அன்புள்ள ராட்சசி – பகுதி 30

அத்தியாயம் 16

அடிவயிற்றில் சென்ஸார் தாங்கியிருந்த அந்த நீர்க்குழாய்.. அசோக்கின் கைகள் குறுக்காக வந்ததுமே.. சரியாக புரிந்துகொண்டு சர்ரென நீர்க்கற்றையை கொட்டியது..!! கைகளை முதலில் கழுவிக்கொண்ட அசோக்.. பிறகு கழுவிய கைகளில் கொஞ்சமாய் நீர் தேக்கி.. வாயும் கொப்பளித்துக் கொண்டான்..!! டிஷ்யூ பேப்பர் உருவி, கைகளை துடைத்துக்கொண்டே.. கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை கவனமாக பார்த்தான்..!! சற்றே கலைந்து ஒதுங்கியிருந்த முடிக்கற்றையை.. கைவிரல்களாலேயே ஒழுங்கு படுத்திக் கொண்டான்..!! சுருட்டப்பட்ட டிஷ்யூ பேப்பரை டஸ்ட் பின்னில் எறிந்துவிட்டு.. விருட்டென வாஷ்ரூம் கதவு திறந்து வெளியேறினான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

மாலைநேரம் அது.. மஞ்சள்நிற நியான் விளக்குகளை ஸீலிங்கில் தாங்கிய காரிடார் அது.. கால்களை கவ்வியிருந்த கேன்வாஸ் ஷூ, டைல்ஸ் தளத்தில் அழுந்தி ‘டக்.. டக்..’ என சப்தம் எழுப்ப.. கைவிரல்கள் கோர்த்து சொடுக்கெடுத்தவாறே அசோக் மெல்ல நடந்தான்..!! சிறிது தூரம் நடந்து இடப்பக்கம் திரும்பியதுமே.. ஃபுட்கோர்ட்டின் அந்த விஸ்தாரமான மையப்பகுதி பார்வைக்கு வந்தது..!! தூரத்தில் மீரா தெரிந்தாள்.. அவள் வழக்கமாக அமர்கிற அதே டேபிளில்.. கைகள் ரெண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு.. அவளை நோக்கி நடந்து செல்கிற இவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு எதிரே கிடந்த சேரில் சென்று இவன் அமர்ந்ததுமே.. அவளை ஏறிட்டு அவசரமாக சொன்னான்..!!

“ம்ம்.. சாப்பிட்டும் முடிச்சாச்சு.. இப்போவாவது சொல்லு..!!”

“ஜூஸ் இன்னும் மிச்சம் இருக்கே..??”

மீரா கூலாக டேபிளை கைகாட்ட, அசோக் இப்போது அவளுடைய முகத்தை கூர்மையாக பார்த்து ஒரு முறை முறைத்தான். ‘ஹ்ம்ம்..’ என்று ஒரு சலிப்பு மூச்சு விட்டுக்கொண்டான். பிறகு ஜூஸ் தம்ளர் எடுத்து, கடகடவென மொத்த ஜூஸையும் ஒரே மடக்கில் அருந்தி முடித்தான். காலியாகிப்போன கண்ணாடி தம்ளரை ‘படார்’ என்று டேபிளில் வைத்தவாறு, பொறுமையற்றவனாய் கேட்டான்.

“ம்ம்.. போதுமா..? ஜூஸும் ஓவர்..!! இப்போ சொல்லு..!!”

“என்ன சொல்லனும்..??” அவள் குரலில் தெரிந்த ஒரு விளையாட்டுத்தானம் அசோக்கை இப்போது எரிச்சலாக்கியது.

“ப்ச்.. வெளையாடாத மீரா..!! காலைல இருந்து நானும் திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்குறேன்.. நீயும் சும்மா சும்மா பேச்சை மாத்துறதுலயே குறியா இருக்குற.. நான் கேட்டதுக்கு இதுவரை பதிலே சொல்லல..!! இப்போ வந்து ஒன்னுந்தெரியாத மாதிரி ‘என்ன சொல்லனும்’னு கேட்டா என்ன அர்த்தம்..?? என்னைப் பாத்தா எப்படி தெரியுது உனக்கு..??”

“ம்ம்..?? ஜூஸ் சாப்பிட்டுட்டு.. வாயை தொடைக்காதவன் மாதிரி தெரியுது..!!”

குறும்பாக சொன்ன மீரா, கையிலிருந்த அவளுடைய கர்ச்சீஃபை அசோக்கின் வாய்க்கருகே கொண்டு செல்ல, அவன் அவளுடைய கையை பட்டென தட்டி விட்டான். தனது புறங்கையாலேயே உதட்டை துடைத்துக்கொண்டவன், சற்றே எரிச்சலான குரலில்..

“Be serious Meera.. Please..!!” என்றான்.

மீராவோ அவனுடைய எரிச்சலை கண்டுகொள்ளாமல் கர்ச்சீஃபை பேகுக்குள் திணித்தாள். மணிக்கட்டு திருப்பி வாட்ச் பார்த்தாள். அவளுடைய அலட்சியமான நடவடிக்கையில், அசோக் மேலும் டென்ஷன் ஆனான்.

“ப்ச்.. நான் இங்க சீரியஸ்னு சொல்லிட்டு இருக்குறேன்.. நீ என்ன அங்க கூலா மணி பாத்துட்டு இருக்குற..??” அசோக் அவ்வாறு எரிச்சலாக கேட்கவும், இப்போது மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு கூர்மையாக பார்த்தாள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற..??”

“டென்ஷன் ஆகாம..?? நீ பண்ற வேலைலாம் எனக்கு எப்படி இருக்கு தெரியுமா.. அப்படியே தலையை பிச்சுக்கலாம் போல இருக்கு..!! கொஞ்ச நாளாவே நீ ஒன்னும் சரியில்ல மீரா.. ரொம்ப மாறிட்ட..!! நீ ஏன் இப்படிலாம் நடந்துக்குறேன்னு எனக்கு சுத்தமா புரியல..!! எங்கிட்ட நெறைய பொய் சொல்றேன்னு தோணுது.. எதையோ எங்கிட்ட இருந்து மறைக்கிறன்னு தோணுது..!! நேத்து நீ அப்படி நடந்துக்கிட்டதுக்கப்புறம்.. என் மனசுல இருந்த அந்த டவுட் இப்போ கன்ஃபார்மே ஆயிடுச்சு..!!”

படபடவென சொன்ன அசோக்.. சற்றே நிறுத்தி.. தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தான்..!! அருகில் வேறு யாரும் இல்லை என்பதை அவ்வாறு உறுதி செய்து கொண்ட பின்பும்.. குரலை சற்று தணித்துக்கொண்டேதான் அதற்கு மேல் தொடர்ந்தான்..!!

“நேத்து ஏன் மீரா அப்படி பிஹேவ் பண்ணின.. கிஸ் பண்ற வரை அப்படியே கம்முனு இருந்துட்டு.. அப்புறம் ஏன் என்னை தள்ளிவிட்ட..?? எதுக்கு திடீர்னு அழுத..??”

அசோக்கின் கேள்விக்கு மீரா அமைதியையே பதிலாக தந்தாள். அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவன் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே, ஒருவித ஆதங்கத்துடன் பார்த்தான். அப்புறம் ஒரு பெருமூச்சுடன் பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு, சற்றே சலிப்பான குரலில் சொன்னான்.

“நீ பாட்டுக்கு திடீர்னு அழுதுட்டு ஓடிட்ட.. வீட்ல எல்லாரும் என்னைப்போட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க தெரியுமா.. ‘மீரா எதுக்கு அதுக்குள்ள கெளம்பிட்டா.. என்ன ஆச்சு அவளுக்கு.. அவ மூஞ்சியே சரி இல்லயே.. உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சினையா.. என்ன பண்ணின அவளை..??’ அப்டி இப்டின்னு.. ஆளாளுக்கு பாடாபடுத்திட்டாங்க..!! ‘அவளுக்கு ஒரு கால் வந்தது.. அர்ஜன்ட் வொர்க்னு சொல்லிட்டு கெளம்பிட்டா..’ அப்டின்னு நான் சொன்னதை யாருமே நம்புற மாதிரி இல்ல..!! திரும்ப திரும்ப ‘நீ என்ன பண்ணின அவளை.. நீ என்ன பண்ணின அவளை..’ன்னு.. கேள்வி மேல கேள்வி..!!”

“சொல்ல வேண்டியதுதான..?? ‘அவளை தனியா ரூமுக்கு தள்ளிட்டு போய் கிஸ் அடிச்சேன்.. அதுல மெரண்டு போய் ஓடிட்டா..’ன்னு..??” மீராவின் குரலில் ஒரு குறும்பு.

“என்ன.. நக்கலா..?? இங்கபாரு.. நேத்து கிஸ் பண்ணினது உனக்கு பிடிக்கலன்னு மட்டும் பொய் சொல்லாத.. அதை நான் நம்ப மாட்டேன்..!! நீ எவ்வளவு ஆசையா என்கூட கோவாப்ரேட் பண்ணினேன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!! பண்றதெல்லாம் பண்ணிட்டு.. அப்புறம் ஏன் அப்படி பிஹேவ் பண்ணின.. தேவையில்லாம எதுக்கு அழுத..?? அப்புறம்.. அது என்னது.. ஆங்ங்.. ‘நீ கிஸ் பண்ணினது தப்பு இல்ல.. நான் கிஸ் பண்ணினதுதான் தப்பு’ன்னு சொன்னியே.. அதுக்கு என்ன அர்த்தம்..?? நீ பண்ணினா என்ன.. நான் பண்ணினா என்ன.. கிஸ் ஒன்னுதான..?? அதுல என்ன என் மேல தப்பு இல்ல.. உன் மேல மட்டும் தப்பு..??”

“ம்ம்.. கேள்விலாம் அவ்வளவுதானா.. இல்ல.. இன்னும் இருக்கா..??”

“இப்போதைக்கு இவ்வளவுதான்..!! இதுக்கு நீ மொதல்ல பதில் சொல்லு.. மிச்ச கேள்விலாம் அப்புறம் நான் கேக்குறேன்..!!”

“ஹ்ம்ம்.. சொல்றேன்..!!”

இறுக்கமான குரலில் சொன்ன மீரா, அசோக்கிடம் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அந்த டேபிளுக்கு பக்கவாட்டில் இருந்த கண்ணாடி தடுப்பின் வழியே, வெளியுலகத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். தனது கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லப் போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன், அசோக் அவளுடைய முகத்தையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். வேகமாய் பறக்கிற வாகனங்களையும், வெட்டிப் பரபரப்புடன் அலைகிற மனிதர்களையுமே, சிறிது நேரம் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த மீரா, பிறகு அசோக்கிடம் திரும்பி திடீரென கேட்டாள்.
“இந்த டேபிள் நமக்கு ரொம்ப ஸ்பெஷல்.. இல்ல அசோக்..??”

“வாட்..??” அசோக் சற்றே குழப்பமாய் நெற்றி சுருக்கினான்.

“நீ மொதமொதலா எங்கிட்ட பேச வந்தப்போ.. நான் இதே இடத்துலதான் உக்காந்திருந்தேன்..!! நாம ரெண்டு பேரும் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டதும்.. இதே டேபிள்லதான்..!! அதுக்கப்புறம் எத்தனையோ தடவை.. இங்க உக்காந்து ரெண்டு பேரும் பேசிருக்கோம்.. கதையடிச்சிருக்கோம்.. ஒருத்தரை பத்தி ஒருத்தர் நெறைய தெரிஞ்சிட்ருக்கோம்..!! அப்போ நமக்கு இந்த டேபிள் ரொம்ப ஸ்பெஷல்தான..??”

“ம்ம்.. ஸ்பெஷல்தான்..!!” அசோக் ஒரு சிறு குழப்பத்துடனே மெலிதாக புன்னகைத்தான்.

“முன்னாடிலாம் என்ன பண்ணுவேன் தெரியுமா.. ஐ மீன்.. நாம மீட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி..??”

“என்ன பண்ணுவ..??”

“எப்போ இங்க சாப்பிட வந்தாலும்.. இதே டேபிள்தான் சூஸ் பண்ணுவேன்..!! இங்க உக்காந்து சாப்பிடுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்.. தனியா வந்து உக்காந்துகிட்டு.. அப்படியே வெளில வேடிக்கை பாத்துக்கிட்டு.. கொஞ்சம் கொஞ்சமா சாப்பாடு அள்ளி வாய்ல போட்டுக்கிட்டு.. ஹ்ஹ.. ஒருமணி நேரத்துக்கு மேல உக்காந்து.. உலகத்தை மறந்து சாப்பிட்டுட்டு இருப்பேன்.. தெரியுமா..??”

“ம்ம்.. ஞாபகம் இருக்கு.. கவனிச்சிருக்குறேன்..!!”

“ஃபுட்கோர்ட் உள்ள என்டர் ஆகுறப்போவே.. இந்த டேபிள் காலியா இருக்கான்னுதான் மொதல்ல பார்ப்பேன்.. காலியா இருந்தா, நேரா போய் சாப்பாடு வாங்கிட்டு.. இங்க வந்து உக்காந்துக்குவேன்..!! சப்போஸ் வேற யாராவது இங்க உக்காந்திருந்தா.. சாப்பாடு வாங்க மாட்டேன்.. அங்க எங்கயாவது காலியா இருக்குற டேபிள்ள சும்மா உக்காந்துக்கிட்டு.. இந்த டேபிள் காலியாகுற வரை வெயிட் பண்ணுவேன்..!! அப்புறம் இங்க இருக்குறவங்க எந்திரிச்சதும்.. சாப்பாடு வாங்கிட்டு வந்து இங்க உக்காந்துக்குவேன்..!! அந்த அளவுக்கு எனக்கு இந்த டேபிள் ரொம்ப பிடிக்கும்..!!”

மீரா சொல்லிக்கொண்டே போக, அவ்வளவு நேரம் கன்னத்தில் கைவைத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்த அசோக், இப்போது சற்றே கவலையான குரலில் கேட்டான்.

“ஹ்ம்ம்.. ஒரு டேபிளுக்கு இவ்வளவு பில்டப்பா..??”

“ஏன்.. அதுல ஏதாவது தப்பா..??”

“இல்ல.. தப்புலாம் ஒன்னுல்ல.. இருக்கவேண்டியதுதான்..!! ஆனா.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம.. ஏதேதோ சொல்லிட்டு இருக்கியேன்னுதான் எனக்கு எரிச்சலா இருக்கு..!!”

“ஹாஹா.. ஆமால்ல.. சம்பந்தமே இல்லாம லூஸு மாதிரி உளறிட்டு இருக்கேன்ல..??” மீரா உதடுகள் பிரித்து அழகாக புன்னகைத்தாள்.

“தெரிஞ்சா சரி..!! ஹ்ஹ்ம்ம்.. இன்னும் நான் கேட்டதுக்கு பதில் வரல..!! எப்போ சொல்ற மாதிரி ஐடியா..??”

“ஹாஹா.. சொல்றேன்..!! இங்க வா..!!”

“எங்க..??”

“இங்க வா.. இங்க வந்து என் பக்கத்துல உக்காந்துக்கோ.. வா..!!” மீரா தனக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையை, கையால் தட்டிக்காட்டியவாறே சொன்னாள்.

“நீ மொதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லு.. அதுக்கப்புறம் நான் அங்க வரேன்..!!”

“ப்ச்.. வாடா..!! நான்தான் எல்லாம் சொல்றேன்றன்ல..? வா.. பக்கத்துல வா..!!”

அசோக்கை நோக்கி ஒருகையை நீட்டி, மீரா அவ்வாறு சொல்லிய விதத்தில், ஒருவித அசாத்திய ஏக்கமும் கிறக்கமும் கலந்திருந்தது. அவளுடைய கருவிழிகள் எறிந்த காதல்க்கணைகள், அசோக்கின் கண்களில் பாய்ந்து அவனது இதயத்தை துளைத்தன. அதற்கு மேலும் மறுப்பு தெரிவிக்க மனம் இல்லாதவனாய், அசோக் மெல்ல எழுந்தான். அவளருகே சென்று அமர்ந்து கொண்டான். அவன் அமர்ந்ததுமே, மீரா தனது இடது கையால் அவனுடைய இடுப்பை வளைத்துக் கொண்டாள். அவனை தன்னோடு இறுக்கிக்கொண்டவள், அருகில் யாராவது இருக்கிறார்களா என்ற கவலை கூட இல்லாமல், அவனது கன்னத்தோடு தனது கன்னத்தை சேர்த்துக்கொண்டாள். வலது கையிலிருந்த தனது செல்ஃபோனை உயர்த்தி, ‘பளீர்’ என ஃப்ளாஷ் அடிக்க, படம் எடுத்துக் கொண்டாள்.

மீரா அன்று முழுதுவதுமே அப்படித்தான்..!! காலை பத்து மணியில் இருந்து அசோக்குடன் சுற்றி அலைகிறாள்.. என்றும் இல்லாத அதிசயமாய் இன்று அநியாயத்திற்கு அவனுடன் இழைகிறாள்.. அவ்வப்போது தனது செல்ஃபோனால் இருவரையும் படம் எடுத்துக் கொள்கிறாள்..!!

“என்னாச்சு உன் பாலிஸிக்கு.. ஃபோட்டோஸ்லாம் எடுத்துக்குற..?? எப்போவும்.. ‘சின்ன ஃப்ரேமுக்குள்ள சிக்கிக்கிறதுக்கு எனக்கு பிடிக்காது’ன்னு சொல்வ..??” என்று அசோக் ஆச்சரியமாக கேட்டபோது,

“உன்கூட சேர்ந்து சிக்கிக்கிறதா இருந்தா.. இந்த சின்ன ஃப்ரேம் கூட எனக்கு சொர்க்கலோகம் மாதிரிதான்..!!” என்று கவிதையாக பேசினாள்.

ஆனால்.. தனது மனதில் இருக்கிற குழப்பத்தை பற்றி மட்டும் அவன் பேச்செடுத்தால்.. சரியான பதில் சொல்லாமல், சம்பந்தமில்லாமல் பேசி.. அவனை அலைக்கழிக்கிறாள்..!!

இப்போது.. ஃபோட்டோ எடுத்து முடித்ததும்.. எப்படி வந்திருக்கிறது என தனது செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்த மீரா.. முகத்தில் ஒரு புன்சிரிப்புடனும், குரலில் ஒரு குறும்புடனும்..

“கொஞ்சமாவது சிரிச்சிருக்கானா பாரேன்.. மூஞ்சியை அப்படியே உர்ருன்னு வச்சிருக்கான்.. உர்ராங்குட்டான் மாதிரி..!!” என்றாள்.

“நான் கேட்டதுக்குலாம் நீ பதில் சொல்ற வரைக்கும், நான் இப்படித்தான் இருப்பேன்.. போ..!!”

அசோக்கின் குரலில் ஒரு உச்சபட்ச உறுதி தெரிந்தது. இன்று எப்படியாவது இவளை பேச வைத்துவிடவேண்டும் என்ற தீவிரம் தெரிந்தது. மலர் உதடுகளில் ஒரு மயக்கும் புன்னகையுடன், மீரா அசோக்கின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சேரில் இருந்து எழுந்தவாறே..

“ஹ்ம்ம்.. கெளம்பலாம் வா..!!” என்றாள். உடனே அசோக் கடுப்பாகிப் போனான். அவள் முகத்தை ஏறிட்டு சீற்றமாக கேட்டான்.

“என்ன நெனச்சுட்டு இருக்குற உன் மனசுல..?? நானும் காலைல இருந்து பைத்தியக்காரன் மாதிரி கேட்டுட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா… சும்மா சும்மா..”

“ஷ்ஷ்ஷ்.. நான்தான் சொல்றேன்னு அப்போவே சொல்லிட்டன்ல..??”

“சொல்றேன் சொல்றேன்னுதான் காலைல இருந்து சொல்லிட்டு இருக்குற.. ஆனா சொல்ற மாதிரி தெரியல..!! எனக்கு இப்போவே தெரிஞ்சாகனும் மீரா.. உன் மனசுல என்னலாம் இருக்குன்னு, இன்னைக்கு எனக்கு தெளிவா தெரிஞ்சாகனும்.. இல்லனா எனக்கு தலையே வெடிச்சிடும்..!! உக்காரு.. சொல்லிட்டு கெளம்பு..!!”

“ப்ச்.. சொல்றேன்டா..!! ஆனா இங்க வேணாம்..!!”

“வேற எங்க..??”

“எனக்கு மனசு விட்டு நெறைய விஷயம் பேசனும்.. அதுக்கு இந்த இடம் சரியில்ல..!! வேற எங்கயாவது தனியா.. டிஸ்டர்ஃபன்ஸ் இல்லாத எடத்துக்கு போயிடலாம்..!!”

“எங்க போகலாம்ன்ற..??”

“இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல.. அங்க போயிடலாம்..!!”

அசோக் சிலவினாடிகள் அவளுடைய முகத்தையே பார்த்தவாறு யோசனையில் இருந்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவனாய் சேரில் இருந்து எழுந்தான்.

“போலாம் வா..!!’ என்றுவிட்டு முன்னால் நடந்தான்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கெல்லாம்.. அசோக்கின் பைக் சத்யா கார்டன் நோக்கி மிதமான வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது..!! என்றும் அசோக்கின் தோளைப் பற்றிக் கொள்கிற மீரா.. இன்று அவனுடைய இடுப்பில் கைபோட்டு இறுக்கியிருந்தாள்.. அவனுடைய முதுகில் முகம் சாய்த்து படுத்திருந்தாள்..!! வாகனங்களுக்கு இடையில் புகுந்து வண்டியை செலுத்திக்கொண்டிருந்த அசோக்.. தன் இடையை வளைத்திருக்கிற காதலியின் வளைக்கரத்தை சற்றே பெருமிதமாக பார்த்தான்..!! தான் உருவாக்கிய விளம்பரப்படம் சட்டென அவனுடைய நினைவுக்கு வந்தது.. அவனது மனதில் இருந்த குழப்பம் எல்லாம் அந்த கணத்தில் மறந்து போக.. உள்ளமெங்கும் ஒரு உற்சாக ஊற்று பீறிடுவதை அவனால் உணர முடிந்தது..!! அடக்க முடியாத புன்னகையை அதரங்களுக்கு தந்தவன்.. அழகு கொஞ்சும் அவளது முகத்தை கண்ணாடியில் தேடினான்..!! அவனுடைய முதுகில் புதைந்திருந்த மீராவின் முகம்.. அந்த கண்ணாடியில் காணக் கிடைக்கவில்லை..!!

அசோக்கின் முகம் பூரிப்பில் திளைத்துக்கொண்டிருந்த அதே நேரம்.. அவனது பின்புறம் படர்ந்திருந்த மீராவின் முகம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது..!! அவளுடைய கண்களில் கண்ணீர் தழும்பிக் கொண்டிருந்தது.. பார்வை ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்தது.. மூக்கு சப்தமெழுப்பாமல் விசும்ப.. உதடுகள் கட்டுக்கடங்காமல் படபடத்தன..!! தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாகி.. தத்தளிப்பவள் போல காணப்பட்டாள்..!! அடிக்கடி ஒற்றைக்கையால் கண்களை துடைத்துக்கொண்டவள்.. அவ்வப்போது அசோக்கே உணராதவண்ணம், அவனது முதுகில் மென்மையாக முத்தம் பதித்தாள்..!! ஆகாயத்தில் ஒரு பருந்து.. சிறகசைத்து பறந்து.. அவர்கள் செல்கிற திசையிலேயே விரைந்தது..!!

சத்யா கார்டனை அடைவதற்கு சற்று முன்பாக.. ராஜமன்னார் சாலையில் இருந்து வலது புறம் திரும்பி.. கொஞ்ச தூரம் சென்றதுமே வந்து சேர்ந்தது அந்த பூங்கா..!! வாசலில் நின்றிருந்த ஒன்றிரண்டு வண்டிகளுடன்.. தனது பைக்கையும் நிறுத்தி ஸ்டாண்ட் இட்டான் அசோக்..!! முகத்தை இப்போது சுத்தமாக துடைத்து முடித்து.. இயல்பான பாவனையுடன் இறங்கிக்கொண்டாள் மீரா..!!

“ம்ம்.. பார்க் வந்துடுச்சுல.. சொல்லு..!!” அவசரப்பட்டான் அசோக்.

“உள்ள போய் பேசலாம் வா..!!” மீரா லேசாக மூக்கை உறிஞ்சியவாறே சொன்னாள்.

“சரி.. உன் செல்ஃபோனை கொஞ்சம் கொடேன்..!!”

“எதுக்கு..??”

“நெறைய ஃபோட்டோஸ் எடுத்தேல.. எப்படி வந்திருக்குன்னு பாக்குறேன்..!!” அசோக் அவ்வாறு கேட்கவும், முதலில் ஓரிரு வினாடிகள் தயங்கிய மீரா, பிறகு

“ம்ம்..!!” என்று தனது செல்ஃபோனை அசோக்கின் கையில் திணித்துவிட்டு முன்னால் நடந்தாள். அசோக் அவளை பின்தொடர்ந்தான்.

அதிகமாக பராமாரிக்கப்படாமல் போனாலும்.. இழைதழைகள் இறைந்துபோய் காணப்பட்டாலும்.. ஒழுங்கில்லாமல் வளர்ந்திருந்த செடிகொடிகளோடும்.. அந்த மாலை நேரத்திற்கு மிக ரம்யமாகவே காட்சியளித்தது அந்த பூங்கா..!! ஆங்காங்கே தெரிந்த மரப்பெஞ்சுகளின் பழுப்பு நிறம் தவிர.. எங்கெங்கிலும் மர,செடி,கொடிகளின் பச்சை நிறமே..!! அவ்வப்போது கேட்கிற காகங்களின் கரைதலை தவிர.. அமைதியே முழுநேரமும் ஆக்கிரமித்திருந்தது..!! புதர் மறைவில் புதையல் தேடுகிற சில காதலர்களை(????) தவிர.. ஆள் நடமாட்டம் அறவே அற்றுப் போயிருந்தது..!!

காம்பவுண்டை ஒட்டி நீளமாக சென்ற அந்த மண்பாதையில்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு மீரா நடந்து கொண்டிருந்தாள்..!! பாதையின் இருபுறமும்.. கொத்துக்கொத்தாய், பச்சை பச்சையாய் செடிகள்..!! பாதையிலோ.. புற்கள் துளிர்த்திருந்தன.. மரவேர்கள் குறுக்காக ஓடின.. காய்ந்த சருகுகள் மண்டிக் கிடந்தன.. கால்கள் பட்டு அழுந்துகையில் சரக் சரக்கென சப்தம் எழுப்பின..!! மீரா கவனமாகவே நடந்து கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்னால் ஒரு ஐந்தடி இடைவெளிவிட்டு.. மீராவுடையை செல்ஃபோனை விரல்களால் அழுத்தியவாறே அசோக் சென்று கொண்டிருந்தான்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments