ணிட்டு இருக்குற.. எந்த ஒரு க்ரியேட்டருக்குமே காதல்ன்றது ரொம்ப முக்கியமான விஷயம்டா..!!”

“ஓ.. அப்போ லவ் எக்ஸ்பீரியன்ஸ் இல்லாதவன் க்ரியேட்டரா இருக்க முடியாதுன்னு சொல்றியா..??”

“இல்ல.. லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற கிரியேட்டர் ரொம்ப சக்ஸஸ்ஃபுல்லா இருக்க முடியும்னு சொல்றேன்..!! உனக்கு லவ் எக்ஸ்பீரியன்ஸ் இருந்திருந்தா.. மோகன்ராஜோட இப்படி நீ அர்த்தம் இல்லாம சண்டை போட்டு வந்திருக்க மாட்டேன்னு தோணுது.. அந்த இஞ்சின் ஆயில் வெளம்பரத்தை எப்படி ரொமாண்டிக்கா எடுக்கலாம்னு தின்க் பண்ண ஆரம்பிச்சிருப்பேன்னு தோணுது..!!”

“ஹையோ.. அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..!!” அசோக் கேட்க, கிஷோர் இப்போது எரிச்சலாக கத்தினான்.

“ஏய்.. சம்பந்தம் இருக்குதுடா வெண்ணை.. உனக்குத்தான் புரியல..!! உன்னாலலாம் நாங்க சொல்ற எதையுமே புரிஞ்சுக்க முடியாதுடா.. லவ்னா என்னன்னு புரிஞ்சுக்க முடியாது.. லவ் ஃபீலிங் பத்தி புரிஞ்சுக்க முடியாது.. லவ் பண்றவங்க மனசையும் புரிஞ்சுக்க முடியாது..!! உனக்கு அதுலாம் புரிஞ்சிருந்தா.. இப்படி அந்த மோகன்ராஜோட மல்லுக்கட்டிட்டு நிக்க மாட்ட.. உன் தங்கச்சிக்கும் எனக்கும் சண்டை மூட்டிவிட்டு வேடிக்கை பாக்க மாட்ட..!! ஏன்.. என்னைய, வேணுவை, சாலமனை, எங்க லவ்வை.. எதுக்கெடுத்தாலும் நக்கல் பண்ணி சிரிக்கிறல.. அதுலாம் சத்தியமா பண்ணமாட்ட..!! என்னடா.. நான் சொல்றது சரிதான..??”

கிஷோர் அவ்வாறு சொன்னதும், இப்போது வேணுவுக்கும் சாலமனுக்குமே சுருக்கென்று ஒரு விஷயம் மனதை தைத்தது. தங்கள் காதலையும், தாங்கள் படுகிற அவஸ்தையையும், அசோக் அடிக்கடி காமடி பண்ணி கலாய்ப்பது, அவர்களுக்கு எப்போதுமே ஒருவித கடுப்பை கிளப்பும். ‘இவனை ஒன்னும் செய்ய முடியலையே.. இவன் மட்டும் ஜாலியா இருக்கானே..??’ என்பது மாதிரியான கடுப்பு. அவர்கள் மனதில் உறைந்திருந்த அந்த கடுப்பு, இப்போது கிஷோருடன் சேர்ந்து அவர்களிடமிருந்தும் வெளிப்பட்டது.

“சரி விடு மச்சி..!! லவ் பண்றதுக்குலாம் ஒரு தில்லு வேணுண்டா.. அது நம்ம அசோக்கிட்ட இல்லைன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்..!!” சாலமன் கிண்டலாக சொல்ல, அசோக்குக்கு சுரீர் என்று கோவம் வந்தது.

“ஏய்.. ஓவரா பேசுறடா..!!”

“ஓவரா பேசுறனோ.. விக்கெட்டா பேசுறனோ.. உண்மையை பேசுறேன்.. போ போ..!!”

“ஆமாம் மச்சி.. உனக்கு எங்களோட கஷ்டம்லாம் புரியலடா.. லவ் பண்றவனுக்குத்தான் அதுலாம் புரியும்.. அதை மொதல்ல அக்ஸப்ட் பண்ணிக்கோ நீ..!!” தன் பங்குக்கு கொளுத்திப் போட்டான் வேணு.

“ஏய்.. ரொம்ப பேசாதீங்கடா.. என்னடா பெரிய கஷ்டம், உங்க கஷ்டம்..??” அசோக் ஏளனமாக கேட்க, இப்போது கிஷோர் அவனிடம் சவால் விடுவது மாதிரி சொன்னான்.

“என்ன.. எளக்காரமா இருக்கா உனக்கு..?? மவனே.. ஒரு பொண்ணோட பேசிப்பாருடா.. அவ கூட பழகிப்பாரு.. அப்போ தெரியும் எங்க கஷ்டம்..!! அவளுக்கு புடிச்ச மாதிரிலாம் நடந்துக்கிட்டு.. அவ இழுத்த இழுப்புக்குலாம் வளைஞ்சு குடுத்து.. நம்ம மேல நம்பிக்கை வரவைச்சு.. கொஞ்சம் கொஞ்சமா அவளை அட்ராக்ட் பண்ணி.. ஐ லவ் யூ சொல்ல வைக்கிறதுக்குள்ள.. உன் பருப்பு பரதநாட்டியம் ஆடுதா இல்லையான்னு பாரு..!!”

“ஹாஹா.. இதுலாம் வேற யார்ட்டயாவது போய் சொல்லு..!! நேத்துவரைகூட எனக்கு இதுல பெரிய ஐடியாலாம் இல்ல.. ஆனா நேத்து என் அம்மாட்ட பேசுனப்புறம்.. ஒரு விஷயத்துல நான் ரொம்ப கான்ஃபிடன்ட்டா இருக்கேன்..!!”

“எந்த விஷயத்துல..??”

“ஒரு பொண்ணை காதலிக்க வைக்கிறது ரொம்ப ஈஸின்ற விஷயத்துல..!!”

அசோக் அவ்வாறு படுசீரியஸாக சொல்ல, இப்போது அசோக்கை தவிர மற்ற மூவரும் கோரஸாக அவனை பார்த்து கைகொட்டி சிரித்தார்கள்.

“ஹாஹா… ஹாஹா… காமடி பண்ணாத மச்சி.. ஹாஹா…!!!”

“ஏய்.. என்னடா சிரிப்பு..?? நான் சீரியஸாத்தான் சொல்றேன்..!!”

“ஓ..!! ஓகேடா..!! அப்போ ஒன்னு பண்றியா..??”

“என்ன..??”

“இந்த ஃபுட்கோர்ட்ல இருக்குற ஏதாவது ஒரு பொண்ணோட பேசிப்பழகி.. அவளை உன்கிட்ட ‘ஐ லவ் யூ’ன்னு சொல்ல வச்சு காட்டுறியா..??” கிஷோர் கேஷுவலாக ஒரு சேலஞ்ச் ப்ரொபோஸ் செய்ய, அசோக் இப்போது சற்றே மிரண்டான்.

“ஏ..ஏய்.. எ..என்னடா சொல்ற.. லவ்லாம்.. இ..இப்படி..”

“ஏன்.. ஏன் தயங்குற..?? நீதான நேத்து சொன்ன..?? நீ லவ் பண்ணினா.. யாராவது ஒரு பர்ஃபக்ட் ஸ்ட்ரேஞ்சர் டுபுக்கைத்தான் லவ் பண்ணுவேன்னு..!! இங்க இருக்குறவளுக எல்லாரும் ஸ்ட்ரேஞ்சர்ஸ்தான்.. நாங்க யாராவது ஒரு பொண்ணை ச்சூஸ் பண்ணி தர்றோம்.. நீ அவளை லவ் பண்ண வச்சு காட்டு..!! தில் இருக்கா உனக்கு..??”

“இ..இல்ல.. இ..இதுலாம் வேலைக்காகாது..!!”

“ஹாஹா.. அப்போ நீ ஒரு டம்மிபீஸ்னு ஒத்துக்கோ..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கை சுருக்கென்று தைக்க,

“ஏய்…!!” என்று அவனிடம் எகிறினான்.

“இந்த கோவமசுருக்குலாம் ஒன்னும் கொறைச்சல்மசுரு இல்ல..!!” கிஷோர் கூலாக சொன்னான்.

அசோக் இப்போது வாயடைத்துப் போனான். வகையாக மாட்டிக்கொண்ட மாதிரியான ஒரு உணர்வு அவனுக்கு..!! நண்பர்கள் மூவரும் அவனை ஒரு இளக்கார பார்வை பார்த்தபடி.. அவனுடைய பதிலுக்காக காத்துக்கொண்டிருக்க.. அவர்களுடைய பார்வையை அசோக்கால் எதிர்கொள்ள முடியவில்லை.. அவனையும் அறியாமல் அவனுடைய தலை மெல்ல மெல்ல கீழே தாழ்ந்தது..!! அவனுடைய நிலைமையை உணர்ந்த மற்ற மூவரும், வார்த்தைகளால் அவனை மேலும் சீண்டினர்..!!

“பாத்தியா எப்படி உக்காந்திருக்கான்னு..?? அடுத்தவனை பாத்து ஆயிரம் நொட்டை சொல்லலாம் மச்சி.. அவன் அவனுக்கு வந்தாத்தான் தெரியும் வாந்தியும் வயித்தாலயும்..!!” என்றான் வேணு.

“எங்களுக்குள்ள எத்தனை தடவை பிரேக்கப் ஆனாலும்.. திரும்ப திரும்ப அவளை எங்கிட்ட வரவைக்கிறேன் பாத்தியா.. அதுக்குலாம் ஒரு ஸ்டஃப் வேணும் மச்சி.. அந்த ஸ்டஃப் இல்லாதவன்லாம் இப்படித்தான்..!!” சாலமன் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தான்.

“விடுங்கடா.. அவன்கிட்ட ஏதோ வாய் இருக்கு.. நம்மகிட்ட ஏதோ காது இருக்குன்னு.. வக்கனையா பேசிட்டான்..!! பேச்சு மட்டுந்தான் அப்படி மச்சி.. அவனால முடியாதுன்னு அவனுக்கே தெரியும்..!!” கிஷோரின் வார்த்தைகள் அசோக்கின் தன்மானத்தை சீண்டிப் பார்த்தன.

‘இப்போது என்ன செய்வது..?? இவர்களுடைய சவாலை கெத்தாக ஏற்றுக்கொள்வதா.. இல்லை.. என்னால் முடியாது என்று நழுவி கேவலப்படுவதா..??’ அசோக் கண்களை மூடி ஒருகணம் நிதானமாக யோசித்தான். அம்மா, அப்பா, தங்கை, பாட்டி, பரந்தாமன், நண்பர்கள், நாய்க்குட்டிகள் என.. அனைவரும் இவனுடைய மனக்கண்ணில் தோன்றி.. இவனை சுற்றி நின்றுகொண்டு.. ‘காதலித்துப்பார்.. காதலித்துப்பார்..’ என்று உரத்த குரலில் கத்தினார்கள்..!!

ஒரு ஐந்தாறு வினாடிகள் அசோக் அந்தமாதிரி விழிகள் மூடி அமர்ந்திருப்பான். அப்புறம் பட்டென இமைகளை பிரித்து, நண்பர்கள் மூவரையும் தைரியமாக ஏறிட்டான். மிடுக்கான குரலில் சொன்னான்.

“ஓகேடா..!! பொண்ணை ச்சூஸ் பண்ணுங்க.. நீங்க யாரை ச்சூஸ் பண்றிங்களோ.. அந்தப்பொண்ணை நானும் லவ் பண்றேன்.. அவளையும் என்னை லவ் பண்ண வைக்கிறேன்..!!”

அசோக் அவ்வாறு கெத்தாக சவாலை ஏற்றுக் கொண்டதும், இப்போது நண்பர்கள் மூவருக்கும் சப்பென்று போனது..!! ‘அவன் இந்த சவாலுக்கு ஒத்துக்கொள்ள மாட்டான்.. அதை வைத்தே காலம் முழுவதும் அவனை கலாய்க்கலாம்..’ என்றுதான் அவர்கள் எண்ணியிருந்தார்கள்..!! இப்படி அவன் ஏற்றுக்கொண்டது மற்றவர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. இருந்தாலும் இப்போது வேறுவிதமான எண்ணமும் எதிர்பார்ப்பும் அவர்களுடைய மனதில் கிளம்பி, அவர்களை நிமிர்ந்து அமரவைத்தன.

“நெஜமாத்தான் சொல்றியா..??” கிஷோர் தன்னுடைய முகத்தை அசோக்கின் முகத்துக்கு அருகே எடுத்துச் சென்று கேட்டான்.

“எஸ்..!!”

“அப்புறம் பேக் அடிக்க மாட்டியே..??”

“ஹஹா… சப்பை.. சப்பை மேட்டர்டா இது..!!”

“ஓகே..!! கூல்..!!”

சொல்லிக்கொண்டே கிஷோர் அவனுடைய சேரில் வசதியாக சாய்ந்து கொண்டான். மற்றவர்களிடம் திரும்பி சொன்னான்.

“ஓகேடா..!! ரெடியா நீங்க.. செலக்ட் பண்ணலாமா..??”

“நீயே யாரையாவது செலக்ட் பண்ணு கிஷோர்.. நீதான் இவன்கிட்ட ரொம்ப அனுபவிச்சிருக்குற..!!” அசோக்கின் தோளை பிடித்து அமுக்கியவாறே சொன்னான் வேணு.

“ஆமாம் மச்சி.. நீயே செலக்ட் பண்ணு..!!” வேணுவை ஆமோதித்தான் சாலமனும்.

“என்னடா…?? உனக்கு ஓகே வா..??” அசோக்கிடம் கேட்டான் கிஷோர்.

“ம்ம்.. நோ ப்ராப்ளம்..!!”

அசோக் சம்மதித்ததும், கிஷோர் இப்போது தன் தலையை நைன்ட்டி டிக்ரீ இடது பக்கமாக திருப்பினான்..!! மிக மிக பொறுமையாக தனது தலையை சுழற்றி.. அந்த ஃபுட்கோர்ட்டில் அலைந்து திரிந்த, அமர்ந்து உண்கிற பெண்களை.. ஒவ்வொருவராக கவனமாக பார்த்துக் கொண்டே வந்தான்..!!

“ஏய்.. பாத்துடா.. கல்யாணம் ஆன ஆன்ட்டி.. பல்லு போன பாட்டிலாம் செலக்ட் பண்ணிட போற.. அதுலாம் நம்மால முடியாது..!!” அசோக் கிண்டலாக சொன்னான்.

“ஹேய் தெரியுண்டா.. நீ மூடு…!!” பெண்கள் மீதிருந்த பார்வையை விலக்காமலே கிஷோர் சொன்னான்.

“அப்புறம் இன்னொரு மேட்டரு..”

“என்ன…??”

“என் மேல இருக்குற கடுப்புல ஏதாவது சப்பை ஃபிகரை செலக்ட் பண்ணிடாத.. என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி.. பொண்ணு அப்படியே பட்டாசா.. சூப்ப்ப்பர் ஃபிகரா இருக்கணும்..!!”

“கவலையே படாத மச்சி…!! சூப்ப்ப்பர் ஃபிகர்தான் உனக்கு சூப்ப்ப்பரா சூப்பு குடுப்பா.. சூப்பர் ஃபிகரே செலக்ட் பண்ணித் தர்றேன் உனக்கு..!!”

மேலும் கால் நிமிடம் ஆனது..!! கொஞ்சம் கொஞ்சமாய் சுழன்று கொண்டே வந்த கிஷோரின் பார்வை.. அவனுக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கின் பின்புறமாக வந்ததும்.. அப்படியே நின்றது..!! அவனுடைய முகத்தில் இப்போது ஒருவித திருப்தி பரவியது..!! ‘சட்’ என்று விரலை ஒருமுறை சொடுக்கினான்..!! ஆட்காட்டி விரலால் அசோக்கின் பின்பக்கமாக சுட்டிக்காட்டி..

“அவ..!!” என்றான்.

உடனே மற்ற மூவரும் அடித்துப் பிடித்துக்கொண்டு அவனுடைய விரல் காட்டிய திசையில் திரும்பினார்கள். அந்த திசையில் இருந்த ஐம்பத்து சொச்ச பெண்களையும், பரபரவென பார்வையால் அலசினார்கள். ‘ஏய்.. யாருடா.. யாருடா…’ என்று ஆளாளுக்கு குழப்பமாய் கேட்டார்கள்.

“அவடா.. தனியா நடந்து வர்றா பாரு.. ப்ளாக் டி-ஷர்ட்.. ஷோல்டர் பேக்..!!”

கிஷோர் சொன்னதும் அசோக்கின் பார்வை ‘சர்ர்ர்ர்’ என்று மற்ற பெண்களை ஃபில்டர் செய்தது..!! அந்த ப்ளாக் டி-ஷர்ட் பிம்பத்தை தேடி கண்டுகொண்டு.. ‘ஜிவ்வ்வ்’ என்று ஜூம் செய்தது..!! ஜூம் செய்ததுமே அசோக் இன்ஸ்டண்டாய் ஒரு இன்ப அதிர்ச்சியில் திளைக்க ஆரம்பித்தான்..!! நடப்பது கனவா நனவா என்று நம்ப முடியாமல் திகைத்தான்..!!

அவள்.. அந்தப்பெண்.. நேற்று இரவு இதே இடத்தில் சந்தித்தானே.. அவள்..!! இவனுடைய கனவில் வந்து கங்கனம் ஸ்டைல் டான்ஸ் ஆடினாளே.. அவள்..!! ‘யாருமே உன்னை அட்ராக்ட் பண்ணினதில்லையா’ என்று அம்மா கேட்டபோது மனதுக்குள் வந்து போனாளே.. அவள்..!! பளிச்சிடும் பால்நிலா முகத்துடனும்.. பளபளக்கிற செர்ரிப்பழ உதட்டுடனும்.. காதில் வளையம் அசைந்தாட.. காற்றில் கார்குழல் அலைபாய.. கழுத்துக்கு கீழே கவர்ச்சித் திமிறலும்.. இடுப்புக்கு கீழே இருகுட வீணையுமாய்.. அழகு மொத்தைத்தையும் அபகரித்துக் கொண்டவள் போல.. அரபுக்குதிரை எனவே அடியெடுத்து நடந்து வந்தாள்..!!

‘என்ன ஒரு ஆச்சரியம் இது..?? என் மனதில் ஏற்கனவே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தவளை.. கிஷோரின் விரல் எப்படி சரியாக சுட்டிக் காட்டுகிறது..?? இவள்தான் எனக்காக விதிக்கப்பட்டவளோ..?? ‘அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..’ என்று அம்மா சொன்னாளே.. இவள்தான் அவளோ..?? உண்மைதானா..?? இறைவன் எனக்கே எனக்கென அனுப்பி வைத்தவள் இவளேதானா..?? இத்தனைநாள் நான்தான் இமை திறந்து பாராமலே இருந்தேனா..??’

“என்னடா மச்சி.. பேச்சையே காணோம்..?? ஆளு எப்படி..??” கிஷோரின் கேள்விக்கு அசோக் பதில் சொல்வதற்கு முன்பே,

“மச்சீஈஈ… செம்ம்மயா இருக்குறாடா..!!!” ஜொள்ளு விட்டவாறு சொன்னார்கள் சாலமனும் வேணுவும். அசோக் சட்டென கடுப்பானான்.

“தலையை திருப்புங்கடா தறுதலைங்களா.. தங்கச்சி முறை ஆவுது அவ உங்களுக்கு..!!”

என்றவாறு அசோக் அவர்கள் இருவரது தலையையும் பிடித்து வலுக்கட்டாயமாக திருப்பினான். அசோக்கின் வார்த்தையில் இருந்த உண்மை உறைக்கவும், சாலமனும் வேணுவும் முகம் வாடிப் போனார்கள். இப்போது அசோக்கும் திரும்பி அமர்ந்தான். கிஷோர் அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி அவனிடம் கேட்டான்.

“என்னடா.. ஓகேவா..??”

“ம்ம்… டபுள் ஓகே..!!” அசோக் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சாலமன் ஒரு சந்தேகத்தை கிளப்பினான்.

“மச்சி.. எனக்கு ஒரு டவுட்டு..!!”

“என்னடா..??” கிஷோர் கேட்டான்.

“அவளை பாத்தா காலேஜ் பொண்ணு மாதிரிதான் இருக்குது.. எப்படியும் கல்யாணம்லாம் ஆகிருக்காது..!! ஆனா.. அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தான்னா..?? ஏன் கேக்குறேன்னா.. இப்படி லட்டு மாதிரி இருக்குறவளுகளைலாம்.. இவ்வளவு நாளு எவனும் விட்டு வைக்க மாட்டானுக மச்சி..!! அல்ரெடி ஒரு அம்பது பேராவது அப்ளிகேஷன் போட்ருப்பானுக.. அதுல ஏதாவது ஒரு அப்ளிகேஷனுக்கு அவ அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்திருந்தா..??” சாலமனின் சந்தேகத்தை கிஷோர் கேஷுவலாக தீர்த்து வைத்தான்.

“ஸோ வாட்..?? அப்பாயின்ட்மன்ட் ஆர்டர் குடுத்தவனுக்கு டிஸ்மிஸ் ஆர்டர் வாங்கிக் குடுக்குறது.. நம்ம பையனுக்கு ஒரு எக்ஸ்ட்ரா வொர்க்… அவ்வளவுதான்..!!”

“என்னடா சொல்ற..??”

“ஆமாம்..!! சப்போஸ் அவ வேற யாரையாவது லவ் பண்ணிட்டு இருந்தா.. இவன் அந்த லவ்வை எப்படியாவது கெடுத்து நாசமாக்கி.. அவளுக்கு இவன் மேல புதுசா லவ் வரவைக்கனும்.. அதுதான் தில்லு..!! எப்புடி..?? ம்ம்ம்ம்… என்னடா.. டீல் ஓகேதான..??”

கிஷோர் அசோக்கை பார்த்து மீண்டும் கேட்டான். அல்ரெடி அந்தப்பெண்ணுடன் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்திருந்த அசோக், எங்கேயோ ஆகாயத்தை வெறித்தவாறே சொன்னான்.

“ஹ்ஹ.. நான் டீல்க்கு ஓகே சொல்லி ரொம்ப நேரம் ஆச்சு மச்சி..!!”

“அப்புறம்..??” கிஷோர் கேட்க,

“அப்புறம் என்ன..??” அசோக் திருப்பி கேட்டான்.

“போ.. போய் வேலையை ஆரம்பி.. அவ கூட போய் பேசு.. போ..!!”

“இப்போவேவா..??” அசோக் அப்பாவியாய் கேட்க, கிஷோர் இப்போது கிண்டலாக சொன்னான்.

“டேய்.. அவ என்ன உன் பக்கத்து வூட்டு ஆயான்னு நெனச்சியா..?? நெனச்சப்பலாம் போய் கடலை போட்டு வர்றதுக்கு..?? இன்னும் பத்து நிமிஷத்துக்கப்புறம் அவ எங்க இருப்பான்னே நம்ம யாருக்கும் தெரியாது.. இனிமே அவளை லைஃப்ல திரும்ப மீட் பண்ணுவமான்னும் தெரியாது..!! யூ.. பெட்டர் ஸ்டார்ட் நவ்..!!”

கிஷோரின் கிண்டலில் இருந்த உண்மை அசோக்கை சுருக்கென்று குத்தியது. ‘உண்மைதான்.. இனி இவள் என் வாழ்வில் திரும்ப வருவாள் என்று என்ன நிச்சயம்..?? இன்றே இவளை இம்ப்ரஸ் செய்தாக வேண்டும்.. அவளுடய தொடர்பு விவரங்கள் அறிந்தாக வேண்டும்.. தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் தவறுதான்.. கிளம்பு அசோக்..!!’

அசோக் இப்போது பட்டென சேரில் இருந்து எழுந்து கொண்டான். ‘ஆல் தி பெஸ்ட் மச்சி..’ என்ற நண்பர்களை அலட்சியம் செய்தவாறு திரும்பி நடந்தான். அந்த தேவதையை குறி வைத்து விறுவிறுவென நகர்ந்தான். அவளோ விம்மிய மார்புகள் கிடுகிடுக்க நடைபோட்டு, இவனுக்கு நேர் எதிரே வந்து கொண்டிருந்தாள். இருவருக்கும் இடையில் ஒரு ஐந்தடிதான் இடைவெளி என்கிற நிலையில் அவள் திடீரென நின்றாள். சட்டென இடது பக்கம் திரும்பி நடந்தாள். அதை எதிர்பாராமல் ஒருகணம் திணறிய அசோக், பிறகு சமாளித்துக்கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவள் ஒரு பிஸ்ஸா ரெஸ்டாரன்ட் கவுன்ட்டர் நோக்கி சென்றாள். ஆர்டர் கொடுப்பதற்காக அல்ரெடி காத்திருந்த இருவருடன் மூன்றாவது ஆளாக சேர்ந்து கொண்டாள். அவளுக்கு அடுத்து, தான் இடம்பிடிக்க வேண்டும் என்று எண்ணிய அசோக்கும், அவசரமாக அவளை நோக்கி நகர்ந்தான். ஆனால் இவன் க்யூவில் சென்று நிற்பதற்குள், இடையில் இன்னொரு இடியட் வந்து புகுந்து கொண்டான். அசோக் ‘ச்ச..!!’ என்று வெறுப்பாக ஒரு சலிப்பை உதிர்த்தான்.

இடையில் நின்ற அந்த இடியட்டையும் மீறி, அவளுடைய மேனி நறுமணம் அசோக்கை தாக்கியது. ஒருவித மயக்கத்தை அவனுக்கு உண்டு பண்ணியது. கருகருவென மினுமினுத்த அவளது கூந்தல் வனப்பும், காதில் குலுங்குகிற அந்த பிளாஸ்டிக் வளையங்களுமே அவனுடைய மனதை கிறங்கடித்தன. ஒருமுறை பின்னால் திரும்பி நண்பர்களை பார்த்தான். அவர்கள் இவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘அவளிடம் பேசு.. பேசு..’ என்பதுபோல சைகை செய்தனர்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments